நடிகையிடம் பேசிய அந்த வார்த்தை.. ரூமுக்குள் வைத்து பாக்கியராஜ் பூட்டிட்டாரு! ஜி.எம் குமார் ஓப்பன்
சென்னை: இயக்குனர் ஜி.எம் குமார் பேட்டி ஒன்றில் தான் உதவி இயக்குனராக இருக்கும்போது இயக்குனர் பாக்கியராஜ் தன்னை சூட்டிங் ஸ்பாட்டில் ரூமிற்குள் வைத்து பூட்டி விட்டார் என்று பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதோடு அந்த நேரத்தில் என்ன நடந்தது என்பதை பற்றி ஜிஎம் குமார் சில விஷயங்களையும் பகிர்ந்திருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன்பு ஒரு திரைப்படம் வெற்றி அடைந்த பிறகு தான் வெளியே தெரியும். இப்போது ஒரு வருடத்தில் 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகுகிறது. ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு வருடத்தில் சுமார் 20 அல்லது அதற்கு அதிகமான படங்கள் தான் வெளியாகும் அந்த திரைப்படங்கள் வெற்றியடைந்த பிறகு தான் அதில் நடித்தவர்கள் மற்றும் இயக்குனர், தயாரிப்பாளர் போன்றவர்களுடைய விவரமே வெளியே தெரியும்.

ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த செயல்கள் எல்லாம் அப்போது வெளியே தெரிவதற்கு வாய்ப்பில்லை. அதில் சம்பந்தப்பட்ட இயக்குனர் அல்லது நடிகர்கள் வெளியே சொன்னால் மட்டும்தான் அப்போது தெரியும். ஆனால் இப்போது இணையத்தின் பயன்பாடு அதிகமாக இருப்பதால் எல்லோரும் சூட்டிங் ஸ்பாட்டில் சில பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனே சமூக வலைத்தள பக்கங்களில் பதிவு வெளியிட்டு விடுகிறார்கள்.
ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் அப்படி கிடையாது. அந்த மாதிரி தான் உதவி இயக்குனராக இருக்கும்போது இயக்குனர் பாக்கியராஜ் தன்னிடம் நடந்து கொண்டது பற்றி இயக்குனர் மற்றும் நடிகராக இருக்கும் ஜி.எம் குமார் பேசியிருக்கிறார். ஆரம்பத்தில் பாக்யராஜ் உதவியாளராக பாரதிராஜாவிடம் தான் வேலை செய்தார். பிறகு பாரதிராஜாவால் தான் நடிகராகவும் மாறினார்.
ஆரம்பத்தில் இருந்தே மாஸ் ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும் நடிக்கும் திரைப்படங்களில் எதார்த்தமான நடிகராக நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். அதுபோல சுவாரசியமான கதையை இயக்கி அந்த திரைப்படத்தில் பாக்யராஜ் நடித்ததால் பெண் ரசிகர்களும் அவருக்கு அதிகமாக உருவாகிவிட்டனர்.
அதிலும் பாக்கியராஜ் இயங்கி நடித்த இன்று போய் நாளை வா, மௌன கீதங்கள், டார்லிங் டார்லிங் டார்லிங், அந்த 7 நாட்கள், முந்தானை முடிச்சு என பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த வரிசையில் ஒன்றுதான் "தூறல் நின்னு போச்சு" படம். இந்த படத்தில் நடிகை சுலக்சனாவை பாக்யராஜ் தான் அறிமுகம் செய்திருக்கிறார். அதுபோல இந்த படத்தில் உதவி இயக்குனராக ஜி எம் குமார் இருந்திருக்கிறார்.
அது பற்றி ஜிஎம் குமார் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசுகையில் நான் பாக்யராஜ் உடன் ஏழு படங்களில் வேலை செய்தேன். ஆனாலும் அவர் என்னை படபிடிப்பு தளத்திற்கு கூட்டிட்டு போனது கிடையாது. ஒருநாள் அவருக்கு தெரியாமல் தூறல் நின்னு போச்சு பட சூட்டிங் போய் விட்டேன். அங்கு கதாநாயகி சுலக்சனாவிடம் பேசிக் கொண்டிருந்தேன். அதை பார்த்த பாக்கியராஜ் அங்கு சத்தம் போட்டு கத்தி என்னை திட்டுனார். மேலும் என்னை இழுத்துக் கொண்டு போய் ஒரு அறையில் போட்டு அடைத்து விட்டார் என்று அந்த பேட்டியில் ஜி எம் குமார் பேசியிருக்கிறார்.
ஆனால் அதற்கு பிறகு விஜயகுமார் அறுவடை நாள், பிக்பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் போன்ற படங்களை இயக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுபோல இயக்குனராக மட்டுமல்லாமல் வெயில், மாயாண்டி குடும்பத்தார், அவன் இவன் போன்ற பல படங்களிலும் நடித்திருக்கிறார். அதுபோல சின்னத்திரையில் செம்பருத்தி சீரியல், பேரன்பு போன்ற சீரியல்களிலும் நடித்து இருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications