பிரபல நடிகர் "கார்த்திக்”.. அந்தப் பிரச்சனை வேற இருக்கு.. காணாமல் போக இதுதான் காரணமா?
சென்னை: தமிழ் சினிமாவின் நவரச நாயகன், ஆண்களே காதல் கொள்ளும் ஆணழகன் என்று புகழப்பட்ட நடிகர் கார்த்திக் முன்னணி நடிகராக உருவானது பற்றியும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பிரபல சினிமா விமர்சகர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
இதுபோல கார்த்திக் தன்னுடைய சினிமா கேரியரை அவரே எப்படி கெடுத்துக் கொண்டார் என்பது பற்றியும் அந்த வீடியோவில் அவர் பேசியிருக்கிறார்.
அதில் பல விஷயங்கள் கார்த்திக் பற்றி ஏற்கனவே பலர் அறிந்திருந்த ரகமாக இருந்தாலும் பல புதிய தகவல்களும் கேட்பவரையும் பார்பவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது.

பொதுவாக இயக்குனர் பாரதிராஜாவின் கதாநாயகன் தேர்வு வித்தியாசமாக இருக்கும். களத்தில் இருந்து தான் கதை நாயகர்களை அவர் தேர்ந்தெடுத்து உருவாக்குவார்.உதாரணத்திற்கு மீனாட்சி அம்மன் கோவில் அருகே வளையல் கடை வைத்திருந்த ஒரு சாதாரண வளையல் வியாபாரி பாண்டியனை தான் தன்னுடைய மண்வாசனை படத்தில் கதை நாயகனாக அறிமுகப்படுத்தினார்.
அப்படித்தான் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த இடத்திற்கு அருகில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனான முரளியை கார்த்திக்கை எதேச்சையாக பார்த்து தன்னுடைய கதைக்கு பொருத்தமாக இருப்பார் என கணித்து தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க அவருடைய அப்பா முத்துராமனிடம் கேட்டுள்ளார். பாரதிராஜா கேட்டால் முடியாது என்று சொல்ல முடியுமா..!!உடனே சம்மதித்து விட்டார் முத்துராமன்.
முதல் படம் அலைகள் ஓய்வதில்லை செம ஹிட் அடித்தது. கொஞ்ச நாட்களில் கார்த்திக்கின் தந்தையார் முத்துராமனும் இறந்து விடுகிறார். இதனால் அவருக்கு வழிகாட்ட சரியான ஆளில்லாமல் அடுத்தடுத்து படங்களை கதை தேர்வு செய்ய தெரியாமல் தோல்வி படங்களாக கொடுத்து துவண்டு விடுகிறார்.
வீட்டில் சும்மா இருந்தவரை நல்லவனுக்கு நல்லவன் படத்தில் மிகவும் சிரமப்பட்டு கார்த்திக்கை நடிக்க சம்மதிக்க வைத்து ரீ என்ட்ரி கொடுக்க வைத்தது ஏவிஎம் நிறுவனம்.பிரபல தயாரிப்பாளர் தமிழ் மணி தயாரிப்பில், எம் எஸ் முரளி இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் உருவான சோலைக்குயில் படம் பெரும்பாலும் ஊட்டி பகுதிகளில் வைத்து படம்பிடிப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்தப் படத்திற்கு அதே பகுதியை சேர்ந்த பெண்ணே கதாநாயகியாக நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று இயக்குனர் விரும்பினார். அப்படி தேடி கண்டுபிடித்து நடிக்க வைக்கப்பட்டவர் தான் அந்தப் பகுதி படுகர் இனத்தைச் சேர்ந்த ராகினி. மிகவும் கட்டுப்பாடான பழங்குடியின மக்கள் படுகர் இன மக்கள் ஆவார்கள்.

எனவே ராகினியும் அவ்வளவு எளிதில் நடிக்க சம்மதிக்கவில்லை. ராகினியும் ஏற்கனவே கார்த்திக் ரசிகையாக இருந்ததால் கொஞ்சம் சிரமப்பட்டு இயக்குனர் பேசி சம்மதிக்க வைத்து நடிக்க வைத்தார்.பெரும்பாலும் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் கிசுகிசுக்கபடும் கார்த்தி சோலைக்குயில் படத்தில் போதும் ராகினி உடன் கிசுகிசுக்கப்பட்டார்.
ஆனால் அது கிசுகிசுவோடு நிற்காமல் ஜாதி பிரச்சனை அந்த பிரச்சனை இந்த பிரச்சனை என்று பல பிரச்சனைகளைத் தாண்டி திருமணத்தில் முடிந்தது.சில நாட்கள் கழித்து ராகினியின் தங்கையையும் கார்த்திக் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டார் என்ற வதந்தி பயங்கரமாக பரவியது.
இது குறித்து ஒருமுறை நிருபர்கள் நடிகர் கார்த்தியிடம் கேட்ட பொழுது நான் யாரையும் வலுக்கட்டாயமாக திருமணம் செய்யவில்லை என்றும் இந்த திருமணம் என் மனைவியின் சம்மதத்துடன் தான் நடைபெற்றது என்று கூறி அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மௌன ராகம்,அக்னி நட்சத்திரம் போன்ற சிட்டி லைஃப் படங்களிலும், பொன்னுமணி,கிழக்கு வாசல் போன்ற கிராமத்து நாயகன் கதையிலும் பட்டையை கிளப்பி ரஜினி, கமலுக்கு போட்டியாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார்.
ஆனால் மது பழக்கம், சூட்டிங்கிற்கு சரி வர வராத காரணம் போன்றவற்றால் சினிமாவில் தன்னுடைய இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்தார். ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்த நாயகனாக தன்னை காட்டிக்கொண்டதும் அவர்களுக்காக ஒரு கட்சியை ஆரம்பித்ததும் ஒரு சிறந்த நடிகனின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாகவும் இருந்தது என்று அந்த வீடியோவில் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications