சிவகார்த்திகேயன் ரேஞ்சுக்கு வந்துட்டாரா கவின்? ஆட்டிடியூட் பிஹேவியர் அதிகமாக இருக்கே: பிரபலம் பளிச்
சென்னை: சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக கவின் களமிறங்க போவதாக மீடியாக்களில் செய்திகள் வலம் வந்தபடி உள்ளன... அதேபோல, விஜய் டிவியிலிருந்து ஹீரோவாக முன்னேறி வரும் கவின் தான் அடுத்த சிவகார்த்திகேயன் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் கவின் அதை உறுதியாக மறுத்து வந்தாலும், சமீபத்தில் இவர்கள் இருவரின் படங்களும் நேருக்கு நேர் மோத இருப்பது அதை உறுதிப்படுத்தியிருந்தது. இதுகுறித்துதான், பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.
AramNaadu என்ற யூடியூப் சேனலில், பாலாஜி பிரபு சமீபத்தில் பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. அப்போது, சிவகார்த்திகேயனுடன் மோதும் கவின் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பாலாஜி பிரபு, "போட்டி போடும் அளவுக்கு கவின் வந்துவிட்டாரா என்ன?டாடா என்ற ஒரு படம் அவருக்கு ஓடியது. லிப்ட் என்ற படம் ஓடிடியில் ஓடியது..

அதன்பிறகு வெளிவந்த ஸ்டார் படம் ஓடவில்லை. பிளடிபெக்கர் படமும் ஓடவில்லை.. கவின் மீது ஒருவித எதிர்பார்ப்பு இருப்பது உண்மைதான்.. கவினுக்கு சின்ன மார்க்கெட் கிரியேட் ஆவதும் உண்மைதான். ஆனால், தன்னுடைய நடத்தை காரணமாகவே, இதுபோன்ற வாய்ப்புகளை கவின் இழந்துவிடுவாரா? என்று தோன்றுகிறது.
நீ போய் அங்கே உட்காரு
ஒரு டைரக்டர், கவினை வைத்து டைரக்ட் செய்து கொண்டிருக்கும்போது, "நீ போய் அங்கே உட்காருய்யா, உனக்கென்ன தெரியும்? நான் பார்த்துக்கறேன்"னு கவின் சொன்னதாக நான் கேள்விப்பட்டேன். அதேபோல, ஒரு டான்ஸ் மாஸ்டரிடம், "நீ என்னய்யா மூவ்மென்ட் சொல்லி தர்றே? நானே ஆடறேன்" என்று கவின் சொன்னதாகவும் கேள்விப்பட்டேன்.. இதெல்லாம் ஒரு ஆட்டிடியூட் பிஹேவியர்.. 2 படம், 3 படம் நடித்து வளர்ந்து வரும் ஒரு நடிகருக்கு இதெல்லாம் ரொம்ப அதிகம்..
சிவகார்த்திகேயன் உயரம்
இப்பவே இப்படி நடந்து கொண்டால், நாளைக்கு சூப்பர் ஸ்டாராக மாறினால், சினிமா துறையில் என்ன நடக்கும் பாருங்க,.. இப்படிப்பட்ட எண்ணங்கள் ஏன் வருகிறது என்று தெரியவில்லை.. ஒரு படம் தியேட்டரில் ஓடினதுமே, இப்படியான எண்ணங்கள் உள்ளுக்குள் சிலருக்கு வந்துவிடுகிறது.. உடனே தங்களை கடவுளின் குழந்தைகள், என்று நினைத்து கொள்கிறார்கள்..
சிவகார்த்திகேயனுடன் மோதும் அளவுக்கு கவின் வளரவில்லை.. ஒருவேளை திடீர் "தளபதியாக" சிவகார்த்திகேயன் மாறிவிட்டதால், அப்படி மோதும் எண்ணம் கவினுக்கும் வந்ததோ என்னவோ? நாளைக்கே துப்பாக்கியை கவின் கையில் கொடுத்துவிட்டால், நாளைக்கே கவினும் திடீர் சிவகார்த்திகேயனாக மாறிவிடுவார் போல" என்றெல்லாம் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
இளையராஜாவுக்கு திமிரா?
இதுபோலவே, மற்றொரு சேனலுக்கு பேட்டி தந்திருந்த பாலாஜி பிரபு, கவின் நிறைய ஆட்டிடியூட் காட்டுவதாக சொல்கிறார்கள்.. ஒரு கட்டிடத்தின் 2வது மாடியில் ஷூட்டிங் நடந்தபோது, லிப்ட் ரிப்பேர் ஆகிவிட்டதால், கேரவனில் போய் உட்கார்ந்து கொண்டாராம்.
17, 18வது மாடியில் ஷூட்டிங் என்றால் பரவாயில்லை.. 2வது மாடிக்கே லிப்ட் வேண்டும், அது ரெடியானதும் சொல்லுங்க என்று கூறிவிட்டு கேரவனில் போய் உட்கார்ந்து கொண்டாராம். கவின் போன்ற நபர்களுக்கு இப்படி ஆட்டிடியூட் இருக்கும்போது, அவ்வளவு பெரிய இசைமேதை இளையராஜா திமிராக இருப்பதில் தப்பே இல்லை" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications