சுயநினைவை இழப்பதற்கு முன் அம்மா கடைசியாக சொன்ன வார்த்தை.. இறந்தும் சிகிச்சை.. நடிகர் பரத் ஜெயந்த்
சென்னை: ரமணா படத்தில் இறந்தவர்களுக்கு வைத்தியம் பார்த்தது போல் தனது தாய் இறந்த பின்னரும் 3 நாட்கள் அவருக்கு வைத்தியம் பார்த்ததாக குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்போது பெசன்ட் நகரில் ஐஸ்கிரீம் கடை நடத்தி வரும் நடிகர் பரத் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.
பல படங்களில் சிறு வயது ஹீரோவாக நடித்தவர் பரத் ஜெயந்த். இவர் பிரண்ட்ஸ் திரைப்படத்தில் சிறுவயது விஜய்யாக நடித்திருந்தார். அது போல் வானத்தை போல எனும் விஜயகாந்த் படத்தில் சிறு வயது விஜயகாந்த்தாக நடித்திருப்பார். அதாவது சிறுவயதில் பள்ளிக்கு செல்லும் போது அவரின் சைக்கிள் பஞ்சராகிவிட்டதால் விஜயகாந்த், அவரை தன் தலை மேல் உட்கார வைத்து தூக்கிச் சென்று பள்ளிக்கு கூட்டிச் செல்வார். மேலும் சில திரைப்படங்களில் சிறுவனாக பரத் ஜெயந்த் நடித்துள்ளார்.
இவர் சன்டிவியில் ஒளிபரப்பான முதல் மெகா தொடரான வாரிசு என்ற சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். பூம் பூம் ஷக்கலக்க உள்ளிட்ட சில சீரியல்களிலும் பரத் நடித்திருந்தார். எனினும் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இவர் பெசண்ட் நகரில் The Tickle Truck எனும் ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார்.

டிரக் கடை: ஒரு டிரக்கை கடை போல் மாற்றி இவர் வியாபாரம் செய்து வருகிறார். இதன் மூலம் அவர் கணிசமாக சம்பாதிக்கிறார் என கூறுகிறார்கள். இந்த நிலையில் சினிமாவில் வாய்ப்புகளை தேடாமல் ஐஸ்கிரீம் கடை நடத்தி வருவது குறித்து இவரிடம் நிறைய பேர் கேட்கிறார்களாம். அந்த வகையில் இவர் கலாட்டா தமிழ் சேனலில் நடிகை ஷகிலாவுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார்.
ஐஸ்கிரீம்: அவர் கூறுகையில், சிறிய வயதில் இருந்தே ஐஸ்கிரீம் கடை வைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. வார நாட்களில் அம்மா நிறைய ஐஸ்கிரீம் வாங்கித் தருவார். நான் ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்பதற்காகவே நான் சினிமாவில் நடித்த போது கிடைத்த பணத்தை சேர்த்து ரூ 4 லட்சத்தை வைத்து இந்த கடையை தொடங்கினேன்.
வருமானம் எப்படி: 2018 ஆம் ஆண்டுதான் இந்த கடையை தொடங்கினேன். இந்த கடையில் வார இறுதி நாட்களில் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும். மற்றபடி ரூ 50 ஆயிரம் வருமானம் எல்லாம் கிடைக்காது. அது கடையை பெரிதுப்படுத்தி இன்னும் சில ஃபிளேவர்களில் ஐஸ்கிரீம்களை விற்பனை செய்தால் வரும். என் தந்தை நான் சிறியதாக இருக்கும் போதே என் தாயை விட்டுவிட்டு போய்விட்டார்.
முயற்சி: அதனால் என் அம்மாதான் என்னை தனியாளாக வளர்த்தார். அவருடைய முயற்சியின் பேரில்தான் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தன. எனக்கு தெரிந்து சினிமாவில் ஒரு படத்திற்கு ரூ 1000 வரை கிடைத்திருக்கிறது. சீரியல்களுக்கு ரூ 2000, 2500 இது தான்நான் பெற்ற அதிக ஊதியமாகும். சில படங்களுக்கு ரூ 500 கூட கொடுத்திருக்கிறார்கள்.
தைரியமானவர்: என் அப்பாவும் அம்மாவும் இறந்துவிட்டார்கள். என் அம்மா மிகவும் தைரியமானவர். அவர் தற்போது இருந்திருந்தால் நான் கடையை வைத்திருப்பேனா என தெரியவில்லை. அப்பா நிறைய பிசினஸ் செய்வதாக கூறி ஏமாந்துவிட்டார். அதனால் அம்மாவுக்கு பிசினஸ் என்றாலே பயம். ஆனால் இருந்திருந்தால் நான் பிசினஸ் தொடங்கிய போது சந்தித்த கஷ்டங்களை விரைவில் தீர்த்திருப்பார்.
வெறுமையாக இருக்கு: அம்மா இல்லாததை நினைத்து நிறைய வருந்துவேன். வீட்டில் அம்மா இல்லாத வெறுமை ஒரு மாதிரியாக இருக்கிறது. கடைசியாக அம்மாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது ஆம்புலன்ஸில் ஏறும் போது தனக்கு பயமாக இருக்கிறது என்றார். அத்துடன் அவர் சுயநினைவில்லாமல் போய்விட்டார். என் அம்மா இறந்தும் பணத்தை பறிக்க 3 நாட்களாக அவருக்கு சிகிச்சை கொடுத்தார்கள். இவ்வாறு நடிகர் பரத் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications