நடிகர் பாக்யராஜின் மகளா இது..? பலமுறை தற்கொலை முயற்சி ஆனால் இப்போ..? இப்படித்தான் வாழ்ந்து காட்டணும்
சென்னை: காதல் தோல்வியால் பலமுறை தற்கொலை முயற்சி செய்த நடிகர் பாக்யராஜின் மகள் தற்போது சொந்தமாக பிசினஸ் தொடங்கி இருக்கிறார்.
பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரைத்துறையில் அவர் செய்திருக்கும் செயலை பற்றி பதிவு வெளியிட்டு இருக்கிறார்.
மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

ஒரு இயக்குனராகவும், கதை திரைக்கதை, வசனகர்த்தாவாகவும், நடிகராகவும் இருக்கும் பாக்யராஜை தெரியாதவர்களே இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அவர் மட்டுமல்லாமல் அவருடைய குடும்பமே திரைத்துறையில் பிரபலமானவர்கள் தான்.
என்னதான் திறமை இருந்தாலும் வாய்ப்புகள் எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் கிடைத்து விடாது. அந்த மாதிரி தான் ஒரு காலத்தில் நடிகர் பாக்யராஜின் வீட்டு வாசலில் வாய்ப்புக்காகவும், கதை சொல்வதற்காகவும் பல தெருவுகளுக்கு வரிசை நின்று கொண்டிருந்தது .இப்போது நடிகர் பாக்யராஜ் ஒரு நடிகராக மட்டும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்..
நடிகர் பாக்கியராஜ் ஒரு இயக்குனராக பல பேருக்கு வாழ்க்கையை விளக்கேற்றி வைத்திருக்கிறார். தீவிரமான எம்.ஜி.ஆரின் ரசிகரான பாக்யராஜின் வீட்டில் எப்போதுமே வீட்டிற்கு வருபவர்களுக்கு சாப்பாடு ரெடி ஆகி கொண்டே இருக்குமாம். வெள்ளி திரையில் விஜயகாந்த் செய்து வந்த அதே வேலையை பாக்கியராஜ் பல வருடங்களுக்கு முன்பே செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவருடைய வீட்டிற்கு வாய்ப்புக்காகவும் கதை சொல்வதற்காகவும் வந்து கொண்டிருப்பவர்களுக்கு விதவிதமான உணவு வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது.
அந்த அளவிற்கு ஒரு மனம் படைத்த பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜின் மகன் சாந்தனு மற்றும் மகள் சரண்யா சினிமாவில் அறிமுகப்படுத்தி இருந்தார். ஆரம்பத்தில் சரண்யா திரைத்துறையில் அறிமுகம் ஆனது பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான பாரிஜாதம் எனும் திரைப்படத்தில் தான். அந்த திரைப்படத்தில் பாக்கியராஜூம் நடித்திருப்பார்.
பாக்யராஜ் எதிர்பார்த்த அளவிற்கு அந்த திரைப்படம் வெற்றி பெறவில்லை. அந்த நிலையில் தான் சில திரைப்படங்களில் நடித்துவிட்டு அவர் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு காதலித்த ஒரு நபரால் ஏமாற்றப்பட்டதாகவும் அதனால் அவர் தற்கொலை முயற்சி செய்திருக்கிறார். ஒரு முறை அல்ல பலமுறை தற்கொலை முயற்சி செய்த சரண்யாவை பாக்யராஜ் குடும்பத்தினர் காப்பாற்றி ஆறுதல் படுத்தி இருக்கிறார்கள்.
பிறகு எந்த திரைப்படங்களிலும் நடித்துக் கொள்ளாமல் இருந்த சரண்யா சில மாதங்களுக்கு முன்பு பாக்கியராஜ் குடும்பத்தோடு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அதுவும் வைரல் ஆகி வந்தது 38 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கும் சரண்யா தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்வதற்காக ஷாப்பிங் மற்றும் ரீட்டைல் தொழிலை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.

ஏற்கனவே பூர்ணிமா பாக்யராஜும் இந்த தொழிலில் இருந்து வருகிறார். பல நடிகைகளுக்கு ஃபேஷன் டிசைனராக பூர்ணிமா இருப்பது போன்று அவருடைய மகளும் உயர்ந்து வருகிறார். இந்த நிலையில் சரண்யா மீண்டும் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அந்த வகையில் நடிகை ஹன்சிகா மோத்வானி 51வது படத்தில் சரண்யா ஸ்கிரீன் பிளே வேலையும் செய்துள்ளாராம்
அதுமட்டுமல்லாமல் அவர் வெளியிடும் ஆன்லைன் விளம்பரங்களை பலரும் வாங்கி கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். சரண்யா பாக்யராஜ்க்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 226.2கே பாலோவர்ஸ் இருக்கின்றனர். அதே நேரத்தில் காதல் தோல்வி என்றாலும் வாழ்க்கையில் சின்ன தோல்வி என்றாலும் தற்கொலை முயற்சி எப்போதும் கைகொடுக்காது. அது நம்மை மட்டும் அல்லாமல் நம்மை சார்ந்தவர்களையும் வாழ்நாள் முழுக்க கஷ்டப்படுத்தி விடும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.. அதுபோல சரண்யா மீண்டும் பழைய நிலையில் வர வேண்டும் என்பது பலருடைய ஆசையாக இருக்கிறது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications