பிரபல நடிகர் கஞ்சா கறுப்பு வீட்டில் டக்னு நிறம் மாறிய சுவர்கள்.. கலைமாமணி விருது மாயம்? சென்னை பரபர
சென்னை: பிரபல நடிகர் கஞ்சா கறுப்பு, மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை தந்துள்ளார்.. கஞ்சா கறுப்பு தனது கலைமாமணி விருதை காணவில்லை என காவல்துறையினரிடம் இந்த புகாரை அளித்துள்ளார். இந்த புகாரின்பேரில் போலீசாரும் விசாரணையை துவக்கியிருக்கிறார்கள்.
சிவகங்கை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் கஞ்சா கறுப்பு.. பிதாமகன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் கஞ்சா கருப்பு.. இவரை தமிழக மக்களுக்கு அடையாளம் காட்டியது பருத்திவீரன் படம்தான்.. இதனால் கஞ்சா கருப்பு இந்த படத்தின்மூலம்தான் புகழ்பெற துவங்கினார்..

பிக்பாஸ்: அதேபோல, சுப்பிரமணியபுரம் படத்தில் கஞ்சா கறுப்பு நடித்திருந்த வேடத்தை இன்றுவரை தமிழக மக்களால் மறக்கவே முடியாது. பிக்பாஸ் போட்டியாளராகவும் கஞ்சா கருப்பு விளையாடியிருக்கிறார்.
இதற்கு பிறகு, ராம், சிவகாசி, சண்டக்கோழி, தெனாவட்டு, நாடோடிகள் என ஏராளமான படங்களில் நடித்தார்.. இதனால் குறுகிய காலத்திலேயே 100 படங்களுக்கு மேல் கஞ்சா கருப்பு நடித்ததுடன், சொந்தமாக ஒரு வீட்டையும் கட்டினார். தன் திரையுலக வாழ்க்கைக்கு அடிபோட்ட, பாலா-அமீர் என்று 2 டைரக்டர்களின் பெயரைதான் தன்னுடைய பங்களாவுக்கும் வைத்தார்.
தயாரிப்பாளர்: பிறகு, கடந்த 2014ல் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார்.. தான் பாடுபட்டு சம்பாதித்த பணத்தை எல்லாம் போட்டு, "வேல் முருகன் போர்வெல்ஸ்" என்ற படத்தை தயாரித்தார். இந்த படத்தில் கஞ்சா கருப்பு ஒரு முக்கிய கேரக்டரிலும் நடித்திருந்தார். ஆனால், படம் தோல்வி அடைந்துவிட்டது.. ஒரே படத்தில் கடனாளி ஆகிவிட்டார் கஞ்சா கருப்பு. இதனால் ஆசை ஆசையாக கட்டிய வீட்டையும் விற்றுவிட்டார்.
இப்போது வளசரவாக்கத்தில் ஒரு வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறார்.. இந்நிலையில், தன்னுடைய வீட்டில் வைத்திருந்த தன்னுடைய கலைமாமணி விருதை காணவில்லை என்று மதுரவாயல் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார் கஞ்சா கறுப்பு.
வாடகை வீடு: இதுகுறித்து கஞ்சா கறுப்பு சொல்லும்போது, "நானும், ஹவுஸ் ஓனரும் நல்லவிதமாகவே பழகிவந்தோம். அவர் கேட்பதற்கு முன்பாகவே வாடகையை தந்துவிடுவேன். ஆனாலும், சில நாட்களுக்கு முன்பு, திடீர்னு தனக்கு வீடு வேண்டும் என்று சொல்லி வீட்டை காலி செய்ய சொல்லிட்டார். அதனால், ஒருவாரம் டைம் கேட்டதற்கு, சரியென்று சொல்லிவிட்டு போனார்.
இதற்கு பிறகு நான், மதுரைக்கு சென்றுவிட்டு, மீண்டும் வளசரவாக்கம் வீட்டுக்கு வந்தேன். அப்போது, பூட்டப்பட்டிருந்த என்னுடைய வீடு பெயின்ட் அடிக்கப்பட்டிருக்கிறது.. அத்துடன், வீட்டுக்குள் நான் வைத்திருந்த கலைமாமணி விருது டாலரையும் காணவில்லை... இதனால் அதிர்ச்சி அடைந்த நான், போலீசில் புகார் தந்துள்ளேன்" என்றார்..
விசாரணை ஆரம்பம்: கஞ்சா கருப்பு அளித்த புகாரின் பேரில், மதுரவாயல் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வீட்டிற்கு வெள்ளையடிக்க வந்தது யார்? கஞ்சா கறுப்பு விருது உண்மையிலேயே திருடு போய்விட்டதா?என்றெல்லாம் போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications