என் கண்ணு முன்னாடியே போயிட்டான்.. ஜாதகத்தில் கூட அப்படி சொன்னாங்க! கதறி அழுத டேனியல் பாலாஜி அம்மா
சென்னை: நடிகர் டேனியல் பாலாஜி சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார். அது திரைத்துறையினரை மட்டுமில்லாமல் ரசிகர்களையும் அவருடைய குடும்பத்தினரையும் அதிகமாக அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த நிலையில் டேனியல் பாலாஜியின் அம்மா சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் அவர் கண்ணீரோடு கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க வைத்திருக்கிறது.
டேனியல் பாலாஜி பல திரைப்படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் நிஜத்தில் ஹீரோவாக தான் வலம் வந்திருக்கிறார். தன்னுடைய அம்மாவின் ஆசைக்காகவே ஒரு கோவிலை கட்டி கொடுத்து இருக்கிறார். அதுபோல தன்னுடைய பகுதியில் ஏழை குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கும், வயதானவர்களின் அடிப்படை செலவுகளுக்கும் பல்வேறு உதவிகளை செய்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் தன்னுடைய நண்பர்கள் பலருக்கும் பிசினஸ் செய்து கொடுத்து அவர்கள் முன்னேறுவதை பார்த்து மகிழ்ந்திருக்கிறார். இப்படி பல நல்லது செய்த டேனியல் பாலாஜிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட அதன் காரணமாக அவர் மருத்துவமனைக்கு போயிருந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனில்லாமல் காலமானார்.
இதுகுறித்து அவருடைய அம்மா பேசுகையில் என்னுடைய கண் முன்பே என் மகன் போயிட்டான். நான் இருக்கும் போது என்னுடைய மகனின் இந்த நிலைமையை நான் பார்க்க வேண்டுமா? என் மகன் எவ்வளவு நல்லவன் தெரியுமா? என் மேல அவ்வளவு பாசம் வைத்திருந்தான். அவனுக்கு ஜாதகத்தில் கூட இப்போ இறப்பு கிடையாது என்று சொன்னாங்க. நாங்க அதை நம்பிகிட்டு இருந்தோம்.
அதுபோல அவனுக்கு இதுக்கு முன்னாடி எப்பவுமே இப்படி உடம்பு சரியில்லாமல் போனது கிடையாது. அதனாலதான் நாங்க அவனை சரியாக கவனிக்காம விட்டுட்டோம். முதல்முறையா இப்பதானே அவனுக்கு நெஞ்சு வலி வந்தது. அதற்கு முன்பு அவனுடைய உடலில் எந்த ஒரு கஷ்டமும் கிடையாது. நல்ல ஆரோக்கியமா தான் இருந்தான். நான் அவனுக்கு கல்யாணம் பண்ணி அழகு பார்க்க வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டேன்.
அவன் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தான். ஆனாலும் நான் வற்புறுத்தியதால் ரெண்டு பொண்ணு வீட்டை வந்து பார்க்க வந்தான். பிறகு பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டான். ஆனால் நான் இப்படியே விடக்கூடாது என்று தான் நினைச்சிட்டு இருந்தேன். அதற்குள் எல்லாமே முடிஞ்சிடுச்சி.. சின்ன வயதில் இருக்கும் போதே அவன் அவ்வளவு பொறுப்பா இருந்தான்.

படிக்கும் போது ஸ்கூலுக்கு போயிட்டு வந்து வேலைக்கு போய் எங்களுக்கு செலவுக்கு காசு கொடுப்பான். ஆரம்பத்தில் எங்க வீட்டில் ரொம்பவே கஷ்டப்பட்டோம் அவன் தலையெடுத்த பிறகு தான் எங்க கஷ்டமெல்லாம் போச்சு. இன்னைக்கு எங்களை தவிக்க விட்டு விட்டு போய் விட்டான். அவன் இல்லாமல் இனி நாங்க எப்படி வாழ போறோம் என்று தெரியவில்லை.
அவனுக்கு நிறைய ஆசை இருந்தது படம் இயக்கனும் என்று தான் முதலில் சொல்லிக் கொண்டே இருந்தான். அவன் எத்தனையோ படம் நடித்திருந்தாலும் நான் அவன் நடிச்சதில் மூன்றே மூன்று படம்தான் பார்த்தேன்.. என்று கண் கலங்கி கதறி அழுது இருக்கிறார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications