விடுதி மாதிரி இருக்கு.. பேத்தி வேண்டாம்! பேரன் தான் இனி வேணும்! சிரஞ்சீவி பேச்சு
சென்னை: நடிகர் சிரஞ்சீவி பெண்கள் குறித்து பேசிய கருத்துக்கு இணையத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தன்னுடைய குடும்ப விஷயமாக இருந்தாலும் அதை பொதுவெளியில் இப்படி பேசக்கூடாது என்று சிரஞ்சீவிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அப்படி என்ன சிரஞ்சீவி பேசினார் என்று விரிவாக பார்க்கலாம்.
90ஸ் காலகட்டத்தில் எல்லாம் பெண் குழந்தைகள் மீது ஒருவித வெறுப்பு பலருக்கும் இருந்தது. அதனாலேயே பல பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்பட்டனர். ஒரு சில குழந்தைகள் தப்பித்தவறி பிறந்து விட்டால் கூட கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்த கதை எல்லாம் கேள்விப்பட்டு இருப்போம்.

ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. இப்போது பெண் குழந்தைகளை பலர் கொண்டாடி வருகிறார்கள். 90 காலகட்டத்தில் பல பெண் குழந்தைகள் அழிக்கப்பட்டதாலோ என்னவோ இப்போது 90ஸ் ஆண்கள் பலருக்கும் திருமணம் ஆகாமல் இருக்கிறார்கள். அதேபோல பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை அறிவிக்க கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. அதுபோல பெண்களுக்காக பல சிறப்பு சலுகைகளும் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இப்போதும் பலருடைய மனதில் ஆண் குழந்தைகள் மீதுதான் தனி பாசமும் பரிவும் இருக்கிறது என்பது சிலருடைய பேச்சில் தெரிகிறது.

அதிலும் தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் சிரஞ்சீவி பெண்கள் குறித்து பேசிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் பிரம்மானந்தம் நடித்த பிரம்மா ஆனந்தம் படத்தில் முன்னோட்ட நிகழ்வில் சிரஞ்சீவி கலந்து கொண்டார். அப்போது ராம் சரண் மகள் கிளிங்காராவிடம் தொகுப்பாளினி தாத்தாவை காட்டுங்கள் என்று கூறியிருக்கிறார்.
அப்போது சிரஞ்சீவி வீட்டில் எல்லாம் பெண்களாக இருக்கிறார்கள். சில சமயத்தில் பெண்கள் விடுதி காப்பாளராக இருப்பது போல் நான் உணர்கிறேன். இந்த முறையாவது ஒரு ஆண் குழந்தையை கொடு என்று சரணிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். தங்கள் வாரிசை தொடர ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று விருப்பமாக இருக்கிறேன்.
ஆனால் மீண்டும் பெண் குழந்தை பிறக்குமோ என்ற பயம் இருப்பதாக சிரஞ்சீவி கூறியிருக்கிறார். தங்களுடைய குடும்பத்திற்கு வாரிசு வேண்டும் என்று சிரஞ்சீவி விரும்புவதாகவும் அதே நேரத்தில் வீட்டில் எல்லாம் பெண் குழந்தைகளாக இருப்பதால் ஒருவிதத்தில் ஆண் குழந்தை இல்லாத குறையை உணர்வதாகவும் அவருடைய கருத்திலிருந்து தெரிகிறது.

இந்த கருத்தை சிரஞ்சீவி நகைச்சுவையாக பேசி இருந்தாலும் இதை பலர் விமர்சித்து வருகிறார்கள். அதுபோல சிரஞ்சீவிக்கு சுஷ்மிதா, ராம்சரண், ஸ்ரீஜா என்ற மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இதில் சுஷ்மிதாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். ஸ்ரீஜாக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.
சமீபத்தில் தான் ராம்சரணுக்கும் கிளிங்காரா என்ற பெண் குழந்தை பிறந்தது. இதனால் தங்கள் வீட்டில் ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று சிரஞ்சீவி ஆசைப்பட்டு இருக்கிறார். இதில் தவறு ஏதும் இல்லை என்று சிலர் சிரஞ்சீவிக்கு சப்போர்ட் செய்து வருகிறார்கள். இன்னும் சிலர் சிரஞ்சீவியின் குறுகிய மனம் இந்த பேட்டி மூலமாக தெரிகிறது என்று அவருக்கு எதிராக நெகட்டிவ் கருத்துக்கள் வெளியிட்டு வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications