முண்டாசுப்பட்டி முதல் சரவணன் மீனாட்சி சீரியல் வரை.. மறைந்த நடிகர் மதுரை ‘மீசை’ மோகன் பற்றிய ரகசியம்
சென்னை: நடிகர் மதுரை மீசை மோகன் இன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருடைய இறப்பிற்கு பல பிரபலங்கள் தொடர்ச்சியாக வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை மீசை மோகன் எப்படி சினிமாவிற்குள் வந்தார் என்பது போன்ற பல சுவாரசியமான அவரைப் பற்றிய தகவல்கள் இணையத்தில் வலம் வருகிறது.
அதோடு மதுரையில் அரசு வேலை பார்த்து வந்த மீசை மோகன் அந்த வேலையை விட்டுவிட்டு தான் நடிக்க தொடங்கி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

தமிழ் சினிமா உலகில் 40 ஆண்டு காலமாக பயணம் செய்த மதுரை மோகனின் அடையாளமே அவருடைய மீசை தான் என்று சொல்லலாம். கம்பீரமான மீசையோடு ஒவ்வொரு திரைப்படங்களிலும், சீரியல்களிலும் மதுரை மோகன் நடித்திருக்கிறார். இந்த மீசையாலையே இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்று பல பேட்டிகளிலும் மதுரை மோகன் தெரிவித்திருக்கிறார். அதோடு இவர் மதுரையில் அரசு வேலை பார்த்துக் கொண்டிருந்தாராம்.
அப்போது இடையில் கிடைக்கும் நேரங்களில் சென்னையில் இருந்து படப்பிடிப்புக்காக மதுரை, தேனி போன்ற பல மாவட்டங்களுக்கு சென்று சினிமாக்காரர்களுக்கு லொகேஷன் பார்த்து தருவது அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து கொடுத்து இருக்கிறார். அப்போதுதான் தயாரிப்பாளர் சங்கிலி முருகனின் நட்பு இவருக்கு கிடைத்திருக்கிறது. அதன் மூலமாகத்தான் மதுரை மோகனுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதிலும் குறிப்பாக மதுரை மோகன் கும்பக்கரை தங்கையா, கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த அபூர்வ சகோதரர்கள், முண்டாசுப்பட்டி, சீமா ராஜா போன்ற பல படங்களில் குணச்சித்திரக்க வேடங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவர் வீரன் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி உட்பட பல சீரியல்களை இயக்கிய இயக்குனர் அழகர் மூலமாக இவருக்கு சீரியலிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ஒரு நாள் அழகர் திடீரென்று மீசை மோகனை அழைத்திருக்கிறார். அப்போது மீசை மோகன் மீசைக்கு டை கூட அடிக்காமல் அப்படியே போய்விட்டாராம். அதை பார்த்ததும் இங்கே டை அடிச்சுட்டு ஆயிரம் பேர் இருக்காங்க. ஆனா நம்ம கேரக்டருக்கு இப்படியே இருக்கட்டும்னு அவரை செலக்ட் செய்து இருக்கிறார். அதற்குப் பிறகு மதுரை சரவணன் மீனாட்சி, ரோஜா, என் பெயர் மீனாட்சி என பல சீரியல்களில் மீசை மோகன் நடித்திருக்கிறார்.
அதோடு ஈரமான ரோஜாவே சீரியலில் முதல் பாகத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான நிலையில் இவர் ஷூட்டிங்கில் கலந்து கொண்டதால் அந்த சீரியலில் இருந்து இவர் வெளியேற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. அதுபோல நடிக்க தொடங்கியதும் இவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைத்ததால் சென்னையிலேயே வடபழனியில் வீடு எடுத்து தங்கி இருந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் சென்னை ஓமந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனிக்காமல் இன்று அதிகாலை மரணம் அடைந்திருக்கிறார். இந்த தகவல்கள் வெளியே தெரிய ஆரம்பித்ததும் சின்னத்திரை சினிமா நடிகர் நடிகைகள் ரசிகர்கள் என பலதரப்பட்டரும் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications