சுய அறம் சூப்பர்.. ஷகிலா பற்றி மேடையில் வெளிப்படையாக இளவரசு சொன்ன விஷயம்.. நெகிழ்ந்த ஷகிலா
சென்னை: நடிகரும், இயக்குனருமான இளவரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது நடிகை ஷகிலா பற்றி பல விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார். ஷகிலா தன்னுடைய நெருங்கிய தோழி என்றும் அவரை பார்த்த பிறகு தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மாற்றம் குறித்து இளவரசு பேசி இருக்கிறார்.
நடிகை ஷகிலா பல வருடங்களாகவே சினிமாவில் இருக்கிறார். 80ஸ் காலகட்டத்தின் இறுதியில் அவருடைய நடிப்பு தொடங்கப்பட்டாலும் இப்ப வரைக்கும் தொடர்ந்து வருகிறது. அதிலும் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய ஷகிலா ஆரம்ப காலகட்டத்தில் கவர்ச்சியான திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

ஷகிலா என்றால் கவர்ச்சி நடிகை என்று பலருடைய மனதில் பதிந்துவிட்டார். ஆனால் அவருடைய இன்னொரு முகம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாகத்தான் தெரிய வந்தது. அதற்குப் பிறகு அவர் மீது இருந்த பார்வை ரசிகர்களுக்கு மாறிவிட்டது. அதற்கு பிறகு பலரும் ஷகிலா அம்மா என்று அழைத்து வருகிறார்கள்.
அதுபோல பல பிரபலங்களையும் ஷகிலா பேட்டி எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நடிகரும், இயக்குனருமான சசிகுமார் இயக்கத்தில் உருவான திருமாணிக்கம் திரைப்படத்தின் வெற்றி விழாவில் இயக்குனர் இளவரசு ஷகிலா பற்றி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் ஷகிலாவும் கலந்து கொண்டிருக்கிறார்.
ச்சீ.. பத்து பேரோடு அப்படி இருக்கணுமா..? அதுவும் இந்த பெரிய மனிதர்கள்.. சனம் ஷெட்டி கேட்ட கேள்வி
அப்போது மேடைக்கு பேச வந்த இளவரசு ஷகிலாவை அழைத்து அவருடைய தோளில் கை போட்டு ஷகிலா குறித்து பேசி இருக்கிறார். அதில் சினிமாவில் பல பேர் நிலைத்து நிற்பதற்கு காரணம் சுய அறம். அந்த சுய அறம் ஷகிலாவிடம் இருக்கிறது. ஷகிலா என்னுடைய கௌரவ தோழி. வாழ்க்கையில் பெண்கள் பற்றி நான் புரிந்து கொள்வதற்கு உறுதுணையாக இருந்தது ஷகிலாவுடனான என்னுடைய நட்புதான்.

ஷகிலா என்னுடைய தோழி என்று சொல்வதற்கு நான் பெருமைப்படுகிறேன். ஷகிலாவுடைய உரையாடலுக்குப் பிறகு நான் என்னுடைய அம்மாவைப் பற்றியும், என்னுடைய மனைவி, மகள் என பெண்கள் பற்றி புரிந்து கொண்டேன். ஹைதராபாத்தில் நான் ஒரு படத்தில் நடித்தேன். அதே படத்தில் ஷகிலாவும் நடித்தார்.
நானும் ஷகிலாவும் ஒன்றாகவே ஹைதராபாத் போவோம் ஒன்றாகவே சென்னைக்கு திரும்ப வருவோம். அப்போது ஹைதராபாத்தில் இருந்து நான் சென்னை வரும் வரைக்கும் எனக்கு நேரம் போவதே தெரியாது ஷகிலா அந்த அளவுக்கு பேசிக்கொண்டே இருப்பார். ஷகிலாவுடைய தைரியமான பேச்சு எனக்கு வியப்பை கொடுக்கும்.
ஷகிலாவிடம் நீங்கள் கவர்ச்சி நடிகை அப்படி இப்படி என்று என்ன கேள்விகள் கேட்டாலும் அவர் கோபப்படவே மாட்டார். ஆனால் என்னால் எல்லாம் அப்படிலாம் இருக்க முடியாது என்று ஷகிலா குறித்து பெருமையாக இளவரசு அந்த பேட்டியில் பேசி இருக்கிறார். அப்போது ஷகிலா எந்த வார்த்தைகளும் பேசாமல் நெகிழ்ச்சியோடு இளவரசு பேசுவதை கவனித்து கொண்டே இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications