அப்பா இறந்த பிறகு அந்த பொண்ணு போனில் கேட்ட வார்த்தை.. கண் கலங்கிய மாரிமுத்துவின் மகள்
சென்னை: பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் இருந்து வந்த மாரிமுத்து சில தினங்களுக்கு முன்பு காலமானார்.
அவருடைய திடீர் மறைவுக்குப் பிறகு அதிகமான ரசிகர்களும் அவருடைய நண்பர்களும் அவரைப்பற்றி பல நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் மாரிமுத்துவின் மகள் தன்னுடைய அப்பா பற்றியும் அவருடைய இறப்பிற்கு பிறகு தங்களுக்கு நடந்தது பற்றியும் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சில வாரங்களுக்கு முன்பு நடிகர் மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலுக்காக காலையில் டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு ஏற்பட்ட அவருடைய உடம்புக்கு அசவுகரியம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்றிருந்த நிலையில் மாரடைப்பு காரணமாக காலமானார். இது வெள்ளித்திரை சின்னத்திரை ரசிகர்களையும் மாரிமுத்துவின் நண்பர்களையும் பெரிய அளவில் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நடிகர் மாரிமுத்து எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது எதிர்நீச்சல் சீரியல்தான். இந்த சீரியலில் குணசேகரன் கேரக்டரில் அவர் நடித்தார் என்று சொல்வதை விடவும் வாழ்ந்தார் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். அந்த அளவிற்கு பட்டி தொட்டி எல்லாம் இந்த கேரக்டரால் பிரபலமடைந்து இருந்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவருடைய மரணம் நிகழ்த்தி விட்டது.
இந்த நிலையில் நடிகர் மாரிமுத்துவின் குடும்பத்தினர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் மாரிமுத்து பற்றி பல தகவல்களை பேசி இருக்கின்றனர். அதில் நடிகர் மாரிமுத்துவின் மகள் தன்னுடைய தந்தை குறித்து பல தகவல்களை பேசி இருக்கிறார். அதாவது என்னுடைய அப்பா எங்களுக்கு எல்லா விஷயத்தையும் சொல்லித் தந்திருக்கிறார். சின்ன சின்ன வேலைகளையும் நாமலே செய்ய வேண்டும் என்பதுதான் அவருடைய விருப்பம். நாங்களும் அப்படியே சிறு வயதிலிருந்து வளர்ந்து விட்டோம்.

வீட்டு வாசலில் செருப்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக கலைந்து இருந்தால் அப்பாவுக்கு பிடிக்கவே செய்யாது. அப்பா வருவார் சரியாக வைக்க வேண்டும் என்று நாங்கள் அடுக்கி வைத்து விடுவோம் அது போன்று இப்போது அவர் இல்லை ஆனாலும் செருப்பு கொஞ்சம் அங்கேயும் இங்கேயும் இருந்தால் கூட அதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை நாங்கள் சரி செய்து விடுகிறோம்.
என்னுடைய அப்பா இறந்து போய் இருந்தாலும் அவர் எங்க கூடவே தான் இருக்கிறார். அவர் எங்களுக்கு வாங்கித் தந்திருக்கிற பெயரும் புகழும் பெரிய அளவில் இருக்கிறது. அப்பா இறந்து சில நாட்களுக்குப் பிறகு ஒரு பொண்ணு அப்பா நம்பருக்கு போன் பண்ணுச்சு. அது சேவ் பண்ணி வைக்காத நம்பர் தான். அதை அண்ணன் தான் அட்டென்ட் பண்ணுனாரு. அந்த பொண்ணுக்கு 15 வயதுக்குள்ள தான் இருக்கும். அவங்க பேசிட்டு கடைசியில் சாப்டீங்களா அண்ணா என்று கேட்டுச்சு.
யாருனே தெரியாத ஒரு பொண்ணு எங்களுக்கு போன் பண்ணி சாப்டீங்களா அண்ணா என்று கேட்டது எங்களுக்கு சந்தோஷமாக இருந்தது. அப்பா இவ்வளவு அன்பை சம்பாதித்திருக்கிறார் என்று எங்களுக்கு ஒரு விதத்தில் சந்தோஷமாகவும் இருக்கிறது. காசு பணத்தை விடவும் மனிதர்களின் அன்பு பாசத்தை அப்பா அதிகமா எங்களுக்கு சம்பாதிச்சு வச்சிருக்கார். இது பத்தி தான் எப்பவும் அப்பா சொல்லுவாரு. அதுபோலவே வாழ்ந்து விட்டு போயிருக்காரு என்று நடிகர் மாரிமுத்துவின் மகள் கண் கலங்க பேசியிருக்கிறார்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications