ரகுவரன் இப்படித்தான் இறந்தார்! மரணத்துக்கு காரணம் இதுதான், வெளிப்படையாக பேசிய நெருங்கிய நண்பர் நடிகர் பப்லு
சென்னை : நடிகர் பப்லு சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது நடிகர் ரகுவரன் உடன் தனக்குள்ள நட்பு குறித்து பேசி இருந்தார். அதோடு ரகுவரனின் மரணம் எப்படி நடந்தது என்றும் எமோஷனலாக பப்லு பேசியிருக்கிறார். இருவரும் சிறுவயதில் இருந்தே நண்பர்களாக இருந்தாலும் கடைசி நேரத்தில் ரகுவரனின் நடவடிக்கைகள் குறித்து பப்லு இப்போது வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி விடுவார்கள். அந்த வரிசையில் ஒருவர் தான் நடிகர் பப்லு. தன்னுடைய சினிமா வாழ்க்கையாக இருந்தாலும் சரி குடும்ப வாழ்க்கையாக இருந்தாலும் சரி பேசிக் கொண்டிருக்கும்போது எல்லா விஷயங்களையும் உளறி விடுவார். அதனால் இவருடைய பேட்டிகள் மக்கள் மத்தியில் ரசிக்கப்படும். வில்லனாகவும் குணசித்திர நடிகராகவும் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் எம்ஜிஆர் காலத்திலேயே குழந்தை நட்சத்திரமாகவும் சினிமாவில் பப்லு அறிமுகம் ஆகி இருந்தார்.

வில்லன் நடிகர்
தொடர்ந்து இப்ப வரைக்கும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் பப்லுவுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருக்கிறது. தன்னுடைய நடிப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற கவலை அவருக்கு இருக்கிறது. அது குறித்து பல பேட்டிகளில் அவரும் வருத்தப்பட்டு பேசி இருக்கிறார். ஆனாலும் என் நடிப்பை இனி நான் விடமாட்டேன், சில வருடங்கள் நான் துவண்டு போயிருந்த காலம் எல்லாம் போதும். இனி என் திறமையை மேலும் மேலும் மெருகேற்றிக் கொள்வேன் என்று கூட சமீபத்தில் ஒரு பேட்டியில் பப்லு பேசியிருந்தார்.
பரபரப்பு சம்பவம்
அதுபோல அவருடைய திருமண சர்ச்சைகளும் பலருக்கும் தெரிந்த சங்கதி தான். சில வருடங்களுக்கு முன்பு தன்னைவிட வயதில் குறைந்த பெண்ணை காதலிப்பதாக அறிவித்திருந்தார். அந்த பெண்ணோடு கூட பல பேட்டிகளில் கலந்து கொண்டு இருந்தார். இப்போது அவர்கள் இருவரும் பிரேக்கப் ஆகிவிட்டது. ஆனாலும் தொடர்ந்து பப்லுவிடம் அந்த பெண் பற்றி பலரும் கேட்டு வருகிறார்கள்.
நடிகர் பப்லு பேட்டி
அதற்கு பப்லு பதிலடி கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தான் சமீபத்தில் ஒரு பேட்டியில் பப்லு கலந்து கொண்டார். அப்போது நடிகர் ரகுவரன் பற்றி பப்லுவிடம் கேட்கப்பட்டது. காரணம் ரகுவரனும், பப்லுவும் நெருங்கிய நண்பர்களாம். அதுவும் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் இருவரும் ஒன்றாகத்தான் தங்கி இருந்திருக்கிறார்கள். அதுபோல ரகுவரனின் நடிப்பு எப்போதும் பலராலும் பாராட்டப்படும். அவருடைய வில்லத்தனத்தை போல யாராலும் மிரட்ட முடியாது.
சிறந்த நடிகர் ரகுவரன்
ரகுவரனின் குரல் வளம் அவருக்கே ஸ்பெஷல் ஆக அமைந்தது. சினிமா துறையில் ஹீரோவாக வேண்டும் என்று கனவோடு சினிமாவுக்கு வந்த ரகுவரன் வில்லனாக பல படங்களில் நடித்து இருந்தாரர். கடைசியாக நடிகர் தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்திலும் அவர் இறந்து போவது போல காட்சிகள் இருந்தது. அந்த படம் வெளியாவதற்க்கு சில நாட்களுக்கும் முன்பு அவர் இறந்து போய்விட்டார்.
ரகுவரன் நண்பர் பப்லு பிரித்திவிராஜ்
அதுபோல நடிகை ரோகிணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். ஆனால் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இந்த நிலையில் ரகுவரன் குறித்து பப்லு பேசுகையில் ரகுவரன் எனக்கு ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சீனியர். அங்கு தான் எங்களுடைய நட்பு ஆரம்பித்தது. நாங்கள் ரெண்டு பேரும் ஏறக்குறைய ஒரே மாதிரி தான் இருப்போம். அவர் என்னைவிட உயரமாக இருப்பார். ஆனால் கலர், ஸ்டைல் எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
ரகுவரன் இறப்பிற்கு காரணம்
என்னுடைய கேர்ள் பிரண்டும், அவருடைய கேர்ள் பிரண்டும் பெஸ்ட் பிரண்ட். அதோடு எங்களுடைய கேர்ள் பிரண்டு ரெண்டு பேரும் பெரிய பணக்காரர்கள். நாங்க ரெண்டு பேரும் பயங்கர ஜீரோ பேலன்ஸ் ஆளுங்க என்று கூறிய பப்லு ரகுவரன் மறைவு குறித்து பேசும்போது "ரகுவரன் போதை பொருளுக்கு அடிமையாகி மூளையில் இருக்கும் நினைவு பகுதி செயலிழந்து தான் அவர் இறந்து போனார். அவரை திருத்துவதற்காக நான் முயற்சி செய்தபோது உன்னுடைய வேலை எதுவோ அதை மட்டும் பார் என்று சொல்லிவிட்டார்" என அந்த பேட்டியில் பப்லு பேசியிருக்கிறார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications