மனைவியோடு புகைப்படத்தை வெளியிட்டு.. மகாநதி சங்கர் சொன்ன மகிழ்ச்சி செய்தி.. குவியும் வாழ்த்து
சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடித்த மகாநதி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி மகாநதி சங்கர் என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் சங்கர் தன்னுடைய மனைவியோடு எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இதுவரைக்கும் இவரை சினிமாவில் வில்லனாக பார்த்த ரசிகர்கள் மனைவியோடு இவர் பவ்யமாக இருக்கும் புகைப்படத்திற்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
பொதுவாக ஒரு சில நடிகர்களுக்கு மட்டும்தான் அவர்கள் நடித்து பிரபலமடைந்த திரைப்படத்தின் பெயர் அடைமொழியாக வருகிறது. அதில் சிலர் பிரபலம் அடைந்து விடுகிறார்கள். அதுபோல ஒருவர் தான் நடிகர் மகாநதி சங்கர். தான் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே தனக்கென்று அவர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

அதற்கு பிறகு ரஜினியோடு பாட்ஷா திரைப்படத்திலும், நடிகர் சரத்குமாரின் ரகசிய போலீஸ், கமல்ஹாசன் உடன் இந்தியன் அதுபோல அஜித்துடன் தீனா உட்பட பல்ல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிகாட்டி வருகிறார். ஒரு சிலரை பார்க்கும்போது பக்கத்து வீட்டு நபர் போன்ற இருக்கும் அது போன்ற நபர் தான் மகாநதி சங்கர்.
வில்லனாக மட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்து இருக்கிறார். அதேபோல சில திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சீரியலிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பான வானத்தைப்போல சீரியலிலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
வானத்தைப்போல சீரியலில் இவர் வில்லனா? நல்லவரா? என்று யோசிக்க முடியாத வகையில்தான் இவருடைய கேரக்டர் மாறி மாறி இருந்தது. அதுபோல நந்தினி, மாயா போன்ற சீரியல்களிலும் நடித்திருந்தார். சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்னம் சீரியலிலும் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஆரம்பத்தில் இவர் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தது நாதஸ்வரம் சீரியல் மூலமாகத்தான். அதற்குப் பிறகு தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல மகாநதி சங்கருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கிறார். தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளோடு கோவிலுக்கு போகும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.

இந்த நிலையில் இன்று தன்னுடைய மனைவியோடு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து தன்னுடைய திருமண நாளுக்காக மனைவிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிட்டு இருக்கிறார். இந்த தம்பதிக்கு பல பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். ரசிகர்களும் இவர்களை வாழ்த்தி வருகிறார்கள்.
அதுபோல நடிகர் அஜித் குமாரை முதன்முதலாக தீனா படத்தில் "தல" என்று அழைத்தது மகாநதி சங்கர்தான். அதற்கு பிறகு தான் அவரை ரசிகர்களும் தல என்று கூப்பிட தொடங்கினர். இந்த நிலையில் மகாநதி சங்கர் புகைப்படத்திற்கு அஜித்குமாரின் ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications