முட்டை சாப்பாட்டுக்காக போய் வெளியே அனுப்பப்பட்டேன்.. அந்த இடத்தில் நடந்த அவலம்.. kpy பாலா உருக்கம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த பாலா இப்போது தன்னால் முடிந்த அளவிற்கு பலருக்கு உதவிகள் செய்து கொண்டிருக்கிறார் அதேபோன்று தொலைக்காட்சி இனி மற்றும் திரைப்படங்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் இந்த நிலையில் சமீபத்தில் நடந்த டான்ஸ் மாஸ்டர் கலாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பாலா தனக்கு நடந்த அவலம் குறித்து கண்கலங்க பேசியிருக்கிறார்.
தமிழ் நடன உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்த "நடனக் கலையரசி" கலா மாஸ்டரின் நாற்பதாண்டு கால கலைப்பயணத்தை போற்றும் விழா கடந்த வாரம் கோலாகலமாக நடைபெற்றது. இது ஒரு கொண்டாட்டம் மட்டுமல்ல, ஒரு தலைமுறையின் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் வெற்றியின் சான்றாக அமைந்தது. இந்த விழாவில் கலாவின் நெருங்கிய தோழிகள் மற்றும் நண்பர்கள் பலர் கலந்து கொண்டு கலா பற்றி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

பாலா பேச்சு
அப்போது அந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் பாலா, தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டபோது உணர்ச்சிவசப்பட்டார். "2015ஆம் ஆண்டு நான் இந்த இடத்திற்குள் நுழையக்கூட அனுமதிக்கப்படவில்லை. அப்போது நான் விஜய் டிவியில் நிகழ்ச்சி பண்ணிக் கொண்டிருந்தேன் அப்போது மானாட மயிலாட நிகழ்ச்சி செட் பக்கத்தில் தான் இருக்கிறது அங்கு சாப்பாடு போடுறாங்க என்றதும் நானும் அங்கே போனேன் உள்ளே எல்லோருக்கும் மொட்டை வைத்து பிரியாணி சாப்பாடு போட்டு கொண்டு இருந்தாங்க ஆனால் நான் உள்ளே போகப் போறேன் என்றதும் வாட்ச்மேன் உள்ளே விடாமல் என்னை தடுத்துவிட்டார். ஆனால் 2025ல் இன்று, அதே இடத்திற்குப் பாதுகாப்பாக அழைத்து வரப்படுகிறேன் என்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது," என்று அவர் எமோஷனலாக கூறினார்.

வாழ்க்கையின் மாற்றம்
மேலும் பாலா பேசும்போது,தனது ஆரம்பகால வாழ்க்கையில் அவர் பட்ட கஷ்டங்களை நினைவு கூர்ந்தார். நடிகை ரம்பா மற்றும் அவரது கணவர் ஆகியோர் முதன்முதலில் பாலா மீது நம்பிக்கை வைத்து மூன்று லட்சம் ரூபாய் கொடுத்து "நீ இதை உனக்காகச் செலவு செய்" என்று கூறியது அவரது வாழ்க்கையை மாற்றியதாகக் குறிப்பிட்டார்.
நெகிழ்ந்த பாலா
இந்த நிகழ்வு வெறும் நடனம், இசை மற்றும் கலைஞர்களின் சங்கமம் மட்டுமல்ல, சமூகத்தின் மனசாட்சியை பிரதிபலிக்கும் ஒரு மேடையாகவும் அமைந்தது. கலா மாஸ்டரும் அவரது குடும்பத்தினரும், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பல ஏழை எளிய மக்களுக்கு வாழ்க்கையில் முன்னேற ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளனர். "யாருக்கும் தெரியாமல், நிறைய பேருக்கு ஷோரூம் போட்டுருக்காங்க," என்று பாலா அவர்களின் சமூகப் பணியைப் பாராட்டினார்.
ரசிகர்கள் பாராட்டு
இந்த நிகழ்ச்சி ஒரு கலையின் பயணத்தை மட்டுமல்ல, ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தையும் கொண்டாடியது. கலா மாஸ்டரின் பங்களிப்பு நடனத்துறையில் ஒரு புதிய பாதையை உருவாக்கியுள்ளது. அவரது புகழ் இன்னும் பலருக்கும் வழிகாட்டியாக இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications