தனுஷின் “ராயன்” ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? வாங்கியது அமேசான் பிரைம்?
சென்னை: நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ஐம்பதாவது திரைப்படமான ராயன் திரைப்படம் திரையரங்குகளில் பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருந்த நிலையில் இப்போது ஓடிடிக்கு வரப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதுவும் எந்த ஓடிடி தளத்தில் வரப்போகிறது? எந்த தேதியில் வரப்போகிறது என்பதை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.
நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவான இரண்டாவது திரைப்படமான ராயல் திரைப்படம் நடிகர் தனுஷுக்கு 50-வது திரைப்படமாக வெளிவந்தது. இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. பிரம்மாண்டமாக கடந்த ஜூலை 26 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகி இருந்த நிலையில் இந்த திரைப்படம் 150 கோடியை தாண்டி வசூல் பெற்றிருக்கும் என்று கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் பெரிய அளவில் பாராட்டப்பட்டது. இந்த படத்தில் நடிகர்கள் தங்களுடைய மொத்த அர்ப்பணிப்போடு நடித்திருந்தனர். அதோடு தனுஷை தாண்டி அவருக்கு தங்கையாக நடித்த துஷாரா விஜயன் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார். அதோடு இந்த திரைப்படத்தில் பாடல்கள் காட்சிகள் பெரிய அளவில் ஹிட் அடித்திருக்கிறது.
அதிலும் "அடங்காத அசுரன்" பாடலில் இடம்பெற்ற உசுரே நீதானே என்ற வரிகள் பலருடைய ரிங்க்டோனாகவும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களிலும் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறது. அதுபோல "வாட்டர் பாக்கெட்" பாடலும் பெரிய அளவில் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்திருக்கிறது. அதே நேரத்தில் இந்த திரைப்படத்தில் மிதமிஞ்சிய அளவில் ஆக்சன் காட்சிகளும் இருப்பதால் இது மீண்டும் தனுஷ் நடித்த அசுரனை நினைவு படுத்துகிறது.
ஏ ஆர் ரகுமானின் இசைக்கு என்றும் வயதே ஆகாது என்று சொல்லும் வகையில் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் பலருடைய மனம் கவர்ந்து முணுமுணுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை தங்கலான் திரைப்படம் வெளியாக இருக்கும் காரணத்தால் திரைப்படத்திற்கு தியேட்டர்களில் எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் ராயன் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் பற்றிய செய்தியும் வெளியாகி இருக்கிறது.
அதாவது ராயன் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கி இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதனால் அமேசான் பிரைமில் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த திரைப்படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு இருக்கும் நிலையில் sun nxt ஆப்பில் வருவதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது.
திரைப்படத்தில் அதிகமான விறுவிறுப்பு இருந்தாலும் ரத்த காட்சிகள் பார்க்கும் ரசிகர்களை மிரள வைத்திருந்தது. தியேட்டரில் குழந்தைகளோடு இந்த திரைப்படத்தை பார்க்க முடியாது என்று சொல்லும் வகையில் தான் இந்த படம் முழுக்க ரத்தம் ஆறாக ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் இனி ஓடிடியில் வெளியாகும் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் இந்த படத்தை பார்ப்பார்கள். அதனால் குழந்தைகளை தவிர்த்து இந்த படத்தை பார்ப்பது நல்லது.
-
வெறும் ₹200 கட்டினால் போதும் ரூ.1,500க்கு பலன்கள்! ஜியோ கொட்டி தரும் ஆஃபர்.. ஆனா ஒரு குட்டி கண்டிஷன் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications