நீ மதத்தை கல்யாணம் பண்ண போறியா? எனக்கு 25 வருஷம் ஆகிடுச்சி.. பட்ட கஷ்டம்.. நடிகர் கருணாஸ் எமோஷனல்
சென்னை: நடிகர் கருணாஸ் சமீபத்தில் தன்னுடைய மனைவியோடு பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கும் நிலையில் அப்போது தங்களுடைய திருமண வாழ்க்கை குறித்தும் ஆரம்ப காலகட்டத்தில் தாங்கள் பட்ட கஷ்டங்கள் குறித்தும் பேசி இருக்கிறார்.
அதோடு தான் இன்னொரு மதத்தை சார்ந்த பெண்ணை திருமணம் செய்து இருப்பது குறித்து பலர் கேலி செய்து வருவதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
தன்னுடைய மனைவியின் மீதும் தனக்கு இருக்கும் காதல் குறித்தும் தங்களுடைய திருமணம் எப்படி நடந்தது என்பது பற்றியும் அந்த பேட்டியில் கருணாஸ் பேசி இருக்கிறார்.

கருணாஸ் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளர், பாடகர், அரசியல் பிரமுகர் என பல வகையில் பிரபலமாக இருக்கிறார். அதுபோல கருணாஸின் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள குருவிக்கரம்பை எனும் கிராமம்தானாம். ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக சினிமாவில் அறிமுகமாகி பிறகு கதாநாயகனாக பிரபலமாகி இருந்தார்.
ஆனால் ஆரம்பத்தில் பாடகராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார். அதோடு முக்குலத்தோர் புலிப்படை எனும் அரசியல் கட்சியின் தலைவராகவும் இருக்கும் இவர் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று இரட்டை இலை சின்னத்தில் போட்டி போட்டு வெற்றியும் பெற்றிருந்தார்.
இந்த நிலையில் அரசியல் பிரமுகராகவும் நடிகராகவும் ஜொலித்துக் கொண்டிருக்கும் நிலையிலும் தன்னுடைய மகள் திருமணத்தின்போது தன்னை பற்றி பலர் விமர்சித்த விதம் குறித்து தற்போது பேட்டியில் பேசி இருக்கிறார். அதாவது நான் இந்து மதத்தை சார்ந்தவர். ஆனால் நான் காதலித்து திருமணம் செய்து கொண்ட என்னுடைய மனைவி கிரேஸ் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்.
நாங்கள் இருவருமே எங்களுடைய மனதுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நான் தினமும் காலையில் என்னுடைய குலதெய்வ சாமியையும் ஊரில் உள்ள மொத்த சாமி புகைப்படத்தை எங்க அம்மா வீட்டில் வைத்து இருக்காங்க அதையெல்லாம் கும்பிடுவேன். என்னுடைய மனைவி அவருக்கு பிடித்த மாதிரி பிரேயர் பண்ணுகிறார் அவ்வளவுதான்.
ஆனால் இதை சிலர் அசிங்கமாக திட்டுகிறார்கள். இதை எதுக்காக செய்யணும்? நீ பொண்டாட்டியை கல்யாணம் பண்ணிக்க போறியா? இல்ல மதத்தை கல்யாணம் பண்ணிக்க போறியா? என்னை பாத்து சிலர் இவனெல்லாம் ஒரு அமைப்பின் தலைவரா? வீட்டுல பொண்டாட்டியே இவன் பேச்சைக் கேட்கல என்று சிலர் சொல்றாங்க.
எங்க குழந்தைகளுக்கு எங்களுக்கு பிடிச்ச மாதிரி பெயர் வைத்திருக்கிறோம். அவங்களுக்கு பிடிச்ச மாதிரி கல்யாணம் பண்ணி வச்சிருக்கோம். அதுல அடுத்தவங்களுக்கு என்ன கஷ்டம்னு எனக்கு தெரியல. நான் என் பொண்ணு கல்யாணத்தை கிறிஸ்தவ முறைப்படி செஞ்சதால பல சர்ச்சைகள் எழுந்தது.
நான் இப்படி தப்பா பேசுறவங்களுக்கு ஒன்னே ஒன்னு தான் சொல்லிக்க விரும்புறேன். நான் ஆசைப்பட்ட மாதிரி கல்யாணம் பண்ணி என் பொண்டாட்டி கூட சந்தோசமா வாழ்ந்துகிட்டு இருக்கேன். எனக்கு கல்யாணம் ஆகி 25 வருஷமா என் வாழ்க்கை மகிழ்ச்சியா போய்க்கிட்டு இருக்கு. அதுல என்ன ஏதுன்னு எட்டி பார்த்துகிட்டு குறை சொல்லிக்கிட்டு இருக்கிற அவசியமே இல்ல.
அவங்கவங்க வேலையை பார்த்தால் போதும் என்று அந்த பேட்டியில் நடிகர் கருணாஸ் பேசி இருக்கிறார். அத்தோடு ஆரம்ப காலகட்டத்தில் நான் காதலிச்சு திருமணம் செய்யும்போது பட்ட கஷ்டங்கள் எல்லாம் அதிகம் தான். கல்யாணத்துக்கு முன்னாடி குடும்பத்தை எப்படி ரன் பண்ண போறோம் என்கிற கேள்வி எனக்கு வரல.
ஆனா அதற்குப் பிறகு ஆரம்பத்தில் கஷ்டப்பட்டாலும் நாங்களாக உழைத்து இந்த அளவிற்கு முன்னுக்கு வந்திருக்கோம். கல்யாணத்தின் போது நான் ஒரே ஒரு பைக் மட்டும் தான் வைத்திருந்தேன். அதுவும் இஎம்ஐ போட்டு தான் வைத்திருந்தேன். ஆனாலும் என்னுடைய மனைவி என்னை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டா, அதனாலேயே இத்தனை வருஷமா அவளை சந்தோஷமா வச்சிருக்கேன்.
இத்தனை வருஷத்துல ஒரு நாள் கூட என் மனைவியை கை நீட்டி நான் அடிச்சது கிடையாது. எனக்கு எவ்வளவோ கோபம் வரும். அதை டிவிலயும் ரிமோட்டில் தான் காட்டுவேன் என்று அந்த வீடியோவில் தன்னுடைய காதல் கதையை பற்றியும்
கருணாஸ் கூறி இருக்கிறார்.
-
Vadivelu: இதனால் தான் விவேக் இறப்புக்கு கூட போகல.. கண்கலங்க பேசிய நடிகர் வடிவேலு -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications