விஜய்க்கு வர்ற கூட்டத்தை நம்ப முடியுமா? அரசியல் எளிமையானது இல்ல.. நடிகர் கருணாஸ் பேட்டி
சென்னை: நடிகர் கருணாஸ் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது குறித்து தன்னுடைய கருத்தை வெளிப்படையாக பேசி இருக்கிறார். அதில் அரசியல் அவ்வளவு எளிமையானது கிடையாது. ஒரு நடிகருக்கு வரும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்து வெற்றியை முடிவு செய்ய முடியாது என்றும் மேலும் சில விஷயங்களையும் பகிர்ந்து இருக்கிறார்.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கிக் கொண்டிருக்கிறார். அதில் சில தினங்களுக்கு முன்பு அவர் தன்னுடைய தமிழகம் முன்னேற்றக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்திருந்தார். அதற்குப் பிறகு அந்த கொடி குறித்து அதிகமான சர்ச்சைகளும், பிரச்சனைகளும் வெடித்துக்கொண்டே இருக்கிறது.

அதே நேரத்தில் விஜய்யின் அரசியல் எப்படி இருக்கும் என்றும் பலரும் விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகராகவும் அரசியல் பிரமுகராகவும் இருக்கும் கருணாஸ் விஜய்யின் அரசியல் முடிவு குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் விஜய்யை சுட்டிக்காட்டி உங்களை ரசிகர்கள் வேடிக்கையாக பார்ப்பது வேறு, ஓட்டு போடுவது வேறு. இதுவரைக்கும் வேற ஒரு சின்னத்துக்கே ஓட்டு போட்டு பழகுன ஒருத்தங்களை திடீரென்று மாற்றி வேறு ஒரு சின்னத்துக்கு ஓட்டு போடுவது லேசான காரியம் கிடையாது.
விஜய் பெரிய நடிகரா அல்லது உதயநிதி பெரிய நடிகரா என்று கேட்டால் விஜய் தான் பெரிய நடிகர். அதே நேரத்தில் அரசியலில் யார் பெரியவங்க என்று கேட்டால் அது உதயநிதி தான். சினிமாவில் இருப்பவர்களும் அரசியலில் சாதித்திருக்கிறார்கள். அதற்கு உதாரணமாக எம்ஜிஆரை கூட சொல்லலாம். ஆனால் எம்ஜிஆரின் அரசியலை ஆரம்பத்தில் இருந்தே பார்க்க வேண்டும்.
எம்ஜிஆருக்கு வருகிற கூட்டம் மாதிரி விஜய்க்கு கூட்டம் வருவதால் விஜய் கண்டிப்பா அரசியலில் அவர் நினைத்தே இடத்தை அடைவார் என்று சொல்வதெல்லாம் முட்டாள்தனம். வடிவேலு சார் ஒரு முறை அரசியலுக்கு போறேன்னு கிளம்புறாரு, அவ்வளவு கூட்டம் வந்துச்சு. ஆனா அது ஓட்டாக மாறவில்லை. விஜய்க்கு திடீர்னு ஏன் சார் அரசியல்? இவ்வளவு வருஷமா எங்க இருந்தீங்க? எவ்வளவு பிரச்சனைகள் நடந்துச்சு அப்போ எதற்குமே அவர் குரல் கொடுக்கலையே?
இன்னைக்கு திடீர்னு வந்து அரசியல் பண்ண போறேன்னு சொன்னா என்ன அர்த்தம்? ஜெயலலிதா அம்மாவ பாக்குறதுக்கு போனாரு ஆனா அம்மா அவங்கள பார்க்க கூட இல்ல. யாரு கட்சி ஆரம்பிச்சாலும் கொடி பிடிக்க தமிழன் தயாராக இருப்பான்... ஆனால் அரசியல் அவ்வளவு எளிமையானது கிடையாது என்பதைத்தான் நான் விஜய் கிட்ட சொல்லணும் என்று அந்த பேட்டியில் கருணாஸ் பேசி இருக்கும் நிலையில் இது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
-
கள்ளச்சாராயம் ஒழிக்க தனிப்படை.. கள்ளக்குறிச்சியில் விஜய் அரங்கேற்றும் மாற்றம்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
“திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கையேந்தி, கெஞ்சி ஆட்சி அமைத்துள்ளார் விஜய்”.. டிடிவி தினகரன் தாக்கு! -
டாஸ்மாக் கடையை மூட மறுக்கும் விஜய் அரசு.. களத்தில் குதித்த தூத்துக்குடி மக்கள்! ரொம்ப தப்புங்க! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
விஜய் ஸ்டைல் அரசியல்! கச்சிதமாக காய் நகர்த்தும் அண்ணாமலை.. உருவாகும் புது அரசியல் சக்தி? -
வாழ்க்கை ஒரு வட்டம் சார்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ.. தவெக தொண்டர்களின் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications