பயில்வான் பேசியது தவறு.. நாங்க இதை சொல்லுவோம்.. கடும் கோபத்தில் நடிகர் மாரிமுத்துவின் தம்பி
சென்னை: நடிகர் மாரிமுத்து சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார். அதற்கு பிறகு பல்வேறு வதந்திகள் அவர் பற்றி பரவி வந்தது.
மாரிமுத்து கடைசியாக தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஜோதிடர்களை அவமரியாதையாக பேசியதால்தான் அவருக்கு இறப்பு வந்து விட்டதாக பயில்வான் ரங்கநாதன் கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த மறைந்த நடிகர் மாரி முத்துவின் தம்பி சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசியது ரொம்ப தவறு, மரியாதையா பேசணும் என்று பல்வேறு தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அது குறித்து பார்க்கலாம்.
சில வாரங்களுக்கு முன்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் மாரிமுத்து திடீர் மரணம் அடைந்தார். காலை வரைக்கும் நன்றாக பேசி சிரித்துக்கொண்டிருந்த நடிகர் மாரிமுத்து சூட்டிங் ஸ்பாட்டில் டப்பிங் பேசிக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட உடல் அசெளகரியம் காரணமாக மருத்துவமனைக்கு சென்று இருந்த நிலையில் அங்கு மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
இது அனைத்து தரப்பட்டவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சின்னத்திரையிலும், வெள்ளி திரையிலும் அதிகமான ரசிகர்கள் திரை பிரபலங்கள் பலரும் இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இப்ப வரைக்கும் இருந்து வருகின்றனர். அதே நேரத்தில் நடிகர் மாரி முத்து கடைசியாக தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஜோதிடர்களை பற்றியும் ஜோதிடத்தை பற்றியும் விமர்சனம் செய்து பேசியிருந்தார்.
அதனால் தான் அவருக்கு திடீர் மரணம் ஏற்பட்டு விட்டது என்று பிரபல பத்திரிகையாளராகவும் நடிகராகவும் இருந்து வரும் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து நடிகர் மாரிமுத்துவின் தம்பி சமீபத்தில் பேட்டியில் பேசி இருக்கிறார். அதில் சாமியார்களை எதிர்த்து பேசியதால்தான் அண்ணனுக்கு இப்படி ஆகிட்டேன்னு பயில்வான் பேசி இருக்கிறார். இது எங்களை ரொம்பவே வேதனையில் ஆழ்த்தியது. இந்த மாதிரி எல்லாம் யாரும் பண்ணக்கூடாது.
அண்ணன் மட்டுமல்ல நானும் தான் சொல்கிறேன் சாமி இல்லை என்று அப்போ என்னையும் கொல்லட்டும் பார்ப்போம். பயில்வான் ரங்கநாதன் ஓப்பனா சொன்னாரு. அதனால நீங்க எல்லாரும் மீடியா மூலமா சொல்லுங்க இல்லன்னா, நாங்க டைரக்ட்டா அப்ரோச் பண்ண எங்களுக்கு எந்த பயமும் இல்லை.
அண்ணன் இறந்தவரை பத்தி இப்படி பேசலாமா? ஒரு கலைஞனை கலைஞனனே இப்படி எல்லாம் பேசலாமா? உயிரோடு இருக்கும்போது அவர்கிட்ட மோதிப் பாருங்க. ஆனால் அவரு இறந்த பிறகு அது அந்த சாமியாரை பற்றி பேசுனதுனால தான் அந்த சாமி வந்து கொன்னுடுச்சு என்று சொன்னா அது எவ்வளவு கேவலம்.

நானும் சாமி இல்லை என்று சொல்லுவேன் அதற்கு எடுத்துக்காட்டு கூட சொல்லுறேன் ஒரே தெருவில் அஞ்சு பெருமாள் கோவில் இருக்கும். ஆனால் ஒரு கோவிலில் மட்டும் தான் கூட்டம் அதிகமாக இருக்கும் அதற்கு காரணம் என்னன்னு கேட்டா அந்த கோவில்ல இருக்கிற பெருமாளுக்கு சக்தி அதிகம்னு சொல்றாங்க.
அப்போ கடவுள் இருக்கா? இல்லையா? என்ற கேள்வி தான் எனக்கும் வரும். அதனால தான் சொல்றேன் வருமானத்துக்காக அடுத்தவங்களை அசிங்கப்படுத்தி பேச கூடாது என்று அந்த பேட்டியில் நடிகர் ரங்கநாதன் பேசியது தவறு, என்று கோபமாக நடிகர் மாரிமுத்துவின் தம்பி பேசி இருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications