பயில்வான் பக்கத்திலிருந்து பார்த்தாரா? வரம்பு மீறினால் பதிலடி கொடுக்கப்படும்.. நடிகர் தினேஷ் எமோஷனல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கிழக்கு வாசல் சீரியலில் நடித்து வரும் நடிகர் தினேஷ் தன்னை பற்றி தவறான கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட பயில்வான் ரங்கநாதன் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
நடிகர் பயில்வான் ரங்கநாதன் பல பிரபலங்களின் அந்தரங்க விஷயங்களைப் பற்றி பேசி வருகையில் சமீபத்தில் நடிகர் தினேஷ் மற்றும் நடிகை ரச்சிதா இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்தும் பேசி இருந்தாராம்.

அப்போது நடிகர் தினேஷ் தினமும் குடித்துக்கொண்டு பல பெண்களோடு சுற்றிக் கொண்டிருக்கிறார். அவரோடு எப்படி ஒரு பெண்ணால் வாழ முடியும் என்று பயில்வான் பேசினாராம். அதற்கு தினேஷ் சமீபத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
சின்னத்திரையில் ஒரு சில நடிகர்கள் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ஒரு ஜோடி தான் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி மற்றும் சீரியல் நடிகர் தினேஷ் கோபால்சாமி. இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் மூலமாகத்தான் சீரியலில் ஒன்றாக நடித்திருந்தனர். அந்த சீரியலில் நண்பர்களாக பழகி பிறகு காதலித்து திருமணம் செய்திருந்தனர்.
நன்றாகவே போய்க்கொண்டிருந்த இவர்களுடைய திருமண வாழ்க்கையில் சில வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிவு ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த போது இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கிறது என்று இவர்கள் இருவரும் தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என்றும் செய்திகள் பரவி வந்தது. அதே நேரத்தில் ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது அவருக்கு அதிகமாக தினேஷ் சப்போர்ட் கொடுத்துக் கொண்டிருந்தார்.
எங்கள் இருவருக்கும் பிரச்சனை இருப்பது உண்மைதான். ஆனால் நாங்கள் இருவரும் பேசி தீர்த்துக் கொண்டு மீண்டும் வாழ்க்கையை தொடங்கலாம் என்று தனக்கு ஆசை இருப்பதாக கூட தினேஷ் கூறியிருந்தார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாகவும் இருந்தது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரச்சிதா திடீரென்று தினேஷ் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்தார். அவர் தன்னை ஆபாச வார்த்தை கூறி திட்டுவதாக அதில் கூறி இருந்தார்.

அதற்கு பிறகு இருவர் தரப்பிலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி இருக்கின்றனர். இந்த நிலையில் நடிகரும் பத்திரிக்கையாளருமாக இருக்கும் பயில்வான் ரங்கநாதன் தினேஷ் குறித்து வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறாராம். அதில் நடிகர் தினேஷ் தினமும் குடித்துவிட்டு பல பெண்களோடு சுற்றிக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு நபரோடு ஒரு பெண் எப்படி வாழ முடியும்? அதனால் தான் ரச்சிதா அவரை விட்டு பிரிந்து விட்டார் என்று அந்த வீடியோவில் பேசியிருந்தாராம். அது குறித்து தற்போது பேட்டி ஒன்றில் தினேஷ் பதிலளித்திருக்கிறார்.
அதில் பயில்வான் ரங்கநாதன் நான் குடித்துக் கொண்டிருக்கும் போது என் பக்கத்தில் இருந்து பார்த்தாரா? நான் பெண்களோடு சுற்றிக் கொண்டிருந்தேன் என்று சொல்கிறாரே அதை அவர் பார்த்தாரா? அவருக்கு வருமானம் வரவேண்டும் என்பதற்காக அடுத்தவர்களை பற்றி தரக்குறைவாக பேசக்கூடாது.
இதற்கெல்லாம் ரியாக்ட் ஆகி நான் அவரிடம் சண்டை போட்டு என்னுடைய டைமை வேஸ்ட் பண்ண விரும்பவில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் வரம்பு மீறி பேசினால் நான் அதை பார்த்துட்டு சும்மா இருக்க போறதும் கிடையாது. களத்தில் இறங்கி என்ன மாதிரி அவருக்கு அடி கொடுக்கணுமோ அதை சிறப்பாக செய்து விடுவேன் என்று தினேஷ் பேசி இருக்கிறார். இதற்கு அதிகமான ரசிகர்கள் அவருக்கு சப்போர்ட் கொடுத்து வருகின்றனர்.
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
டேய் நம்ம பாண்டியன் படம்ப்பா! தியேட்டரில் ஒன்ஸ்மோர் கேட்டு அலறிய கூட்டம்! அந்த 1 சீன் சரித்திர சாதனை -
சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் படிக்கட்டில் அந்த சத்தம்! யாருமே கவனிக்காத நடிகர் திலகத்தின் கை ரகசியம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications