என் வயிற்றில் தலைகாணியை வச்சு.. பேசும்போதே அழுத பெண்.. தலை குனிந்த ஆரி.. வா தமிழா வாவில் நெகிழ்ச்சி
சென்னை: கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வா தமிழா வா நிகழ்ச்சியை பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ஆரி அர்ஜுனன் தொகுத்து வழங்கி வருகிறார். அதில் இந்த வாரம் குழந்தை பிறப்பை தள்ளி வைக்கலாமென்றும், தள்ளி வைக்க கூடாது என்றும் விவாதம் நடைபெறுகிறது. அதில் ஒரு பெண் தனக்கு குழந்தை இல்லாத ஏக்கத்தை குறித்து கண்ணீரோடு பேசியது அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்திருக்கிறது.
குழந்தை செல்வம் தான் பெரிய செல்வம் என்பது பலருடைய வாதமாக இருக்கிறது. குழந்தை இருந்தால் தான் கணவன் மனைவியின் தாம்பத்திய வாழ்க்கை முழுமை அடைகிறது என்று பலர் கூறி வருகிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு தாத்தா பாட்டி காலங்களில் எல்லாம் 10, 15 பிள்ளைகள் பெற்று அதை வளர்த்து இருக்கிறார்கள்.

ஆனால் இப்போது பல பேருக்கு குழந்தையின்மை பிரச்சனை இருக்கிறது. ஒரு குழந்தை பிறந்தால் போதும் எங்களுடைய இந்த ஜென்மமே நிவர்த்தி ஆகிவிடும் என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் தற்போதைய அவசர காலகட்டத்தில் ஒவ்வொருவரும் அவர்களை பார்த்துக் கொள்வதே பெரிய கஷ்டமாக இருக்கிறது.
அதில் இன்னொரு குழந்தையை பார்த்துக் கொள்வது பெரிய கஷ்டம் என்று குழந்தை பிறப்பை தள்ளிப் போட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். சிலர் குழந்தை வேண்டாம் என்று கூட கூறி வருகிறார்கள். இந்த நிலையில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் இந்த வாரம் "குழந்தை பிறப்பை தள்ளிப் போடுபவர்களும் அது தவறு என்று விமர்சிக்கிறவர்களும்" கலந்து கொண்டிருக்கிறார்கள். அதில் தற்போது வெளியான ப்ரோமோவில் குழந்தை இல்லாதவர்கள் தங்களுடைய கஷ்டங்கள் குறித்து கண்ணீரோடு பேசி இருக்கிறார்கள்.

அப்போது ஒரு பெண் குழந்தை இல்லாத வலி என்னவென்று எனக்குதான் தெரியும். என்னுடைய வயிற்றில் தலைகாணியை வைத்து... நானே அதை ஒரு குழந்தை போல நினைத்து கொஞ்சி இருக்கிறேன்... இந்த நிலைமை எல்லாம் யாருக்கும் வரக்கூடாது. எனக்கு வயதாகிவிட்டது இனி குழந்தை இருக்குமா? இல்லையா? என்று தெரியவில்லை. ஆனால் வெளியே போகும் இடமெல்லாம் நான் மலடி என்றெல்லாம் சிலர் சொல்கிறார்கள்.
அந்த வார்த்தையை கேட்கும் போதெல்லாம் எனக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும்.. ஒரு குழந்தை இல்லை என்பதை காரணம் காட்டி சிலர் நம்மை ஒதுக்கி வைக்கிறார்கள்... இதுவெல்லாம் வேதனையிம் உச்சம் என்று அந்த பெண் கண்ணீரோடு பேச இதை கேட்டு பதில் எதுவும் பேச முடியாமல் தொகுப்பாளராக இருக்கும் ஆரியும் தலைகுனிந்து இருக்கிறார்.
அதற்கு எதிர்பக்கத்தில் குழந்தை பிறப்பை தள்ளி போடுபவர்களில் இருந்து ஒரு ஆண் பொதுவாக குழந்தை இல்லை என்று பெண்ணை கேள்வி கேட்பது ஆண் ஆதிக்கத்தின் உச்சம் தான் என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இது குறித்து பலரும் கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications