Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நேத்து நடிக்க வந்த பொண்ணுக்கு எனக்கு ஈக்வலான சம்பளமா? கோபமடைந்த பிரபல தெலுங்கு நடிகர்! நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாலைவனச் சோலை என்ற படத்தின் போது அந்த படத்தின் நடிகையின் ஊதியத்தை கேட்டு தெலுங்கு நடிகர் ஆவேசமானதாகவும் அவரை படக்குழு சமாதானம் செய்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து செல்வன் அன்பு என்பவரின் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

Actor Chiranjeevi was convinced by Telugu remake team of Palaivana Solai


80ல் வந்த ஒரு தலை ராகம் படம் செம வெற்றி பெற்ற படம். அதில் முக்கிய விபரம் தெரிந்த சினிமாக்காரர்கள் ராபர்ட்-ராஜசேகர், உதவி இயக்குனர் ஜெயச்சந்திரன். இவர் ராஜசேகரின் தம்பி. இந்த டீம் அதே ஒரு தலை ராகம் நடிகர்களை வைத்து எடுத்த படம் தான் பாலைவனச்சோலை.
பாலைவனச்சோலை எப்படின்னா ஐந்து நண்பர்கள் ஒரு பெண்ணை விரும்புவார்கள்.

அவரவருக்கு தனக்கான பிரச்சினைகள் உடையவர்கள். சந்திரசேகர், ராஜீவ், தியாகு, கைலாஷ், ஜனகராஜ் இவங்க பிரச்சினைகளோடு வாழும் சூழ்நிலையில் வசந்தமாக வருகிறார் ஒரு பெண். சுஹாசினி. இதய நோயால் எப்போது வேண்டுமானாலும் சாகப்போகும் நிலையிலுள்ள அவர் இந்த இளைஞர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள், நிகழ்வுகளே கதை.
கதை ராஜசேகர்.

பிரசன்னகுமார், தம்பி ஜெயச்சந்திரனோடு சேர்த்து அவர் அட்டகாசமான திரைக்கதையை உருவாக்கினார். ராஜசேகரின் தம்பி ஜெயச்சந்திரன் அப்போது பிலிம் இன்ஸ்ட்டிடியூட்டில் படித்துக்கொண்டிருந்தார். அவருடைய கிளாஸ்மேட் சுஹாசினி. ஜெயச்சந்திரன் சுஹாசினியை பற்றி சொல்ல அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது சுஹாசினி படித்துக்கொண்டிருந்தார்.

படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசனின் ஜிம் மாஸ்டர் வடிவேலு என்பவர். அவருக்காக சுஹாசினி நடிக்க சம்மதித்தார். ஆனால் ஒரு கன்டிஷனோடு.
தான் வகுப்புக்கு போய் வருவதை நிறுத்தக்கூடாது என்பதே அது. அதனால் சுஹாசினி காட்சிகள் காலை ஆறு மணி முதல் பத்து மணி வரையும், மாலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை.

ஷூட்டிங் முடித்து காரிலேயே மேக்கப் கலைத்து வகுப்பு போவார். படத்தில் சுஹாசினியின் காட்சிகள் எல்லாமே அதிகாலை நேரத்தில் இருப்பதை படத்தில் காணலாம். படத்திற்காக எந்த சம்பளமும் சுஹாசினி வாங்கவில்லை வடிவேலுவுக்காக. படம் வெளியாகி செம ஹிட். அதுவும் சங்கர்-கணேஷ் பாடல்கள், இசை அப்போது பீக்கிலிருந்த இளையராஜாவுக்கு தன் திறமையை நிருபிக்க அவசியமானதாக இருந்தது. மேகமே மேகமே என்கிற பாடல் ஒரு கஸலின் காப்பியென்றாலும் ரேடியோவில் தினம் தினம் ஒலிபரப்புவார்கள்.

ஆர்க்கெஸ்ட்ரா பாடல். அதிரி புதிரி பாட்டு ஆளானாலும் ஆளு பாடல். மலேஷியாவின் அப்போதைய ஹிட்டுகளில் ஒன்று. இதன் சோக வெர்ஷனும் உண்டு. பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி மின்னல் போலே பின்னால் வந்தாள் பாடல் பின்னாளில் வந்த ராப் இசையை ஒத்தது. இதை படிக்க பாட்டுப்புத்தகம் வாங்கி மனப்பாடம் செய்து பாடி பார்த்ததெல்லாம் பசுமையான நினைவுகள். எங்கள் கதை பாடலும் நல்ல பாடலே. படத்தில் தியாகு செய்யும் 'அந்த மான் இந்த மானுக்கு தான் சொந்தம்' மிமிக்ரி செம பாப்புலர்.

சந்திரசேகர் வெறும் எலும்பும் தோலுமாக சட்டை பேண்ட்டில் ஒளிந்து கொண்டிருக்கிறார். அந்த குரல் மட்டுமே அவரை காப்பாற்றியது. படம் சென்னை நுங்கம்பாக்கம் சாலையிலேயே படமாக்கப்பட்டது. இன்றைய பரந்து விரிந்த நுங்கம்பாக்கம் ஹை ரோடின் நாற்பது வருடத்துக்கு முந்தைய நிலையை காண இந்தப்படத்தை காணலாம்.

படத்தை உடனே தெலுங்கில் 'மஞ்சுபல்லாகி' எனவும், மலையாளத்தில் 'இது ஞங்ஙளுடெ கத' எனவும் எடுத்தனர். தெலுங்கில் சுஹாசினி, சிரஞ்சீவி, ராஜேந்திர பிரசாத் நடிக்க வம்சி இயக்கிய முதல் படம்இது. இம்முறை சுஹாசினிக்கு சிரஞ்சீவிக்கு இணையாக சம்பளம் தரப்பட்டது. சிரஞ்சீவி இதற்கு ஆட்சேபிக்க சமாதானப்படுத்தப்பட்டதெல்லாம் நிகழ்ந்தது. படத்தின் வெற்றியை முன்பே அறிந்திருந்த சுஹாசினியின் தந்தை சாருஹாசன் நெல்லூர் ஏரியா வினியோக உரிமையை வாங்கினார்.

படத்தை மலையாளத்தில் ஸ்ரீநாத், சாந்தி கிருஷ்ணா, முகேஷ், ஜகதி, ராஜு நடித்தனர். இந்தப்படத்தில் நடிக்கும் போது ஸ்ரீநாத்-சாந்தி காதல் அத்தியாயம் துவங்கியது. 2009ல் இந்தப்படத்தை இரண்டாவதாக எடுத்து கெடுத்ததெல்லாம் இங்கே சொல்ல அவசியமற்றது. சில சில தவறுகள் இப்போது பார்க்கும் போது தெரிந்தாலும் பாலைவனச்சோலை அற்புத நொஸ்டால்ஜியா படம். அக்டோபரில் படம் வந்து 43 வருடமாகப் போகிறது. இவ்வாறு தனது பதிவில் செல்வன் அன்பு தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+