Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுந்தரி சீரியல் கேப்ரில்லாவிற்கு எளிமையான வளைகாப்பு நடத்திய வில்லன் நடிகர்.. இப்படி ஒரு பந்தமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடித்த கேப்ரில்லாவிற்கு வில்லன் நடிகர் வளைகாப்பு நடத்தியிருக்கிறார். எளிமையாக அவருக்கு நடந்த வளைகாப்பு வீடியோவை கேப்ரில்லா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் சில செயலிகள் மூலமாக சிலருடைய வாழ்க்கை மொத்தமாக மாறி இருக்கிறது. சினிமாவில் தங்களுடைய திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்று காத்திருக்கும் பலர் டிக் டாக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் வீடியோ வெளியிட்டு தங்களுடைய திறமையை வெளிக்காட்டி வந்தனர். அதில் மூலமாக பலருக்கு சினிமா மற்றும் சீரியல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த வரிசையில் நடிகை கேப்ரில்லாவும் ஒருவர்.

Sun TV Gabriella sellas

கேப்ரில்லா டிக் டாக் ஆக்டிவாக இருந்த காலகட்டத்தில் கதை சொல்லலாமா என்று கவிதை நடையில் கதை சொல்லி ரசிகர்களை கவர்ந்திருந்தார். அதைப் போல டான்ஸ் நடிப்பு என்று பல வீடியோக்களையும் அப்லோடு செய்து கொண்டிருந்தார். அதன் மூலமாக அவருக்கு அடுத்தடுத்த சினிமா வாய்ப்புகளும் கிடைக்கத் தொடங்கியது.

அதிலும் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் அவரால் அதிக நாட்கள் தொடர முடியவில்லை. பாதியிலே அவர் வெளியேற்றப்பட்டார். அதற்குப் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானார்.

Sun TV Gabriella sellas

பொதுவாக சீரியலாக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி சிவப்பு வண்ணத்தில் இருந்தால் தான் கதாநாயகி என்ற எழுதப்படாத விதி இருப்பதை கேப்ரில்லா உடைத்திருந்தார். இவருடைய அழகு மற்றும் திறமை தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதனாலேயே சுந்தரி சீரியல் அதிக நாட்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்தது.

Sun TV Gabriella sellas

ஆயிரம் எபிசோடுகளை தாண்டிய சுந்தரி சீரியல் சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்புதான் முடிவுக்கு வந்தது. சுந்தரி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது சில திரைப்படங்களிலும் கேப்ரில்லா நடித்திருந்தார். அதுவும் அவருக்கு பிரபலத்தை கொடுத்து இருந்தது. அதுபோல சினிமா வாய்ப்புக்காக முயற்சி செய்து கொண்டிருந்தபோதே அவருக்கு உதவி செய்த சுருளி என்பவரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

கேப்ரில்லா தன் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம் தன்னுடைய கணவர்தான் என்று பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். அதுபோல சில மாதங்களுக்கு முன்பு இவர் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்யப் போகிறார் என்ற வதந்திகள் பரவி வந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தன்னுடைய கணவரோடு மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.

Sun TV Gabriella sellas

அதுபோல தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சி செய்தியையும் பகிர்ந்து இருந்தார். அந்த நேரத்தில் தான் சுந்தரி சீரியல் முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து சென்னையில் இருந்து தன்னுடைய சொந்த ஊருக்கு சென்ற கேப்ரில்லா அங்கு ஃபோட்டோ ஷூட் நடத்தி சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் சுந்தரி சீரியலில் கேப்ரில்லாவிற்கு கணவராகவும் வில்லனாகவும் நடித்த ஜிஷ்ணு மேனன் நேரில் சந்தித்து எளிமையாக வளைகாப்பு நடத்தி இருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை கேப்ரில்லா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து "உறவுகளுக்கு உண்மையுள்ள அண்ணனின் என்றும் நீ சிறந்த அண்ணன்" என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். சீரியலில் கேப்ரில்லாவை பழிவாங்க துடித்த கேரக்டரில் நடித்த ஜிஷ்ணு நிஜத்தில் இப்படிப்பட்டவரா? என்று ரசிகர்கள் கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+