"ஜீவனுள்ள" நடிகர் இப்படியா? 10 ரெட் புல் பீர், காடை பிரியாணி.. அது வேற.. தலையிலடித்து கொண்ட பிரபலம்
சென்னை: சின்ன சின்ன நடிகர்கள் செய்யும் அட்டகாசங்களால், ஒரு தயாரிப்பாளர் எதுக்காக செலவழிக்கிறார் என்பதே கணக்கில்லாமல் போய்விடுகிறது என்று பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பாலாஜி பிரபு மனக்குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார்.
தொடர்ந்து தயாரிப்பாளர்களின் வலியையும், வேதனையையும் மீடியாக்களில் பதிவு செய்து வருபவர் பாலாஜி பிரபு.. பிரபல தயாரிப்பாளரின் மகனாகவும் மட்டுமல்லாமல், தானே ஒரு தயாரிப்பாளராகவும் உள்ளதால், தயாரிப்பாளர்களின் கஷ்டத்தையும், நெருக்கடிகளையும், வேதனையுடன் கூறிவருகிறார். அந்தவகையில், தன்னுடைய பட தயாரிப்பின்போது நடந்த அனுபத்தின் வலியை மீண்டும் விரிவாகவே கூறியிருக்கிறார்.

Realone Media யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "பைரவன் படத்தில் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் 20 ஆயிரம் ரூபாய்.. என்னுடைய அப்பாதான் அந்த படத்தின் டைரக்டர்.. அதனால் அந்த சம்பளத்தை பற்றி அறிந்திருந்தேன்.. இதற்கு பிறகு, படிப்படியாக உயர்ந்து, தன்னுடைய சம்பளத்தையும் மெல்ல மெல்ல உயர்த்தினார் ரஜினிகாந்த்..
ஒருகட்டத்தில் 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார்.. ஒட்டுமொத்த பேரும் இதை ஆச்சரியமாக பார்த்தார்கள்.. அன்று 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியவர்கள் டி.ராஜேந்தர், ரஜினிகாந்த் இவர்கள் 2 பேரும்தான்.. இதற்குபிறகு ராமராஜன், ராஜ்கிரண் என அடுத்தடுத்த நபர்கள் 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார்கள்.. இப்போது எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது.. 100, 200 300 கோடி ரூபாய் என்று சம்பளம் எகிறிவிட்டது..
தயாரிப்பாளர்கள் என்ன கதி ஆவார்கள்
275 கோடி விஜய் சம்பளம் வாங்குகிறார் என்றால், அதற்கான வரியை யார் கட்டணும்? விஜய்தானே கட்டணும்? ஆனால் அந்த வரியையும் தயாரிப்பாளர்களே கட்டித்தர வேண்டியிருக்கு. இதுக்கே 30, 40 கோடி வந்துவிடுகிறது. அப்படியானால் விஜய்யின் மொத்த சம்பளம் 330 கோடியாகும். இப்படி நடிகர்கள் சம்பளம் வாங்கினால், தயாரிப்பாளர்கள் அந்த படத்துக்கு வைத்திருக்கும் முதலீடுகளையும் நடிகர்களுக்கே தரவேண்டியிருக்கு.
மற்றொருபுறம் நடிகர்களின் அட்ராசிட்டி அதிகமாக இருக்கு. ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள், எந்த பிரச்சனையும் தர மாட்டார்கள்.. யூனிட் சாப்பாடு தந்தாலும் அமைதியாக சாப்பிட்டு கொள்வார்கள். ஆனால், சின்ன சின்ன நடிகர்கள் செய்யும் அட்டகாசம் தாங்க முடியவதில்லை. இந்த சின்ன நடிகர்கள் திடீர் திடீர்னு சினிமாவில் துளிர் விட்டு வருவார்கள். என்னுடைய தயாரிப்பில் ஏற்பட்ட சம்பவத்தையே உதாரணமாக சொல்கிறேன்.
கொஞ்ச நஞ்ச அட்டகாசமா
தோட்டா என்ற படத்தை நாங்கள் தயாரித்தோம். அதில் ஜீவன் என்ற நடிகரை புக் செய்தோம்.. அப்போது 4 லட்சம் அவருக்கு சம்பளம் பேசப்பட்டு, படத்தை எடுத்துக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் திருட்டு பயலே, நான் அவன் இல்லை என்று 2 படங்கள் வெளிவந்து ஹிட்டாகிவிட்டது. உடனே ஜீவன் செய்த அட்டகாசத்தை சொல்லி மாளாது.. கொஞ்சம் நஞ்சம் அட்டகாசம் செய்யல.. திடீர்னு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் எங்களிடம் கேட்கிறார்.
எப்படி தர முடியும்? நாங்கள் ஏற்கனவே பட்ஜெட் போட்டு ஒரு படத்தை எடுத்து கொண்டிருக்கும்போது, திடீர்னு ஒன்றரை கோடி, 2 கோடி சம்பளம் கேட்டால் எப்படி சரியாகும்? படத்தை எடுத்து கொண்டிருக்கும்போது, இப்படி நடுவில் நுழைந்து கேட்கவே கூடாது. 4 லட்சம் சம்பளத்துக்குதான் அக்ரிமென்ட் ஏற்கனவே தெளிவாக போட்டிருக்கு..
10 ரெட்புல் - காடை பிரியாணி
இந்த ஷூ வாங்கி தந்தால் நன்றாக இருக்கும், இந்த ஜீன்ஸ் வாங்கி தந்தால் நல்லா இருக்கும் என்று ஆரம்பத்தில் எங்களிடம் வேண்டுகோள் விடுத்து கேட்டு கொண்டிருந்தவர், திடீர்னு, "இந்த பிராண்டில் இது வேண்டும்" என்று ஆர்டர் போட ஆரம்பித்துவிட்டார். தினமும் 10 ரெட் புல் கேட்பார்.. ஒருநாளைக்கு 2 ரெட் புல் மேல் சாப்பிடக்கூடாது என்பார்கள்.. ஆனால், 10 ரெட் புல் வந்தாக வேண்டும் என்பார்..
அதிக வசதியுள்ள கேரவன் வேண்டும் என்று அடம் பிடித்தார்.. காடை பிரியாணி வாங்கிட்டு வந்து தந்தால்தான் மதியம் சாப்பிடுவார்... இந்த மாதிரி அட்டகாசங்களை செய்தால், ஒரு தயாரிப்பாளர் எதுக்காக செலவழிக்கிறார் என்பதே கணக்கில்லாமல் போய்விடுகிறது" என்றெல்லாம் வேதனையை பகிர்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications