இதை செய்தால் இறந்து விடுவேன் என்று தெரிந்தும் செய்த நடிகர் குமரிமுத்து..பல குடும்பங்களுக்கு உதவி!
சென்னை: நடிகர் குமரிமுத்துவின் மரணம் எதனால் ஏற்பட்டது என்று அவருடைய மகள் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
நடிகர் குமரிமுத்து என்று சொன்னதுமே அவருடைய தனித்துவமான சிரிப்புதான் அனைவருக்கும் டக்கென்று நினைவிற்கு வரும்.

இந்த நிலையில் தன்னுடைய 75 ஆவது வயதில் காலமான குமரிமுத்துவின் கடந்த காலத்தை பற்றி அவருடைய மகள் பல தகவல்களை கூறியிருக்கிறார்.
நடிகர் குமரிமுத்து 30 ஆண்டுகளாக திரையுலகில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 1000 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவருடைய நடிப்பை பார்த்து பல பேர் கவலைகளை மறந்து சிரித்து இருந்தாலும் அவருடைய ஆரம்ப காலம் மிகவும் மோசமாகத்தான் இருந்திருக்கிறது. தன்னுடைய 14 வயதிலேயே தன்னுடைய சொந்த ஊரான கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு அவர் சென்றிருக்கிறார்.
நடிப்பதற்காக பல பிரச்சனைகளையும், கஷ்டங்களையும் தாண்டித்தான் இவருக்கு ஒரு சில வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. ஊரிலிருந்து சென்னைக்கு வந்தபோது இவருக்கு படுக்க இடம் கூட இல்லாமல் கடை தெருவில் சில கடைகளுக்கு முன்பு படுத்து தூங்கி இருக்கிறார். அப்போது அந்த கடைக்காரர்கள் காலை நேரத்தில் இவருடைய முகத்தில் தண்ணீர் ஊற்றி எழுப்பி இருக்கிறார்கள். அப்போது அவர்களுக்கு பயந்தே நான்கு மணிக்கு அவர் எழுந்து குளித்து கிளம்பி விட்டு நாடகங்களில் வாய்ப்பு தேடி அலைந்திருக்கிறாராம்.
அதுமட்டுமல்லாமல் அதற்கு பிறகு அவருக்கு நாடகங்களில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதைத்தொடர்ந்து தான் அவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் அவர் தனித்துவமாக சிரிக்கும் சிரிப்பு இவருடைய நிஜ சிரிப்பு கிடையாதாம். திரைப்படங்களுக்காக தான் அவர் அடிவயிற்றில் இருந்து அந்த சிரிப்பை கொண்டு வந்திருக்கிறார். ஆனால் வீட்டில் இருக்கும்போது நார்மலாக தான் சிரிப்பாராம்.

அதுமட்டுமல்லாமல் குமரி முத்து அந்தக் காலத்தில் எட்டாம் வகுப்பு வரைக்கும் படித்திருக்கிறாராம். ஆனால் அரசியல், இலக்கியம், வரலாறு என அவருடைய தனித்துவமான பேச்சு திறமை பலரும் வியந்திருக்கிறார்கள். தமிழ் மீது அதிகப்படியான பாசம் இருந்ததன் காரணமாகவே அவர் அதிகப்படியான மேடைகளில் பேசிக்கொண்டிருக்கிறார். அதற்கு இவருடைய ஞாபக சிந்தனை காரணம் என்று அவருடைய மகள் கூறி இருக்கிறார். நடிகராக மட்டுமல்லாமல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மீது இவருக்கு அதிகமடியான பாசம் இருந்திருக்கிறது. அதனாலையே இவர் அவருடைய கட்சியிலும் இருந்திருக்கிறார்.
தான் நடித்து வாங்கும் சம்பளத்தில் பல பேருடைய குழந்தைகளின் படிப்புக்கும் உதவி செய்து இருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் தான் ஒரு நாள் சூட்டிங் க்கு 50,000 சம்பளம் வாங்கினால் 45 ஆயிரம் ரூபாயை அடுத்தவர்களுக்காக உதவிக்காக கொடுத்திருக்கிறார் என்று அவருடைய மகள் கூறி இருக்கிறார். அதோடு நடிகர் குமரி முத்துவிற்கு கடைசி நேரத்தில் ஹார்ட் அட்டாக் வந்தபோது மருத்துவமனையில் சேர்த்திருந்தார்களாம்.
அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு நுரையீரலில் பிரச்சனை இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அப்போது தான் ஊழியம் செய்யப் போக வேண்டும் என்று குமரி முத்து உறுதியாக இருந்திருக்கிறார். மருத்துவர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல், எப்படியும் இறக்க தான் போகிறோம். ஆனால் அதை நமக்கு பிடிச்ச மாதிரி ஊழியம் செய்துவிட்டு இறந்துவிடலாம் என்று கூறி இவர் ஊழியம் செய்ய போயிருக்கிறார். அதற்கு பிறகு தான் இரண்டு நாளில் அவர் இறந்து போனார் என்று அவருடைய மகள் கூறி இருக்கிறார்.
-
குடும்பங்களுக்குள் புகுந்து அவதூறு.. ‘குற்றம் நிரூபித்தால் உயிரோட விடக்கூடாது!’ குஷ்பு ஆவேச பேட்டி -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா? "இந்த” சீரியலின் 30 நிமிட கதை தான் முழு படமா? ரசிகர்கள் ட்ரோல் -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications