சாப்பாட்ட தந்துட்டு தினம் எங்க அம்மா அந்த வார்த்தையை சொல்லி! மணிகண்டனின் கலங்க வைத்த வார்த்தை
சென்னை: ஜெய் பீம், குட் நைட் போன்ற திரைப்படங்கள் மூலமாக யார் இந்த பையன் என்று பலரையும் திரும்பிப் பார்க்க வைத்த மணிகண்டன் ஆரம்ப காலகட்டத்தில் தான் பட்ட கஷ்டங்கள், அவமானங்கள் அனைத்தையும் தாண்டி தான் முன்னேறி வந்த விதம் குறித்து அதனுடைய ரசிகர்களுக்கு மோட்டிவேஷனலாக சில அட்வைஸ் கொடுத்திருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆரம்பத்தில் மணிகண்டன் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியின் மூலமாகவே சினிமாவில் டப்பிங் கலைஞராக வாய்ப்பு கிடைத்த நிலையில் சம்பளம் ரொம்பவும் குறைவாக இருந்ததால் தான் பட்ட வேதனைகள் குறித்து இப்போது மனம் திறந்து பேசி இருக்கிறார்.

பொதுவாக வாய்ப்புகள் அவ்வளவு சீக்கிரத்தில் எல்லோருக்கும் கிடைத்து விடாது. ஒரு சிலருக்கு தான் எந்த விதமான கஷ்டங்கள் இல்லாமல் வாய்ப்புகள் கிடைத்துவிடும். ஆனால் பலர் தங்களுடைய திறமையும், உழைப்பும் இருந்தாலும் அதற்கு சரியான வாய்ப்புகள் இல்லாமல் இப்போதும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த மாதிரி தான் ஆரம்ப காலகட்டத்தில் பெரிய அளவில் போராடி விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக தனக்கென்று ஒரு சிறிய அடையாளத்தை வைத்து காலா, விக்ரம் வேதா, சில்லு கருப்பட்டி போன்ற திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து ஜெய் பீம், குட் நைட் திரைப்படங்களில் பெரிய அளவில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்த மணிகண்டன் இப்போது வளர்ந்து வரும் கலைஞராக இருக்கிறார்.
அதுவும் அடுத்த விஜய் சேதுபதி போல இவர் வந்து கொண்டிருக்கிறார் என்று கூட பலரும் கூறிக் கொண்டிருக்கின்றனர். இப்படியான நிலையில் தான் இவர் ஒரு பேட்டியில் தன்னுடைய ஆரம்பகால கஷ்டத்தை சொல்லி தன்னைப் போல வளர வேண்டும் என்று துடிப்போடு இருக்கும் இளைஞர்களுக்கு சில அறிவுரைகளை கொடுத்து இருக்கிறார்.
அதாவது சினிமாவில் சாதிக்க நினைப்பவர்கள் முதலில் உங்கள் வீட்டில் உள்ளவர்களை சமாளிக்க கற்றுக் கொள்ள வேண்டும், அதுதான் இருப்பதிலேயே ரொம்ப டப்பான வேலை. என்னுடைய அம்மா தினமும் எனக்கு சாப்பாடு போட்டுட்டு அழுவாங்க, பக்கத்து வீட்டு பையன் 30,000 சம்பாதிக்கான்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அதை எல்லாம் கேட்டு விட்டால் நாம எப்போ முப்பதாயிரம் சம்பாதிப்போம் என்ற சிந்தனையே நம்மை முடங்கி விடுவோம்.
ஆனால் நமக்கானதை தேடி நாம் அடைய வேண்டும். அதற்காக தொடர்ந்து முயற்சித்தால், விடாமல் போராடினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று அந்த பேட்டியில் மணிகண்டன் பேசியிருக்கிறார். இந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது மணிகண்டன் வீட்டில் மட்டுமல்ல பலருடைய வீட்டிலும் நடப்பது தான்.
அம்மாவாக இருந்தாலும் சரி, அப்பாவாக இருந்தாலும் சரி நம்முடைய பிள்ளைகள் நல்லா வர வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். அதனால் அடுத்த வீட்டுப் பிள்ளையோடு அவர்களை அறியாமலேயே ஒப்பிட்டு பார்த்து விடுகிறார்கள். அவர்களெல்லாம் நல்லா இருக்கிறார்கள் நம்ம பிள்ளை மட்டும் இன்னும் நல்லா வரலையே என்ற ஆற்றாமையால் அவர்கள் பல விஷயங்களை புலம்பி கொண்டு தான் இருப்பார்கள்.
சில விஷயங்களில் எதார்த்தத்தையும் சொல்வார்கள். ஆனால் அதை முழுக்க தலையில் ஏற்றி விட்டால் தங்களுடைய பயணத்தில் தடை வந்துவிடும், அல்லது சறுக்கல் வந்துவிடும். அதனால் நமக்கு என்று ஒரு குறிக்கோளை நிலை நிறுத்தி விட்டால் அதுபடியே பயணத்தை தொடங்குவது தான் சிறப்பு. மணிகண்டன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான குட்நைட் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்த நிலையில் தான் இந்த வாரம் லால் சலாம் படத்திற்கு போட்டியாக மணிகண்டன் நடித்த லவ்வர் திரைப்படம் ரிலீஸ் செய்ய காத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications