நெப்போலியன் இப்படிப்பட்டவரா? ஆச்சரியமா இருக்கே.. புட்டு புட்டு வைத்த பிரபலம்.. ரூம் வாடகையை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னுடைய மகனை சந்தோஷப்படுத்துவதற்காகவே, இந்த திருமணத்தை ஜப்பானில் நடத்தியிருக்கிறார் நெப்போலியன் என்று மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.. அத்துடன் கலா மாஸ்டர் குறித்தும் லேசாக விமர்சித்து பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. இந்த பேட்டிதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

King 24X7 என்ற சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில், நெப்போலியன் மகன் திருமணம் குறித்து கூறியிருக்கிறார்.. மேலும், மணமக்கள் குறித்தும் அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

television napoleon dhanush

ஜப்பான்: "ஜப்பானில் தனக்கு கல்யாணம் செய்யணும்னு சொன்னதே தனுஷ்தான்.. காரணம், சென்னையிலோ அல்லது மூலகாரப்பட்டியிலோ கல்யாணம் செய்தால், அது வேற மாதிரி ஆகிடலாம். ஜப்பானில் திருமணம் செய்வதே சந்தோஷமாக இருக்கும்.. ஜப்பானிலிருந்தே அமெரிக்காவுக்கு போய்விடலாம்" என்று சொல்லியிருக்கிறார். அதனால், மகனின் சந்தோஷத்துக்காகவே இந்த திருமணத்தை ஜப்பானில் ஏற்பாடு செய்தார் நெப்போலியன்.

இதையடுத்து, வருங்கால மருமகள், அவருடைய சில உறவினர்கள் ஜப்பானுக்கு பறந்தார்கள்.. இந்த திருமணத்துக்கு முன்னால், வீடியோ காலில் பேச வைத்தாராம் நெப்போலியன்.. அதன்படியே தனுஷூம், அக்‌ஷயாவும் போனில் பேசியிருக்கிறார்கள்.. ஒருவரையொருவர் புரிதல், அறிதல், தெளிதல் கிடைத்தது. அதன்பிறகுதான் அக்‌ஷயா திருமணத்துக்கு சம்மதித்தார்..

ஒரே சாதி: தன்னுடைய சாதியிலேயே மகனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று நெப்போலியன் முடிவு செய்திருந்தார்.. அதன்படியே, அக்‌ஷயாவும் அவர் சமூகத்தை சேர்ந்தவரே..

அமெரிக்காவிற்கு சென்று அங்கிருந்து ஆடம்பர சொகுசு கப்பலில் 3 மாதம் பயணித்தது நெப்போலியன் குடும்பம்.. அப்போதே, அந்த கப்பலில் என்னென்ன வசதி உள்ளது? தமிழ்நாட்டு உணவு வகைகள் அங்கே எளிதாக கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்தார்.. இட்லி, தோசை போட்டு கொள்ளலாம்.. அரிசி பொங்கி கொள்ளலாம்.. தினமும் கப்பலில் என்ன சமைக்கிறோம் என்பதைகூட, வீடியோ போட்டு லைவில் வர்ணித்திருந்தார் நெப்போலியன்.

சினிமா பிரபலங்கள்: பிறகு அனைவரும் ஜப்பான் வந்து சேர்ந்தார்கள்.. சென்னையிலிருந்தும் பலர் கல்யாணத்துக்காக ஜப்பான் போயிருக்கிறார்கள்.. அனைவரையுமே விமான நிலையத்துக்கு சென்று வரவேற்றார் நெப்போலியன். குஷ்பு, மீனா, கார்த்தி, பாண்டியராஜன் கலா மாஸ்டர், என அனைவருமே ஜப்பானில் இருக்கிறார்கள்.. அவர்களுக்கு நட்சத்திர ஓட்டலில் ரூம் புக் செய்துள்ளார் நெப்போலியன்.

ரூம் வாடகை 1 நாளைக்கு 50 ஆயிரம்.. 3 நாள் வாடகை, அவர்கள் ஷாப்பிங் செய்வது என அனைத்து செலவையும் நெப்போலியன் ஏற்றுக் கொண்டுள்ளாராம்.. கச்சேரி, கலகலப்பு, நலுங்கு என பாரம்பரிய சடங்குகள் களை கட்டின..

தமிழக சாப்பாடு: ஜப்பானில் சாப்பாடு ஒத்துவருமா? தமிழக சாப்பாடு கிடைக்குமா? என்றெல்லாம் கலா மாஸ்டர் கவலைப்பட்டாராம். ஆனால், சென்னையில் கிடைத்ததைவிட எளிதாகவும், ருசியாகவும் எல்லா வகையான சாப்பாடுகளும் இங்கு கிடைக்க செய்த நெப்போலியனுக்கு நன்றி என்று கலா மாஸ்டர் தெரிவித்திருக்கிறார்.

நெப்போலியன், மக்கள் மனதை சினிமாவில் மட்டும் கவர்ந்தவரல்ல.. அரசியல், சமூக பணிகள் மூலம் மக்களை கவர்ந்தவர். அவர் செய்த நன்கொடைகள் ஏராளம்.

தாராள குணம்: தன்னுடைய மகனின் சிகிச்சைக்காக தென்காசியில் இலவச மருத்துவமனையை கட்டி கொடுத்து, அது இப்போதும் செயல்பட்டு வருகிறது.. நிறைய தமிழக இன்ஜினியரிங் பட்டதாரிகள், அவரது கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள்.. தன்னுடைய வீட்டுக்கு பக்கத்திலேயே விவசாய பண்ணை வைத்திருக்கிறார்.. அதனால், விவசாயத்தையும் அவரே கவனித்து வருகிறார்.

தன் மகனுக்கு யூடியூபர் ஒருவரை பிடிக்கும் என்பதால், அந்த யூடியூபரை முதல்வகுப்பு விமான டிக்கெட் எடுத்து தந்து, அமெரிக்காவில் தன்னுடைய மகனுடன் தங்க வைத்தவர் நெப்போலியன்..

உலக சாதனை: வெளிநாடுகளில் எத்தனையோ பேர் திருமணம் செய்துள்ளார்கள்.. ஆனால், யாரையுமே இப்படி சொந்த செலவில் அழைத்து சென்றதில்லை.. சென்னையில் நடைபெற்ற திருமணம் போலவே, ஜப்பானில் நடத்தி காட்டியிருக்கிறார். இது உலக சாதனையில் இடம்பெற்றிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+