மைக்கை கீழே போட்ட மோகன்.. வார்த்தை விட்ட சுரேந்தர்.. கண்ணதாசன், எம்எஸ்வி போல வருமா?: உருகிய பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் மோகனின் மோகனமான குரலுக்கு சொந்தக்காரர் நடிகர் விஜய்யின் மாமா எஸ்.என்.சுரேந்தர்தான் என்றும், ஒருகட்டத்தில் மோகன் - சுரேந்தரிடையே கருத்து மோதல் ஏற்பட்டதாகவும் தயாரிப்பாளர் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Aram Naadu என்ற யூடியூப் சேனலுக்கு, சினிமா தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில், மைக் மோகன் - பின்னணி பாடகர் எஸ்.என் சுரேந்தர் இருவருக்குள் ஏற்பட்ட கருத்து மோதல் பற்றி விலாவாரியாக பேசியிருக்கிறார். அதன் சுருக்கம்தான் இது:

television mike mohan kannadasan

அவர் சொல்லும்போது, "இளையராஜா பாடல்களை மைக் பிடித்து பாடியதால் மைக் மோகன் என்று அழைக்கப்பட்டார்.. மோகனுக்கு தமிழே பேச வராது.. அவருக்கு பின்னணி குரல் தரப்பட்டது.. அது மோகன் குரல் இல்லை, மோகனமான குரல். நடிகர் விஜய்யின் மாமா எஸ்.என்.சுரேந்தர்தான் மோகனுக்கு அன்று பின்னணி குரல் தந்தார்.

மின்னும் நடிப்பு: என் குரலால்தான் மோகன் சிறந்த நடிகராக இருக்கிறார் என்று சுரேந்தரும், என் நடிப்பால்தான் சுரேந்தரின் குரல் மின்னுகிறது என்று மோகனும், ஒரு காலத்தில் சண்டை போட்டுக்கிட்டாங்க.

எஸ்என் சுரேந்தரால் மோகனுக்கு புகழா? மோகனால் எஸ்என் சுரேந்திரருக்கு புகழா? என்று விவாதம் வரும்போதே அது இரண்டாக உடைந்தது.. "நான் நடிச்சதால்தான், சுரேந்தரின் வாய்ஸ் பாப்புலர் ஆனது என்று மோகனும், நான் டப்பிங் பேசாவிட்டால் மோகன் கிடையாது என்று சுரேந்தரும் சொல்லி, கடைசியில் இருவருமே பிரிந்தார்கள்.. இப்போது இருவரும் என்ன ஆனார்கள்? சுரேந்தரும் கவனிக்கப்படாத நபராகிவிட்டார். மோகனும் மைக்கை கீழ போட்டுட்டு போயிட்டாரு

வைரமுத்து சர்ச்சை: இதே சர்ச்சைதான் வைரமுத்துவுக்கும், இளையராஜாவுக்கும் நடந்தது. என் பாடல் வரிகளால்தான் இளையராஜா என்று வைரமுத்து சொன்னார்.. என்னுடைய மெட்டுக்குதான் பாட்டு என்று இளையராஜா சொன்னார்.

அப்படியானால், வைரமுத்து எழுதாத பாடல்களுக்கு இசையமைத்த இளையராஜாவின் பாடல்கள் ஹிட் ஆகலியா? இளையராஜா அல்லாதவர்களுக்கு பாட்டெழுதி வைரமுத்து பாட்டுக்கள் ஹிட்டாகலியா? ஏ.ஆர். ரஹ்மான் வைரமுத்துவை பயன்படுத்தவில்லையா? இப்போது எல்லோருமே வைரமுத்துவை தள்ளி வைத்துவிட்டார்கள், அது வேற விஷயம்.

மோதல் ஆரம்பம்: ஆனால், இப்படியொரு விவகாரத்துக்குள் நீங்கள் போய்விட்டாலே, அங்கே பிரச்சனைகள் தானாகவே வரும். வைரமுத்து-இளையராஜா இருவருமே 6 வருடங்கள்தான் ஒன்றுசேர்ந்து பணியாற்றியிருக்கிறார்கள். ஆனால், அனைத்துமே அற்புதமான பாடல்கள்.. இருவருமே திறமைசாலிகள். இவர்கள் மறுபடியும் இணைந்தால் அற்புதமான விஷயங்கள் நடக்கும்..

இதில், மோகனுக்கு ஒருகட்டத்தில் கெட்ட நேரம் ஆரம்பமாகிவிட்டது. மோகன் சுரேந்தரை திட்ட, மோகனை நம்பி பிழைத்து கொண்டிருந்த சுரேந்தரும் மோகனை பதிலுக்கு திட்ட, 2 பேருக்குமே வருமானம் போய்விட்டது. 2 பேருமே வீட்டில் இப்போது உட்கார்ந்துட்டு இருக்காங்க..

திறமைசாலிகள்: எப்போதுமே 2 திறமைசாலிகள் இணைந்து செயல்படும்போது, வெற்றி கிடைக்கும். எந்தவொரு பாட்டுக்கும் மெட்டும் வேண்டும், வரிகளும் வேண்டும்... இதில்தான் கண்ணதாசன், எம்எஸ் விஸ்வநாதன் கூட்டணி வெற்றி பெற்றார்கள்.. இந்த ஜோடி பல்வேறு சாதனைகளை புரிந்ததற்கு இதுவே காரணம்.

எனக்குத்தெரிந்து, எஸ்என்.சுரேந்தருக்கு ஆரம்ப காலத்தில் விஜய் எந்த உதவியும் செய்தாக தெரியவில்லை.. தன்னுடைய ஆரம்ப கட்ட படங்களில் பாடுவதற்கு வாய்ப்பு வாங்கி தந்திருக்கலாம். 4 ஆயிரம், 5ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி தந்திருக்கலாம். மற்றபடி, சுரேந்தருக்கும் விஜய் உதவல.. விஜய்க்கும் சுரேந்தர் உதவல" என்றெல்லாம் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+