அப்பா கடைசியா அம்மாகிட்ட சொன்னது இதுதான்.. நடிகர் மாரிமுத்துவின் மகன் எமோஷனல்
சென்னை: நல்ல நிலைமையில் இருந்த நடிகர் மாரிமுத்து திடீரென்று மாரடைப்பு காரணமாக காலமானார். அதற்கு பிறகு அவர் பற்றி அவருடைய உறவினர்களும் நண்பர்களும் பல நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் மாரிமுத்து இறப்பதற்கு முன்பு கடைசியாக அவருடைய மனைவியிடம் என்ன பேசினார் என்பது பற்றி மாரிமுத்துவின் மகன் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அத்தோடு தன்னுடைய தந்தை இறந்த நேரத்தில் நானும் தந்தையும் ஒரு வாரமாக பேசாமல் இருந்தோம் என்று முத்துவின் மகன் கூறியிருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சிலர் பார்ப்பதற்கு கரடு முரடான நபர்கள் போல காட்சி அளிப்பார்கள் ஆனால் அவர்களுடன் பழகி பார்த்தால் தான் தெரியும். அவர்கள் குழந்தை போன்ற மனதுடையவர்கள் என்று, அந்த மாதிரி தான் சீரியலில் குணசேகரன் கேரக்டரில் நடித்து பலருடைய திட்டல்களை வாங்கிக் கொண்டிருந்த நடிகர் மாரிமுத்து நிஜத்தில் முற்போக்கு குணமுடையவர் என்று அவரோடு பழகிய பலரும் கூறியிருக்கின்றனர்.
அதுபோல மாரிமுத்து பேசுவது பார்த்து பலர் அவர் கோபக்காரர் என்று நினைத்து இருப்பார்கள். ஆனால் அவர் கோபப்பட்டாலும் சில நிமிடங்களிலே இயல்பு நிலைக்கு திரும்பி அவர்களிடம் பேசி விடுவாராம். அதை பற்றி அவரோடு பழகிய பல நண்பர்களும் நடிகர்களும் தெரிவித்திருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் மாரிமுத்துவின் மகன் மற்றும் மனைவி அவருடைய இறப்பிற்கு பிறகு மாரிமுத்து பற்றி பல நினைவுகளை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கின்றனர்.
அதில் வீட்டில் மாரிமுத்துவும் அவருடைய மகனும் அடிக்கடி சண்டை போடுவார்களாம். இருவருக்கும் கருத்து வேறுபாடு அடிக்கடி வருமாம். ஆனால் தன்னுடைய மகன் சொல்லும் கருத்தை பிறகு மாரிமுத்து புரிந்து கொள்வாராம். அதுபோல அப்பாவின் வார்த்தைகளை மகனும் புரிந்து கொள்வாராம். இது பல நாட்களாக நடந்து கொண்டே தான் இருந்தது என்று மாரிமுத்துவின் மகன் கூறியிருக்கிறார்.
அதுபோல அப்பா இறந்த போது கூட நானும் அப்பாவும் ஒரு வாரமாக பேசாமல் சண்டை போட்டுக் கொண்டிருந்தோம். நாங்கள் தூரமாக இருக்கும்போது பேசிக் கொள்ளவில்லை என்றாலும் நேரில் பார்த்தோம் என்றால் உடனே பேசி விடுவோம். பல நேரங்களில் எனக்கு சார்பாக என்னுடைய அப்பாவிடம் பேசுவது என்னுடைய தங்கை தான் என்று மாரிமுத்துவின் மகன் கூறியிருக்கிறார். அதோடு கடைசியாக அம்மாவிடம் போன் செய்து அப்பா பேசியிருந்தார்.

எனக்கு கொஞ்சம் நெஞ்சு வலிக்கிறது அதனால நான் ஹாஸ்பிடலுக்கு போறேன். நீ ஹாஸ்பிடலுக்கு வந்துரு என்னோட ரிப்போர்ட்ட எடுத்துட்டு வா என்று சொல்லி இருந்தார். சின்னதா செக்கப் செய்துவிட்டு வந்துருவோம். இதுதான் அப்பா அம்மா கிட்ட பேசிய கடைசி வார்த்தை. யாருக்கும் எந்த சிரமமும் கொடுக்க கூடாது என்று நினைப்பவர் தான் அப்பா.
அதனால் தான் கடைசி நேரத்தில் கூட தனக்கு வலி இருந்தாலும் அடுத்தவர்களை தொந்தரவு செய்யாமல் தானே வண்டியை ஓட்டிக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு போயிருக்கிறார் என்று நடிகர் மாரிமுத்துவின் மகனும் மனைவியும் அந்த பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications