சீரியலில் கலக்கும் நடிகர் ஜெய்சங்கரின் ரத்த சொந்த நடிகை.. வடிவேலுக்கு ஜோடியாகி மாறிய வாழ்க்கை.. உருக்கமான பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ஜெய்சங்கர் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமானார். கடந்த 2000 ஆண்டில் திடீரென காலமானார். அவருடைய உறவினர் ஒருவர் சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் சமீபத்தில் பேசிய பேட்டி தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஜெயசங்கரின் இரண்டாவது மகன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். அதேபோல ஜெயசங்கரின் ரத்த சொந்தமான நடிகை ஒருவரும் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் ஆகி நடிகர் வடிவேலு உட்பட பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். அவர் யார் என்ன என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

சினிமாவில் ஒரு சில நடிகர்களின் குடும்பத்தினரும் நடித்திருக்கிறார்கள். ஆனால் இது அந்த நடிகர்களின் உறவினர்கள் என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கும். அதுபோலத்தான் நடிகர் ஜெய்சங்கரின் உறவுக்கார பெண் ஒருவர் சினிமாவில் பலருக்கும் தெரிந்த முகமாக பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அவர் உறவினர் என்பது தெரியாது சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பேசி இருந்தார். அதற்கு பிறகு தான் இந்த விஷயம் பலருக்கும் தெரிய வந்து வியப்பை ஏற்படுத்திருக்கிறது.

Jaishankar Baakiyalakshmi serial Vijay TV

நடிகர் ஜெய்சங்கர் வீட்டு நடிகை

அவர் வேறு யாருமில்லை நடிகை தாரணி தான். தாரணி ஜீ தமிழ், சன் டிவி, விஜய் டிவி உட்பட பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இப்போதும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார் அதிலும். வடிவேலு ஒரு படத்தில் தாரணியின் புடவையை பிடித்துக் கொண்டு சுற்றி திரிவார்கள். அந்த காமெடியில் நடித்த நடிகை தான் தாரணி. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாக இருந்தார். அதிலும் நடிகர் கமல்ஹாசன் நடித்த உன்னால் முடியும் தம்பி திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு தங்கையாக தான் இவர்
நடிக்க தொடங்கி இருந்தார்.

நடிகை தாரணி பேட்டி

தாரணி தன்னுடைய சினிமா மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றி சுவாரஸ்யமாக பேசியிருக்கிறார். அதில் அவர் பேசும்போது என்னுடைய சொந்த ஊர் திருவண்ணாமலை தான் ஆனால் அப்பா மதுரையில் வேலை பார்த்துக் கொண்டிருந்ததால் நாங்கள் அங்கே தான் வளர்ந்தோம். அப்போது மதுரையில் நான் படித்துக் கொண்டிருக்கும் போது என்னுடைய தாத்தா என்னுடைய ஜாதகத்தை எடுத்துக்கொண்டு வந்து அலங்காநல்லூர் பேமஸ் ஆன ஒரு ஜோதிடரிடம் காட்டினார்.

நடிகர் ஜெய்சங்கர் உறவினர்

அதற்கு காரணம் என்னவென்றால் என்னுடைய தாத்தாவின் தங்கை மகன் தான் ஜெயசங்கர். அவர் சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக இருந்தார். அதுபோல நடிகை இளவரசியும் எங்க உறவினர் தான். அந்த வரிசையில் நானும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று எங்க தாத்தா ஆசைப்பட்டார். அதனால் அவர் ஜோதிடரிடம் என்னுடைய ஜாதகத்தை எடுத்துக்காட்டி இருந்தார். உடனே அவர் பார்த்துவிட்டு இந்த பொண்ணு நடிகையாக தான் வரும் என்று சொல்லிவிட்டார்.

Jaishankar Baakiyalakshmi serial Vijay TV

குழந்தை நட்சத்திரம்

அதைக் கேட்டு வந்து என்னுடைய தாத்தாவிற்கு ரொம்பவும் சந்தோஷம். அதற்கு பிறகு நான் மதுரையில் பரதநாட்டியம் கற்றுக் கொண்டிருந்தேன். அப்போது அதற்கான அரங்கேற்றத்தில் நான் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்ததை பார்த்து யாரோ ஒருவர் பாலச்சந்தர் சாரிடம் சொல்லி இருக்கிறார்கள். அதன் மூலமாகத்தான் எனக்கு "உன்னால் முடியும் தம்பி" என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதலில் சூட்டிங் என்றதும் பிரம்மிப்பாக இருக்கும் நாம் திரையில் பார்த்த நடிகர்கள் எல்லாம் நேரில் பார்க்கப் போகிறோமே என்று சந்தோஷமாக போனேன்.

நடிகர் ஜெய்சங்கர் குடும்பம்

அதற்கு பிறகு சினிமாவில் எப்படி நடிக்க வேண்டும் என்று பல விஷயங்களை தெரிந்து கொண்டு இப்ப வரைக்கும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று அந்த பேட்டியில் நடிகை தாரணி பேசி இருக்கிறார். நடிகர் ஜெய்சங்கரின் சொந்த பெயர் சங்கர் தான் அவர் கும்பகோணத்தை சேர்ந்தவர். அதேபோல தாரணியின் சொந்த ஊரும் கும்பகோணம் தானாம். அவருடைய அம்மாவுக்கு தான் திருச்சியாம்‌. ஆனால் பிசினஸ்க்காக மதுரையில் வளர்ந்து இருக்கிறார்கள். ஜெய்சங்கர் தந்தை சுப்பிரமணியன் ஐயர் திருநெல்வேலியில் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+