தற்கொலை செய்ய துணிந்த மனோபாலா.. காரணம் இதுதான்.. ஒரே நாளில் நடந்த அதிசயம்.. மோகன் ஓப்பன்
சென்னை: நடிகர் மோகன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் மனோபாலா தன்னிடம் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியது பற்றி பல விஷயங்களை பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
பொதுவாக சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் பலர் சொந்த கிராமங்களில் இருந்து சென்னைக்கு வந்து பல போராட்டங்களை சந்திக்கிறார்கள். அதிலும் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்றால் ஒன்று இயக்குனராக வேண்டும், இல்லை என்றால் நடிகராக வேண்டும் என்ற கனவோடு தான் பலரும் சென்னையை நோக்கி படையெடுக்கிறார்கள்

ஆனால் அவ்வளவு சீக்கிரத்தில் யாருக்கும் தங்களுடைய கனவு நிறைவேறி விடுவதில்லை. இந்த காலத்தில் மட்டுமல்லாமல் அந்த காலத்திலும் இதற்காக பல பேர் பல கஷ்டங்களையும் அவமானங்களையும் அனுபவித்திருக்கிறார்கள். அது குறித்து சிலர் வெளிப்படையாக பேசும் போது தான் இவர்கள் இவ்வளவு கஷ்டங்களை தாண்டி தான் இப்படி ஜெயித்திருக்கிறார்களா? என்று வியக்க வைக்கிறது.
அதிலும் ஒரு சிலருக்கு முதல் பட வாய்ப்பு கிடைக்கும் போது அதில் வெற்றி பெற்றுவிட்டால் ஓகே அடுத்தடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்து விடும். ஆனால் பல போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த முதல் வாய்ப்பு தோல்வியில் முடிந்து விட்டால் அவ்வளவு சீக்கிரத்தில் இரண்டாவது வாய்ப்பு கிடைத்து விடாது. அந்த மாதிரி தான் நடிகரும் இயக்குனருமான மனோபாலாவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.
மனோபாலா காமெடி நடிகராக பலருக்கும் தெரிந்திருந்தாலும் அவர் இயக்கிய திரைப்படங்கள் இப்போதுள்ள தலைமுறை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் கடந்த வருடத்தில் அவருடைய மறைவு ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியது. இப்போதும் அவர் நடித்த திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும்போது ரசிகர்கள் அவரை மிஸ் பண்ணி வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகர் மோகன் மனோபாலா குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்த மனோபாலா பிறகு இயக்குனராக மாறி இயக்கிய முதல் படம் ஆகாய கங்கை. இந்த படத்தில் கார்த்திக் மற்றும் சுஹாசினி நடித்திருப்பார்கள். இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தோல்வியில் முடிந்து விட்டது. இதனால் அவருக்கு அடுத்த வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்திருக்கிறது.
இது பற்றி மோகன் பேசுகையில் எனக்கும் மனோபாலாவுக்கும் நல்ல பழக்கம் இருந்தது. நாங்கள் இருவரும் வாடா போடா என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு நண்பர்களாகத்தான் இருந்தோம். மனோபாலாவின் முதல் படம் தோல்வி என்பதால் அவனுக்கு அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அடிக்கடி என்னிடம் கால்ஷீட் கேட்டு வந்தான். ஒரு நாள் என்னிடம் வந்து நீ எனக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று புலம்பினான்.
நான் அப்போது அவனிடம் ஒரு நாள் டைம் கொடு என்று சொல்லி அனுப்பி வைத்தேன். அப்போ அந்த நேரத்தில் என்னிடம் கால்ஷீட் கேட்டு கலைமணி வந்தார். அவரிடம் மனோபாலா தான் உங்கள் படத்தின் இயக்குனர் என்று நீங்கள் ஒத்துக் கொண்டால் நான் கால்ஷீட் கொடுக்கிறேன் என்று சொன்னேன். அதன்படி அவரும் ஒத்துக் கொண்டார். அடுத்த நாள் காலையில் அயன் செய்த சட்டை உடன் சிரித்த முகமாக மனோபாலா வந்து நின்று கொண்டிருந்தான். அப்படி உருவான படம் தான் பிள்ளை நிலா படம் என்று மோகன் பழைய நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications