என் பசங்களுக்கு எல்லாமே தெரியுது.. அவங்க தான் எனக்கே சொல்லி தராங்க! வெளிப்படையாக பேசிய ஜெயம் ரவி
சென்னை: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் பிரதர் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் பேட்டி ஒன்றில் தன்னுடைய மகன்கள் குறித்தும் தற்போதைய சூழ்நிலையில் தன்னை பற்றி பரவி வரும் வதந்தி குறித்தும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
எடிட்டர் மோகனின் மகனான ஜெயம் ரவி அவருடைய அண்ணன் ராஜா இயக்கிய ஜெயம் திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படம் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் திரைப்படங்களில் ஒன்று. சாதாரண ஒரு மனிதன் தனக்கும் தன்னை நம்பிய பெண்ணிற்கும் பிரச்சனை ஏற்படும் போது எப்படி அந்த சூழ்நிலையை கையாள்கிறான் என்று முதல் திரைப்படத்திலேயே காதல், சோகம், எமோஷனல் என ரசிகர்கள் மனதை பிடித்து விட்டார்.

அதனாலேயே இப்ப வரைக்கும் அவர் அவருடைய பெயருக்கு முன்பு அவர் நடித்த முதல் திரைப்படத்தின் பெயர் இடம் பிடித்திருக்கிறது. தொடர்ச்சியாக அந்த நேரத்தில் மூன்று படங்கள் செம ஹிட் ஆகிவிட்டது. இது அந்த நேரத்தில் எந்த நடிகரும் செய்யாத சாதனை தான். ஆனால் சமீபத்தில் அவருடைய திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி அடையாமல் போய்விட்டன.
அதற்கு காரணம் அவருடைய குடும்ப பிரச்சனை தான், அவருடைய மனைவி மற்றும் மாமியார் தலையீடு காரணமாக அவர்களுடைய புரொடக்ஷனில் ஜெயம் ரவி நடிக்க வேண்டியது இருந்ததால் அவரால் சரியாக திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க முடியாமல் ஆகிவிட்டது என்று சமீபத்தில் செய்திகளும் பரவி வருகிறது.
ஜெயம் ரவி பல வருடங்களாக சினிமாவில் இருந்து வருகிறார். ஆனாலும் அதிகமான சர்ச்சைகளில் சிக்கியது கிடையாது. எந்த நடிகைகளோடும் கிசுகிசுவில் இவர் பெயர் அடிபட்டது கிடையாது. ஆனால் சமீபத்தில் தான் சில மாதங்களாக அவருடைய குடும்பப் பிரச்சனை இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது. அவரும் அவருடைய மனைவி ஆர்த்தியும் விவாகரத்து செய்ய போகிறார்கள் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானதை தொடர்ந்து ஜெயம் ரவியும் அதை உறுதி செய்திருந்தார்.
ஆனால் அதை அவருடைய மனைவி மறுத்து இருந்தார். இந்த நிலையில் ஜெயம் ரவி இன்னொரு பாடகியுடன் தொடர்பில் இருக்கிறார் என்றும் கூறப்பட்டது. அதை ஜெயம் ரவி மறுத்து இருந்தார். இந்த பிரச்சனை ஒரு பக்கம் இருந்தாலும் அவர் நடித்த பிரதர் திரைப்படம் இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாக இருக்கிறது. இதற்கான பிரமோஷன் வேலைகளை ஜெயம் ரவி தீவிரமாக செய்து வருகிறார்.

அப்போது பேட்டிகளில் பேசி இருக்கிறார். அவரிடம் தனியார் youtube சேனலில் சமீபத்தில் உங்களைப் பற்றி அதிகமான வதந்திகளும், சர்ச்சைகளும் பரவி வருகிறது அதை நீங்கள் தைரியமாக எதிர்கொள்ளலாம் ஆனால் உங்களுடைய குழந்தைகள் அதை பார்க்கிறார்களே அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்க, அதற்கு ஜெயம் ரவி அவர்கள்தான் என்னைவிட அதிகமாக ஸ்ட்ராங்காக இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் யார் என்று தெரியும், என்னுடைய குடும்பத்தை பற்றியும் தெரியும்.
சமூக வலைத்தளத்தை அவர்கள் தான் அதிகமாக தெரிந்து வைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் ரீல்ஸ் போடுவது போல நம்மால் போட முடியவில்லை. அவர்கள் நம்மை விட அப்டேட் அதிகமானவர்களாக இருக்கிறார்கள். அதனால் இந்த விஷயத்தை அப்படி செய்திருக்கலாம், அந்த விஷயத்தை அப்படி செய்திருக்கலாம் என்று நமக்கு சொல்லி தருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் என்னுடைய மகன்களுக்கு நான் தான் ஹீரோ. வீட்டில் என்னை கிண்டல் செய்வார்கள் சில படங்களில் என்னுடைய நடிப்பை பார்த்து வியந்து போவார்கள். அதுபோல எனக்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது என்னுடைய பெற்றோர்கள் போலவே என்னுடைய மகன்களும் எனக்கு சப்போர்ட்டாக இருக்கிறார்கள். இதுவெல்லாம் ஒரு பிரச்சனையா பாத்துக்கலாம் பா என்று அவர்கள் பேசுவதை பார்க்கும் போது எனக்கு வியப்பாக இருக்கும் என்று ஜெயம் ரவி தன்னுடைய மகன்கள் குறித்து பெருமையாக பேசி இருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications