சிறகடிக்க ஆசை சீரியல் நடிகரை பாராட்டிய கவுண்டமணி.. அடடே விஷயம் இதுதானா? இப்படி ஒரு டுவிஸ்ட்டா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் நடிகர் ஒருவரை நடிகர் கவுண்டமணி தன்னுடைய திரைப்படத்தில் நடிக்கும் போது பாராட்டி இருக்கிறார் அது குறித்து சீரியல் நடிகர் பேசிய வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடிக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை பெற்று இருக்கின்றனர். அதிலும் இந்த சீரியலில் மீனா மற்றும் முத்துவாக நடிக்கும் நடிகர் வெற்றி வசந்த் மற்றும் கோமதி பிரியாவிற்கு அதிகமாக ரசிகர்கள் இருக்கின்றனர்.

அவர்களை தொடர்ந்து ரோகிணி-மனோஜ், ஸ்ருதி- ரவி என எல்லோருக்கும் தனித்தனியாக ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இவர்கள் சீரியலை தாண்டி சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருக்கின்றனர். அதோடு சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் ரீல்ஸ் வீடியோக்களையும் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். அதனாலேயே அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தெரிந்து விடுகிறது. அதுபோல இந்த சீரியலில் முத்துவின் நண்பராக செல்வம் கேரக்டரில் நடிக்கும் நடிகர் பழனியப்பன் சீரியல் குறித்த அப்டேட் அடிக்கடி கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.
பழனியப்பன் ஏற்கனவே விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அதுபோல 50க்கும் மேற்பட்ட சீரியல்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறார். திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதுபோல நடிகர் கவுண்டமணி நடித்த "ஒத்த ஒட்டு முத்தையா" என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அப்போது ஒரு நீண்ட டயலாக்கை ஒரே டேக்கில் பழனியப்பன் சொல்லி முடித்து விட்டாராம்.
அதை பார்த்த கவுண்டமணி சூட்டிங் ஸ்பாட்டில் பழனியப்பனை கூப்பிட்டு பாராட்டி இருக்கிறார். உன்னுடைய திறமைக்கு உனக்கு சினிமாவில் நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று பாராட்டி இருக்கிறார். அது குறித்து சமீபத்தில் பழனியப்பன் பேட்டி ஒன்றில் நிகழ்ச்சியோடு பகிர்ந்து இருக்கிறார். அதுபோல பழனியப்பனின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தான். அவர் சினிமா வாய்ப்புக்காக சென்னைக்கு வந்து இருந்த நிலையில் அவருடைய குடும்பம் நாகர்கோவில் தான் வசித்து வருகிறதாம்.
அதே நேரத்தில் செல்வம் மற்றும் முத்துவின் நட்பும் அதிகமான ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு முத்துவின் அப்பா ஹாஸ்பிடலில் இருக்கும்போது முத்து பீஸ் கட்ட பணம் இல்லாமல் இருக்கும்போது செல்வம் தான் வண்டிக்கு டியூ கட்ட வைத்திருந்த பணத்தை கொடுத்து உதவியது... பிறகு செல்வத்தை தன்னுடைய மனைவியின் தம்பி அதாவது சத்தியா அடிக்கும் போது தன்னுடைய நண்பனுக்காக முத்து சத்யாவின் கையை உடைத்தது போன்று இவர்கள் இருவருக்கும் இருக்கும் பாண்டிங் அதிகமான ரசிகர்களால் பாராட்டப்பட்டு கொண்டிருக்கிறது.
-
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு இவ்வளவு பெரிய சோதனையா? பைனான்சியர் சொன்ன கண்டிஷன்.. நெஞ்சுவலியில் அண்ணாமலை -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications