உதயநிதி கைதுக்கு மேடையில் சத்யராஜை கலாய்த்த மாதவன்? ஒரே ஒரு வார்த்தையால் வந்த வினை
சென்னை: தமிழக அரசியலில் உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கை, திரிஷா சர்ச்சை, சமூக வலைத்தளங்களில் வெடித்த விவாதங்கள் என நேற்று முழுக்க பெரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலை இருந்த நிலையில் நடிகர் மாதவன் பேசிய ஒரே ஒரு டயலாக் இப்போ சோசியல் மீடியாவில் விவாதத்தை கிளப்பி இருக்கிறது.
ஜிடி நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஜிடிஎன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மாதவனுடன் ஜெயராம், சத்யராஜ், பிரியாமணி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பட குழுவினரும் கலந்து கொண்டனர்.
நடிகர் மாதவன் பேச்சு
அந்த நிகழ்ச்சியில் மாதவன் பேசும்போது, பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையில் இருக்கும் எங்கள் நண்பர்களுக்கு நன்றி. நிறைய டிராமா நடக்கிற இந்த நேரத்துல நீங்க இங்க வந்து எங்க கூட இருக்கீங்க, எங்க வாழ்க்கையில் பெரிய ட்ராமா நடந்துட்டு இருக்கு. இன்னும் 2 நாளில் படம் ரிலீஸ் ஆகப்போறதுனால, நாங்க ரொம்ப டென்ஷனாக இருக்கிறோம் என்று பேசினார்.
4 வயதிலேயே என் மகனுக்கு கருத்தடை முதல் பாலியல் பாதுகாப்பு வரை சொல்லி கொடுத்தோம்.. ஏனென்றால் நடிகர் மாதவன் ஓபன்
ஆனால் ஆரம்பத்தில் நிறைய டிராமா நடக்குற நேரத்துல நீங்க இங்க வந்து இருக்கீங்க என்று சொன்னதும் மேடையை நோக்கி மாதவன் பார்த்திருக்கிறார். உடனே ரசிகர்கள் இது பத்திரிகையாளர்களை பார்த்து மாதவன் சொன்னது போல தெரியவில்லை சத்யராஜை பார்த்து கலாய்த்தது போல தெரிகிறது என்று கதை கட்டி வருகிறார்கள். அதாவது உதயநிதி ஸ்டாலின் தஞ்சையில் காவிரி பிரச்சனைக்காக போராடிய போது பேசப்பட்ட வார்த்தை திரிஷாவை பற்றி டபுள் மீனிங் பேசுவது போல இருக்கிறது என்று அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
உதயநிதி கைதுக்கு கிண்டல்
அதனால் நேற்று முழுக்க கைது நடவடிக்கை, தொண்டர்கள் போராட்டம் என பெரும் பரபரப்பாக இருந்தது. இந்த பஞ்சாயத்துக்கு மத்தியிலும் சத்யராஜ் இங்கே வந்து இருக்கிறாரே என்று கேட்பது போலத்தான் இருக்கிறது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். காரணம் சத்யராஜ் ஆரம்பத்தில் இருந்து திமுகவிற்கு சப்போர்ட் செய்து வருவதால் இப்போ உங்க கட்சிக்கு பிரச்சனை வந்திருக்கு நீங்க இங்க வந்து இருக்கீங்களே என்று மாதவன் கேட்கிறார் என்று சிலர் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

சத்யராஜ் கலாய்ப்பு
இதனால் இந்த படத்தை பற்றி பேசுவதை விடவும், இந்த படத்தின் ப்ரோமோஷனில் மாதவன் பேசியதை தான் இப்போ பலரும் விவாதிக்க தொடங்கி விட்டனர். ஆனால் ஒரு சிலர் மாதவனுக்கு சப்போர்ட்டாகவும் பேசி வருகிறார்கள். அந்த நேரத்தில் அரசியல் சூழ்நிலை பற்றி தமிழ்நாடு முழுக்க பரபரப்பாக பேசிக் கொண்டிருந்த நிலையில் பத்திரிகையாளர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்தது குறித்து தான் மாதவன் இப்படி பேசி இருக்கிறார் இதில் வேறென்ன அர்த்தமும் இருந்தது போல இல்லை என்று கூறி வருகிறார்கள்.
ரசிகர்கள் கருத்து
உதயநிதி ஸ்டாலின் பேசியது எப்படி பூதாகரமாக மாறியதோ அதேபோல மாதவன் பேசியதை திருப்புகிறார்கள் என்று அவருடைய ரசிகர்கள் சொல்கிறார்கள். இதனால் மாதவன் எதை நினைத்து பேசினார்? யாரை தாக்கி பேசினார்? யாரை பார்த்து பேசினார்? என்று விவாதம் இப்போ சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications
