இறப்பதற்கு முன்பு 100 ரூபாய்க்கு மல்லிப்பூ வாங்கி மனைவி தலையில் வைத்த மாரிமுத்து.. ரசிகர்கள் கண்ணீர்
சென்னை: நடிகர் மாரிமுத்து இறப்பதற்கு முன்பு தனது
மனைவி பாக்கியத்திற்கு மல்லிகைப்பூ வைத்துவிட்ட காட்சிகள் வைரலாகி வருவதால் அதை பார்த்து ரசிகர்கள் மனம் வெதும்புகிறார்கள்.
நடிகர் மாரிமுத்து.. நிஜ வாழ்க்கையில் ஆதி குணசேகரனுக்கு அப்படியே நேர்மறையானவர். அந்த சீரியலில்தான் பெண்ணடிமைத்தன கேரக்டரில் நடித்துள்ளார். ஆனால் நிஜத்தில் பெண்களுக்கு மரியாதை கொடுப்பவர்.

உதவி இயக்குநர், இயக்குநர், குணசத்திர நடிகர் என பல திறமைகளை பெற்றிருந்தாலும் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது எதிர்நீச்சல் சீரியல்தான். தேனி மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து, மதுரை வட்டாரத்தை வைத்து எடுக்கப்பட்ட கதையில் கனகச்சிதமாக பொருந்தினார்.
அவருடைய முகம், உடல் என அனைத்துமே நடிக்கும். சவுண்ட் இல்லாமல் பார்த்தால் கூடகுணசேகரனின் வசனம் என்னவென சொல்லலாம். அந்த அளவுக்கு உயிர்ப்புடன் இருந்தது ஆதி குணசேகரன் கேரக்டர். இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி காலை டப்பிங் பேச மாரிமுத்து ஸ்டூடியோவுக்கு சென்றார்.
அங்கு பேசிக் கொண்டிருந்த போது அவருக்கு திடீரென வியர்த்தது. இதையடுத்து அவர் வெளியே சென்று காற்று வாங்கிவிட்டு வருவதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் வெளியே வந்தார், ஆனால் அவருக்கு நெஞ்சு வலி அதிகமாக இருந்ததால் தனது காரை எடுத்து கொண்டு அவரே சாலிகிராமத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை கொடுத்த நிலையில் பலனளிக்காமல் அவர் இறந்துவிட்டார்.
இதையடுத்து அவரது உடல் வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. பிறகு அவருடைய சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலைத்தேரி என்ற கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அங்கு ஊர்மக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு அவரது உடலுக்கு மகன் அகிலன் ஈமச்சடங்குகளை செய்தார். அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் மாரிமுத்து குறித்த நினைவலைகளை பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமடைந்த மாரிமுத்து தனது மனைவியுடன் கலாட்டா சேனலில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது அந்த நெறியாளர் மாரிமுத்துவிடம் உங்கள் மனைவிக்கு மல்லிப்பூ வாங்கிக் கொடுத்திருக்கிறீர்களா என கேட்டார்.
அதற்கு மாரிமுத்துவோ சரித்திரத்திலேயே கிடையாது. எங்களுக்கு கல்யாணம் ஆகி 29 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை அவருக்கு மல்லிப்பூ வாங்கியதில்லை என்கிறார். உடனே ஆங்கர் ரூ 100 கொடுத்து அதோ அங்கு நிற்கும் கடையில் மல்லிக்கை பூ வாங்கி வாருங்கள் என்கிறார். எத்தனை முழம் வரும்னு கூட எனக்கு தெரியாதே என மாரிமுத்து சொல்ல, இந்தாம்மா ஏய் னு சொல்லி போய் வாங்கிட்டு வாங்கள் என்கிறார்.
மாரிமுத்துவும் 100 ரூபாய்க்கு மல்லிகைப்பூ வாங்கிக் கொண்டு வரும்போது கெத்தாக காரில் வந்தோம், நம்மளை போய் பூ வாங்க வச்சுட்டாங்களே என முனகிய படியே காருக்குள் ஏறும் மாரிமுத்து தனது மனைவிக்கு மல்லிகைப்பூ வைத்துவிடுகிறார். இதனால் மனைவி பாக்கியத்திற்கு எத்தனை மகிழ்ச்சி, ஆங்கருக்கு கை கொடுத்தார். இப்படிப்பட்ட மனைவியின் மனம் எப்படி இருக்குமோ
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications