அந்த நேரத்தில் மாரிமுத்துவின் மகன் சொன்ன விஷயம்! நாமெல்லாம் ஒண்ணுமே இல்லை.. வேதனையோடு பேசிய நடிகர்
சென்னை: நடிகர் மாரிமுத்து சில தினங்களுக்கு முன்பு காலமானார். அவர் இறப்பதற்கு சில மணி நேரங்கள் முன்புவரைக்கும் நன்றாக பேசிக் கொண்டிருந்த மனிதர் திடீரென்று இல்லாமல் போனது அவருடைய குடும்பத்தினரை மட்டுமல்லாமல் அவருடைய நண்பர்கள் ரசிகர்களையும் பாதித்திருக்கிறது.
இந்த நிலையில் மாரிமுத்துவின் நெருங்கிய நண்பர் ஜீவா ரவி மாரிமுத்துவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த போன இடத்தில் அவருடைய மகன் சொன்ன வார்த்தைகளை குறித்து பகிர்ந்து இருக்கிறார்.

அத்தோடு மாரிமுத்துவை போலவே அவருடைய மகனும் அவ்வளவு மெச்சூர் ஆக பேசினார் என்றும் அதைப் பார்த்து நான் அதிசயப்பட்டுப் போனேன் என்று சொல்லி இருக்கிறார். அந்த வகையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
நடிகர் மாரிமுத்து மறைவிற்கு பிறகு அவருடைய நண்பர்கள் பலரும் அவரைப் பற்றி பல தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ஜீவா, ரவி சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் மாரிமுத்து ஒரு சொகுசு பங்களா ஒன்றை கட்டி வருகிறார். அந்த வீட்டில் தன்னுடைய மனைவிக்காக ஒரு தனி அறையை பார்த்து பார்த்து கட்டியதாகவும் என்னிடம் அவர் சொல்லி இருக்கிறார்.
அதேபோல அந்த வீட்டிற்குள் நீச்சல் குளம் வர இருப்பதாக மிகவும் சந்தோஷமாக ஜீவா ரவியிடம் பேசிக் கொண்டிருந்தாராம். ஆனால் அது எல்லாத்தையும் அனுபவிக்காமல் போய்விட்டாரே என்று ஜீவா ரவி கண்கலங்கி இருக்கிறார். அதோடு தான் அவர் இறந்த அன்று அஞ்சலி செலுத்த அவருடைய வீட்டிற்கு போய் இருந்தேன்.
அப்போது அவருடைய மகனை பார்த்து என்ன சொல்வது என தெரியாமல் நான் நின்றிருந்தேன். அப்போது மாரிமுத்துவின் மகன், "அப்பாவுக்கு அவ்ளோதான் இருந்திருக்கு. அதான் போயிட்டார். இனிமேல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்னுடைய குடும்பத்தை" என்று சொன்னார். அது மட்டும் அல்லாமல் அவர் எனக்கு பெண் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் நான் என் தங்கைக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று மாரிமுத்துவின் மகன் சொன்னாராம்
அதைக் கேட்டு ஜீவா ரவி அழுதுவிட்டாராம். அந்த இடத்தில் எந்த மகனாக இருந்தாலும் இப்படி பேச மாட்டான். ஆனால் மாரிமுத்துவின் மகன் இப்படி சொன்னது எனக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருந்தது என்று ஜீவா ரவி கூறி இருக்கிறார். அத்தோடு மாரிமுத்துவின் மகன் அகிலனிடம் நீ யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டிய நிலைமையில் உன் அப்பா உன்னை விட்டு செல்லவில்லை. அதனால் உன் அப்பாவின் இடத்தில் இருந்து உன் குடும்பத்தை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆறுதல் சொல்லிவிட்டு வந்தேன் என்று பேட்டியில் ஜீவா ரவி பேசியிருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications