4 வயதிலேயே என் மகனுக்கு கருத்தடை முதல் பாலியல் பாதுகாப்பு வரை சொல்லி கொடுத்தோம்.. ஏனென்றால் நடிகர் மாதவன் ஓபன்
சென்னை: திரையுலகில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்த நடிகர்களில் மாதவனும் ஒருவர். தமிழ் மட்டுமல்லாமல் இந்தி மற்றும் பிற மொழி திரைப்படங்களிலும் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த அவர், சமீபத்தில் தனது மகன் வளர்ப்பு குறித்து பகிர்ந்த கருத்துகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

பல மொழிகளில் வெற்றி கண்ட நடிகர்
மாதவன் தனது கேரியரை தொலைக்காட்சி சீரியல்களில் தொடங்கி, பின்னர் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தார். தமிழில் 'அலைபாயுதே', 'மின்னலே', 'யாவரும் நலம்' போன்ற படங்கள் அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கின. அதேபோல், இந்தி திரையுலகிலும் '3 Idiots', 'Tanu Weds Manu' போன்ற படங்கள் மூலம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார்.
மேலும், அவர் இயக்கியும் நடித்த ராக்கெட்ரி: நம்பி விளைவு திரைப்படம் விமர்சகர்களிடமும் பாராட்டைப் பெற்றதுடன், தேசிய அளவிலும் கவனம் பெற்றது.

மகன் வேதாந்த்
மாதவனின் மகன் வேதாந்த் மாதவன் தற்போது சர்வதேச அளவில் நீச்சல் போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார். பல போட்டிகளில் பதக்கங்கள் வென்று, இளம் வயதிலேயே தனது திறமையை நிரூபித்துள்ளார். மாதவன், தனது மகன் தனது பாதையைத் தேர்வு செய்ய முழு சுதந்திரம் வழங்கியதாக பலமுறை கூறியுள்ளார்.
மாதவன் திறந்த மன பேட்டி
சமீபத்தில் அளித்த பேட்டியில், மாதவன் தனது மகனை வளர்த்த விதம் குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது, "குழந்தைகளை பாதுகாப்பாக வளர்ப்பது என்றால் அவர்களுக்கு எதையும் மறைப்பது இல்லை. உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை அவர்களுக்கு முன்கூட்டியே புரிய வைக்க வேண்டும்.
வேதாந்திற்கு சிறு வயதிலிருந்தே ஒரு பெரியவரைப் போல மதிப்பளித்து வளர்த்தேன். குறிப்பாக, பல பெற்றோர்கள் பேசத் தயங்கும் பாலியல் தொடுதல், பாலியல் பாதுகாப்பு, கருத்தடை போன்ற விஷயங்களை அவருக்கு டீனேஜ் வயதுக்கு முன்னரே, அதாவது 4 வயதிலேயே விளக்கி சொல்ல ஆரம்பித்தேன்.
இதனால் எங்களுக்குள் நம்பிக்கை அதிகரித்தது. மேலும், பெண்களை எப்படி மரியாதையுடன் நடத்த வேண்டும், புகழின் இருண்ட பக்கங்கள் என்ன என்பதையும் அவருக்கு முன்கூட்டியே கற்றுக்கொடுத்தேன்." என்று பேசி இருக்கிறார்

மகனின் ரியாக்ஷன்
மாதவன் தனது கேரியர் குறித்து பேசும்போது, ஒரு சுவாரஸ்யமான விஷயத்தையும் பகிர்ந்தார். ராக்கெட்ரி: நம்பி விளைவு படம் பார்த்த பிறகு, அவரது மகன் வெறும் "Not bad dad" என்று மட்டுமே கூறியதாக அவர் சிரித்தபடி தெரிவித்துள்ளார். மேலும், தனது படங்களில் மகனுக்கு மிகவும் பிடித்த படம் யாவரும் நலம் தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
என் பாதையை அவன் பின்பற்ற வேண்டாம்
திரையுலகில் உள்ள பலர் தங்கள் பிள்ளைகளும் சினிமாவில் வர வேண்டும் என்று விரும்பினாலும், மாதவன் அதற்கு மாறான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
அவரது கருத்துப்படி, மகன் தன் நிழலில் வளரக்கூடாது. தனக்கென ஒரு பாதையை உருவாக்கிக் கொள்ள வேண்டும், வாழ்க்கையை தனது முடிவுகளால் வடிவமைக்க வேண்டும் என்பதே முக்கியம் என்று கூறியிருக்கிறார்.
இவர் இப்படி நடந்து கொண்டதால்தான் இன்று வேதாந்த் சர்வதேச விளையாட்டு துறையில் முன்னேறி வருகிறார் என அவர் பெருமையாக தெரிவித்துள்ளார். மொத்தத்தில், ஆர். மாதவன் தனது மகனை வளர்த்த விதம் சராசரி பெற்றோர்கள் முறையில் இருந்து மாறுபட்டதாக இருந்தாலும், அது நம்பிக்கை, திறந்த மனம் மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாக உள்ளது.
இந்த வெளிப்படையான அணுகுமுறை தான் வேதாந்தை ஒரு பொறுப்பான இளைஞராகவும், சர்வதேச அளவில் சாதிக்கும் விளையாட்டு வீரராகவும் உருவாக்க உதவியுள்ளது என்று பலரும் பாராட்டி வருகிறார்கள்.













Click it and Unblock the Notifications