பாக்யராஜின் மகளா இது? சாந்தனு செய்த சுட்டி தனம்.. பூர்ணிமா வெளியிட்ட வீடியோ.. க்யூட்டாக இருக்கே
சென்னை: நடிகர் பாக்யராஜின் மகன் மற்றும் மகள் இருவரோடு பாக்யராஜின் மனைவி பூர்ணிமா சேர்ந்து விளையாடிய வீடியோ இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் பாக்கியராஜின் மகளான சரண்யா 2006 ஆம் ஆண்டில் வெளியான பாரிஜாதம் என்ற திரைப்படத்தில் நடிகர் பிரிதிவிராஜ்க்கு ஜோடியாக சினிமாவில் அறிமுகமானார். அதை அதைத்தொடர்ந்து மலையாளத்தில் மோகன்லால் நடித்த போட்டோக்ராபர் என்ற திரைப்படத்தில் ஆஷா கேரக்டரில் நடித்திருந்தார். மீண்டும் 2007 ஆம் ஆண்டு தித் திக் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் இந்த திரைப்படங்கள் பெரிய அளவில் சரண்யாவிற்கு பிரபலத்தை கொடுக்கவில்லை என்பதாலோ என்னவோ சினிமாவை விட்டு விலகி விட்டார். அதற்கு இடையில் தற்கொலை முயற்சி செய்து பிறகு குடும்பத்தினரால் காப்பாற்றப்பட்டு இப்போது சுய தொழில் செய்து வரும் சரண்யா தன்னுடைய அண்ணனான நடிகர் சாந்தனுடன் கலகலப்பான ஒரு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அதுபோல சாந்தனுவும் வேட்டிய மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தார். அதை தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு சக்கரகட்டி என்ற திரைப்படத்தில் மூலம் பல இளம் ரசிகர்களை கவர்ந்திருந்தார். அதில் இடம்பெற்ற டாக்ஸி டாக்ஸி, மருதாணி போன்ற பாடல்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு ஆயிரம் விளக்கு, கண்டேன், அம்மாவின் கைபேசி, ப்ளூ ஸ்டார் போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சாந்தனு மற்றும் சரண்யா இருவரும் தங்கள் முன்பு ஐஸ் தண்ணீர் நிரப்பிய கண்ணாடி குவளையை வைத்திருக்கிறார்கள். அதில் தங்களுடைய அம்மாவான பூர்ணிமாவிடம் கேட்கும் கேள்விகளுக்கு சாந்தனு மற்றும் சரண்யா இருவரில் யாரை பூர்ணிமா தேர்ந்தெடுக்கிறாரோ அவர்களுடைய முகத்தை தண்ணீர் குவளையில் பூர்ணிமா மூழ்கி எடுக்கிறார்.
இந்த வீடியோவை சாந்தனுவின் மனைவி கீர்த்தி தான் எடுத்திருக்கிறார் என்பது தெரிகிறது. அதோடு கீர்த்தி பூர்ணிமாவிடம் சாந்தனு மற்றும் சரண்யா இருவரில் யாரு ரொம்ப நாட்டி என்று கேட்க, அதற்கு பூர்ணிமா சாந்தனு முகத்தை தண்ணீரில் மூழ்கி எடுக்கிறார். அதைத் தொடர்ந்து இவர்கள் இருவரில் யாருடைய குரல் அதிக சத்தம் உடையதாக இருக்கிறது என்று கேட்க அதற்கு சரண்யா முகத்தை பிடித்து பூர்ணிமா தண்ணீரில் மூழ்க வைக்கிறார்.
இப்படியாக பல கேள்விகளுக்கு பூர்ணிமா இவர்கள் இருவரையும் மாறி மாறி தண்ணிக்குள் மூழ்கி எடுக்கிறார். அப்போது இவர்கள் இருவரில் யார் அதிகமாக காமெடி செய்வார்கள் என்று கேட்ட கேள்விக்கு பூர்ணிமா இவங்க ரெண்டு பேருமே கிடையாது. இந்த கேள்விக்கு இவங்க அப்பா பாக்கியராஜை தான் இதுல முக்கி எடுக்கணும் என்று சொல்ல, அது பார்த்துக் கொண்டிருப்பவர்களை குபீர் என சிரிக்க வைத்து விடுகிறது.
சினிமா பிரபலங்களான இவர்கள் கியூட்டாக வீட்டில் விளையாடும் இந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது. அதோடு பாக்யராஜின் மகளை அதிகமாக இணையத்தில் பார்க்காத ரசிகர்கள் அண்ணனும் தங்கச்சியும் எங்க வீட்டில் நடப்பது போல சண்டை போட்டுக்குறாங்களே என்று கமெண்டில் தங்களுடைய ஃபீலிங்கை கொட்டுகிறார்கள்.
-
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications