அப்பாக்கே நான் நடிக்கிறது புடிக்கல.. காரணம் அந்த ஏமாற்றம்! பல பேர் இப்போ இல்ல! மணிகண்டன் எமோஷனல்
சென்னை: ஜெய் பீம், குட் நைட் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகர் மணிகண்டன் குடும்பத்தை பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதில் தான் சினிமாவில் நடிப்பது தன்னுடைய சொந்த குடும்பத்திற்கு பிடிக்கவில்லை என்று கூறி இருக்கிறார். அதோடு அதற்கான காரணத்தை பற்றியும் அதில் பேசியிருக்கிறார்.
அதோடு தன்னுடைய குடும்ப வாழ்க்கையில் நடந்த பல சோகங்கள் குறித்தும் மணிகண்டன் பேசியிருக்கும் நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அதோடு மணிகண்டனுக்கு பலர் ஆறுதல் கூறி வருகின்றனர் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்த நிலையில் சமீபத்தில் தான் மணிகண்டன் நடிப்பில் லவ்வர் திரைப்படம் வெளியாகி நல்ல வசூல் பெற்றிருந்தது. இப்படியான நிலையில் மணிகண்டன் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் அவர் பேசுகையில் எல்லா வீட்டிலும் நம்முடைய கனவுக்கு சம்மதம் சொல்லுவாங்கனு எதிர்பார்க்கக் கூடாது. ஏன்னா எங்க வீட்டுல கூட நான் நினைச்சதை செய்வதற்கு விரும்பல.
நான் இன்ஜினியரிங் படித்து விட்டு நடிக்க வந்தது வீட்டில் அம்மா அப்பாவுக்கு கொஞ்சம் கூட பிடிக்காது. அதிலும் நான் நடிச்ச திரைப்படங்கள் ஒன்னு ரெண்டு வெற்றி அடைய தொடங்கியதும் என்னுடைய அப்பா என்னிடம் புலம்பிக்கொண்டே இருப்பார். முன்னாடி எல்லாம் யாரும் என்கிட்ட எதுவும் சொல்ல மாட்டாங்க நான் நிம்மதியா இருந்தேன். ஆனால் இப்போது தெருவில் கடைக்கு கூட போக முடியல உன் பையன் எந்த படத்தில் இனி நடிக்க போறான்னு என்கிட்ட கேட்டுகிட்டே இருக்காங்க.
உன் பையன் நடிச்சு பெரிய ஆளா வந்துட்டான்னு எனக்கு ட்ரீட் வைன்னு சொல்றாங்க என்று என் மீது வந்து கோபப்படுவார். அப்பாவும் அம்மாவும் படிக்கவில்லை என்பதால் அவர்களுடைய பாசத்தை கூட எப்போதும் என்னிடம் கோபமாக தான் காட்டுவாங்க. எனக்கு அது பழகி விட்டதால் நான் கண்டுக்கிறதே கிடையாது. சில நேரங்களில் நான் ஏதாவது ஜெயித்து மெடலோ, அவார்டோ வாங்கிட்டு வீட்டுக்கு போய் கதவு தட்டி அப்பா கிட்ட சொன்னா கூட அவருடைய முகத்தில் எந்த ஒரு எக்ஸ்பிரஷனும் இருக்காது.
அப்படியா சரி என்று கிளம்பி விடுவார். அவருக்கும் சரி அம்மாவுக்கும் சரி நான் நடிக்க வந்தது துளி கூட விருப்பம் கிடையாது. அவங்களுக்கு அவங்க நினைச்ச மாதிரி இன்ஜினியரிங் படித்து நான் நல்ல வேலைக்கு போகவில்லையே என்ற வருத்தம் இருக்கு. நம்ம கூட ஆரம்பத்தில் நன்றாக வாழ்க்கையை சந்தோஷமா என்ஜாய் பண்ணிட்டு இருப்போம். ஒரு குறிப்பிட்ட 27 வயசு ஆகும்போது அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற ஒரு பயம் வரும்.
நம்முடன் உள்ளவர்கள் எல்லாம் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டால் அதை நினைத்து நினைத்தே நாம பயந்து கொண்டு இருப்போம். ஆனால் அதுவெல்லாம் தேவையே கிடையாது. வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கும் போது நம்ம கூட இருந்த பலர் நாம் கொஞ்சம் பொறுப்பாக இருக்கும்போது நம்மோடு இருக்க மாட்டாங்க.
நம்ம ஆரம்பத்தில் வியந்து பார்த்த பலருக்கும் கொஞ்ச நாளில் வயதாகி போய் இருக்கும். அப்படி வாழ்க்கை மாறிக்கொண்டே இருக்கத்தான் செய்யும் நாமும் அது போக்கில் போய் நம்முடைய கனவு லட்சியத்தை அடைந்து விட வேண்டும் என்று அந்த பேட்டியில் மணிகண்டன் பேசியிருக்கிறார்.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
சிறகடிக்க ஆசை: ஆந்திரா வரை சென்று ரேகாவை மீட்ட முத்து! உயிரை பணயம் வைத்த மீனா... அதிரடி திருப்பம் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications