பிளாக் பாண்டியையும் விட்டு வைக்கலயா? உதவி செய்தாலும் இப்படியா? சத்தமில்லாமல் சமுத்திரகனி செய்த வேலை
சென்னை: கேபிஒய் பாலா மீதான சர்ச்சைகள் வலம் வந்தவாறே உள்ளன.. ஒருபக்கம் ஆதரவு, மறுபக்கம் எதிர்ப்பு என சோஷியல் மீடியாவில் கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.. இதுபோன்ற சர்ச்சைகளை தவிர்க்க வேண்டுமானால், மடியில் கனமில்லை என்பதை கேபிஒய் பாலா மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கைகளை விடுக்க தொடங்கியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, நடிகர் பிளாக் பாண்டி பற்றி பல்வேறு விஷயங்களை கூறியிருக்கிறார்.
Cheyyaru Balu என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, "கனா காணும் காலங்கள் சீரியலில் நடிகர் பிளாக் பாண்டி, தற்போது பலருக்கும் உதவிகளை செய்து வருகிறார்.. "உதவும் மனிதன்" என்ற அறக்கட்டளை மூலம் இவர், இலங்கையிலுள்ள மலையகத் தமிழர்களில் மிகவும் நொடிந்து போயிருந்த 5 இளைஞர்களை சென்னைக்கு அழைத்து வந்து, கல்லூரியில் படிப்பதற்காக சீட் வாங்கி தந்துள்ளார்..

நடிகர் பிளாக் பாண்டி
இதற்காக இலங்கை அரசு, இந்திய அரசாங்கத்தின் நடைமுறை, விதிகள் என்ன உள்ளதோ, அனைத்தையும் கேட்டு முறைப்படி விசா, பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை செய்துள்ளார்..
உடனே பிளாக் பாண்டி பின்னாடி யாரோ ஒரு பிரபலம், கருப்பு பணத்துடன் இருக்கிறார், அவரது பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்குதான் இப்படி பிளாக்பாண்டியை பயன்படுத்தி கொள்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் கிளம்பிவிட்டன.
கேபிஒய் பாலா மீது விமர்சனம்
கேபிஒய் பாலாவும் ஒரு சாதாரண அப்பாவி நபர்தான்.. அவரெல்லாம் என்ன செய்துட போகிறார்?அந்நிய கூலி ரேஞ்சுக்கு அவரை பேசுகிறார்கள்.. தமிழக, இந்திய அரசியலையே புரட்டி போட்டுவிடக்கூடியவரா பாலா? நேபாள், லண்டன் அளவுக்கு ஒர்த்தான நபரா?
உதவி செய்வது என்பது மிகப்பெரிய போதை.. எம்ஜிஆருக்கே அது இருந்ததால்தான், தன்னுடைய கடைசிகாலம்வரை உதவிகளை செய்து கொண்டேயிருந்தார்..
தன் மீதான விமர்சனங்களை கண்டு கொந்தளித்து போன பிளாக் பாண்டி மனம் வெதும்பி விளக்கம் ஒன்றை தந்துள்ளார்.. "நான் இந்த உதவிகளை இன்று, நேற்று செய்யவில்லை.. நீண்ட காலமாகவே செய்து வருகிறேன்.. அதிலும், என்னை நாடி வந்து கேட்கும், சிறிய அளவீலான உதவிகளை செய்து வருகிறேன்.
சமுத்திரகனி சத்தமில்லாத உதவி
கொரோனா காலகட்டங்களில் சாப்பாடு இல்லாமல் சாலையோரம் அவதிப்பட்டவர்களுக்கு சாப்பாடு வாங்கி தந்தேன்.. அப்போது முதல் உதவிகளை செய்து வருகிறேன்.
ஒருமுறை சாலிகிராமத்தில் இப்படித்தான் சாப்பாடு வாங்கி தந்தபோது, டைரக்டர் சமுத்திரகனி பார்த்துட்டாரு.. உடனே என்னை கூப்பிட்டு பேசிய சமுத்திரகனி, "ஞாயிற்றுக்கிழமைகளில் பல ஓட்டல்கள் இருக்காது,, பலருக்கும் சாப்பாடும் கிடைக்காது. அதனால் அன்றைய நாள் மட்டும் சாப்பாட்டு செலவை நான் பார்த்துக்கறேன்னு சொன்னாரு. அதன்படியே சாப்பாட்டுக்கும் உதவி வருகிறார்.
இதற்கு பிறகு, "உதவும் மனிதன்" என்ற அறக்கட்டளை சைலண்ட்டாக ஆரம்பித்து, உதவிகளை செய்து வருகிறேன். நான் செய்யும் உதவிகளை விளம்பரப்படுத்தலாமா? மீடியாக்களுக்கு சொல்லலாமா? என்று உதவி பெறுபவர்களிடமே நான் கேட்பேன்.. அவர்கள் மறுப்பு சொன்னால், அதை விளம்பரப்படுத்தவே மாட்டேன்.
அங்காடி தெரு நடிகை சிந்து
ஆனால், மறைந்த நடிகை அங்காடி தெரு சிந்து, நாங்கள் செய்த உதவியை மீடியாக்களுக்கு சொல்ல சொன்னார். இந்த உதவியை பார்த்தாவது, பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் வரும் என்பதால், மீடியாக்களுக்கு சிந்து சொல்ல சொன்னார்.. நடிகை சிந்து தவிர, நான் செய்த உதவிகள் எதுவும் வெளியே தெரியாது. இத்தனைக்கும் சினிமாவில் எனக்கு எத்தனையோ கசப்பு சம்பவங்கள் நடந்துள்ளன..
சமீபத்தில் இலங்கைக்கு நான் சென்றபோது மிகமிக நன்றாக படிக்ககூடிய 5 இளைஞர்களுக்கு கல்வியை தொடர முடியாத சூழல் இருப்பது என்பது தெரியவந்தது.. அதற்கு பிறகுதான் அவர்களுக்கு கல்வி கொடுக்க முன்வந்தேன்.. ஆனால் அனைத்தையும் முறைப்படி செய்துள்ளேன்.
இப்போது எனக்கு பின்னாடி யாரோ கருப்பு பணம் நபர் இருப்பதாக சொல்கிறார்கள்.. அப்படி யாருமே இல்லை.. என்னை போன்று உதவி செய்பவர்களை யாரும் விமர்சனம் செய்யாதீர்கள்" என்று வருத்தமாக சொல்கிறார் பிளாக் பாண்டி.
அடிஅடின்னு அடிக்காதீங்கா
உண்மைதான்... பிளாக் பாண்டி, கேபிஒய் பாலா போன்றோர் உதவிகள் செய்வதை யாரும் தயவுசெய்து கொச்சைப்படுதத வேண்டாம்.. இப்படி உதவி செய்பவர்களை அடிஅடியென அடித்தால், வேறு யார்தான் நாளை உதவிக்கென்று வருவார்கள்?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் செய்யாறு பாலு.












Click it and Unblock the Notifications