நடிகர் கவுண்டமணி கழுத்தில் இருக்கும் அந்த செயின்.. எந்த படத்திலும் கழட்டாத காரணம் இதுதானா?
சென்னை: நடிகர் கவுண்டமணி பல வருடங்களுக்குப் பிறகு ஒத்த ஓட்டு முத்தையா என்று திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கான டப்பிங் பணிகளில் சமீபத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கவுண்டமணி பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் நடிகர் கவுண்டமணி கழுத்தில் ஒரு செயின் எப்போதும் இருக்கும் அதை எந்த படத்திலும் நான் கழட்ட மாட்டேன் என்று கவுண்டமணி கூறி விடுவார்.. அதற்கு காரணம் என்ன தெரியுமா என்று சில விஷயங்களை செய்யாறு பாலு பகிர்ந்து இருக்கிறார் அந்த அது பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் நாடக கலைஞராக இருந்த "கவுண்டர்" மணி திரைப்படத்தில் பாக்யராஜ் மூலமாக பாரதிராஜா திரைப்படத்தில் "கவுண்டமணி" ஆக மாறி முன்னணி கதாநாயகர்கள் கூட இவருடைய கால் சீட்டுக்காக காத்திருந்த கதை எல்லாம் உண்டு. அந்த வகையில் பெரிய அளவில் திரைத்துறையில் புரட்சியை செய்த கவுண்டமணி ஒரு நடிகராக மட்டுமல்லாமல் டெக்னீசியனாகவும் பல விஷயங்களை தெரிந்து வைத்திருந்தாராம்.
சில காட்சிகள் எடுக்கும் போது இதோட காமெடி முடிந்து விட்டது என்று சரியாக அறிவுறுத்தி விடுவாராம். அது குறித்து இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி இருந்தார். அதாவது இயக்குனர் ஏ.வெங்கடேசன் இயக்கத்தில் மகாபிரபு திரைப்படத்தில் நடிகர் கவுண்டமணியும் சரத்குமார் ரோடு நடித்திருப்பார். அப்போது ஒரு காட்சியில் ஏ.வெங்கடேஷ் சில விஷயங்களை சொல்ல அதற்கு கவுண்டமணி அதில் குறிப்பிட்ட இடத்திலேயே இந்த இடத்தில் காமெடி முடிந்துவிட்டது என்று கூறியிருந்தாராம்.
ஆனால் வெங்கடேஷ் இல்லை இன்னும் கொஞ்சம் இருக்கிறது என்று சொல்ல அதற்கு மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் அப்படியா சரி என்று கவுண்டமணியும் நடித்து கொடுத்து விட்டாராம். ஆனால் எடிட்டிங் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது தேவையில்லாத காட்சிகளை எடிட் செய்து தூக்கிக் கொண்டிருந்தபோது இந்த காட்சியில் கவுண்டமணி சொன்ன அதே இடத்தில் எடிட்டர் இதுவரை தான் காமெடி இருக்கிறது இதற்கு மேலே ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டார்.
அதை பார்த்து வெங்கடேஷ் மிரண்டு போயிருந்தாராம். இது குறித்து சமீபத்தில் ஏ.வெங்கடேஷ் பேசி இருக்கிறார். அதுபோல செய்யாறு பாலு பேசுகையில் கவுண்டமணியின் கழுத்தில் ஒரு நீண்ட ஒரு தங்க செயின் இருக்கும். அந்த செயினை எந்த இடத்திலையும் கவுண்டமணி கழட்ட மாட்டார். அதற்கு காரணம் அவருடைய சம்பளத்தில் அவர் முதல் முதலாக வாங்கிய தங்க பொருளாம். அதனால் அதை எந்த இடத்திலும் நான் கழட்ட மாட்டேன் என்று சொல்லி தான் நடிக்கவே செய்வாராம். அது போல கவுண்டமணி கார் பிரியர் அதனால் அவரிடம் விதவிதமான கார்கள் அந்த நேரத்தில் இருக்கும் என்று செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications