கோமணத்தோட Introduce ஆன ஒரே ஹீரோ நான் தான்.. என் அப்பாவின் கடைசி மகிழ்ச்சி இதுவே: எமோஷனல் கார்த்திக்
சென்னை: பிரபல நடிகர் கார்த்திக், பல வருடங்களுக்கு முன்பு ஜெயா டிவியில் பிரத்யேக பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. நடிகர் சின்னி ஜெயந்த் கார்த்திக்கை பேட்டி எடுத்திருந்தார்.. இந்த பேட்டி இப்போது திடீரென இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் கார்த்தி தெரிவித்திருக்கும் பலவிஷயங்கள், அவரது ரசிகர்களை வெகுவாக ஈர்த்துவருகிறது. பேட்டியின்போது சின்னி ஜெயந்திடம் கார்த்தி பகிர்ந்து கொண்ட தகவல்களின் சுருக்கம்தான் இது:
"நடிகர்களின் வரலாற்றிலேயே இல்லாத ஒரு விஷயம், கோமணத்துடன் அறிமுகமான ஹீரோ நான்தான் போலும்.. அலைகள் ஓய்வதில்லை படத்தின் முதல் காட்சியாக அதைதான் எடுத்தார்கள்.. அந்த கோமணமும் தண்ணீரில் தொலைந்துவிடும்.. அலைகள் ஓய்வதில்லை படம் பெரிய ஹிட்டாகி ராதாவுக்கு படங்கள் குவிந்துவிட்டது.. எனக்கு 2 மாதங்களுக்கு படமே வரவில்லை..

கோமணம் கட்டி நடித்தேன்
அதனால் நான் மறுபடியும் காலேஜூக்கே படிக்க போய்விட்டேன்.. காரணம், என்னுடைய வயது, தோற்றம் அப்படியிருந்தது..
எனக்கு எந்தவிதமான ரோல் கொடுப்பதென்றே தெரியவில்லை. பெரிய ரோல் தரும் அளவுக்கு எனக்கு வயதும் இல்லை.. அதற்கு பிறகுதான் இளஞ்ஜோடிகள் படம் கமிட் ஆனேன்.. ஆனால், படம் ரிலீஸ் ஆகி அடுத்த 90 நாளில் என்னுடைய அப்பா இறந்துவிட்டார்.. ஆனால், அவருக்கு கிடைத்த ஒரே சந்தோஷம், தன் மகன் நடித்த படத்தை கடைசியாக பார்த்துவிட்டார்..
தெலுங்கு ரசிகர்கள்
ஒருமுறை தெலுங்கு சினிமாவில் என்னை பேட்டி எடுத்தார்கள்.. நீங்கள் ஏன் தமிழுக்கு போனீங்க? தெலுங்கில்தானே முதலில் அறிமுகமானீங்க? என்று கேட்டனர்..
அதற்கு நான் இல்லையே, தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் அந்த படத்தில் அறிமுகமானேன் என்றேன்..
உடனே அவர்கள், தமிழுக்கு நீங்கள் போயிருக்கவே கூடாது சார், அவங்களுக்கு உங்களை மதிக்கவே தெரியல.. தெலுங்கில் இருந்திருந்தால் உங்கள் ரேஞ்சே வேற" என்று இப்படியே ஆன் ஃபேஸ் நேரடியாக சொல்லிவிட்டாங்க..
சுத்த தமிழன் என்பதால், நான் விட்டால் போதும் என்று ஓடிவந்துவிட்டேன்.. ஆனால், இப்படி கேட்டது அங்குள்ள பத்திரிகையாளர்கள்தான்.. அவர்கள் என்னை இந்த அளவுக்கு நேசிப்பது மகிழ்ச்சியாக இருந்தது.. தொழிலை நன்றாக ரசிக்கிறார்கள் என்பது தெரியவந்தது.
தனித்துவமான குரல்
என்னுடைய குரல் தனித்துவமாக உள்ளதாக பலரும் சொல்வார்கள்.. உண்மையை சொல்ல வேண்டுமானால், ஆரம்ப கால படங்களில், நான் எமோஷனல் ஆகி அழுத்தமாக டயலாக் பேசினால், என் அப்பா பேசுவது போலவே குரல் இருக்கும்..
அப்படி இருந்துவிடக்கூடாது என்பதற்காகவே, எமோஷனல் கொஞ்சம் குறைந்தாலும் பரவாயில்லை என்று குரலை வலிந்து மாற்றி கொண்டேன்.. அப்படி மாற்றப்போய், கடைசியில் அது வேறு மாதிரியாக போய்விட்டது. மற்றபடி திட்டமிட்டு என் குரலை மாற்றவில்லை.. அது தானாகவே யதேச்சையாக அமைந்துவிட்டது.
மம்முட்டி ரோல்
ஆரம்பத்தில் நிறைய பண்ணக்கூடாத ரோல்களில் படங்களில் நடித்தேன்.. அந்த நேரத்தில் ஒரு நல்ல படம் எனக்கு கிடைத்தது.. அதியொழுக்குகள் என்ற மம்முட்டி நடித்த மலையாள படம் பார்த்தேன்.. அதில் மம்முட்டி அவருடைய வயதுக்கேற்ற ரோலில் சூப்பராக நடித்திருந்தார்.. அப்போதும் நான் கல்லூரி படித்து கொண்டு, படங்களில் நடித்து கொண்டிருந்தேன்
இந்த படத்தை பாலச்சந்தரின் கவிதாலயா சார்பில் தமிழில் எடுக்க முடிவாகி, மம்முட்டி ரோலில் என்னை நடிக்க வேண்டும் என்றார்கள்..
100 நாளை தாண்டிய வண்ணக் கனவுகள்
அப்போது எஸ்பி முத்துராமனுடன் சாமி என்ற நபர் கூடவே இருப்பார்.. அவர் என்னிடம் "இந்த கேரக்டரை உன்னால் செய்ய முடியாது, குருவி தலையில் பனங்காய் வைத்த மாதிரி இருக்கும்" என்றார்.
உடனே நான், என்னால் நடிக்க முடியும். என்று நம்பிக்கையுடன் சொன்னேன்.. அந்த படம் 100 நாளை தாண்டி ஓடியது.. படத்தின் 100வது நாள் விழாவில் பாலச்சந்தர் பேசும்போது, மம்முட்டி 100% என்றால், கார்த்திக் 110% என்று பாராட்டி பேசினார்.. அப்போது நான், எங்கே அந்த சாமி? என்று மேடையில் தேடிப்பார்த்தேன். அந்த வெற்றிப்படம்தான், அமீர்ஜான் சார் இயக்கிய வண்ணக் கனவுகள்"என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications