நடிகர் விஜய் உடன் "பிரச்சனை”.. 15 வருஷம்.. "அதற்கு" அவர் ரெடியா?.. மனம் திறந்த நெப்போலியன்
சென்னை: நடிகர் நெப்போலியன் வில்லனாகவும், கதாநாயகனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்திருந்தாலும் தற்போது சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்.
இந்த நிலையில் நடிகர் விஜய் குறித்து பேட்டி ஒன்றில் பல தகவல்களை நெப்போலியன் கூறி இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது. என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
நடிகர் நெப்போலியன் "புது நெல்லு புது நாத்து" என்ற திரைப்படத்தின் மூலமா சினிமாவில் அறிமுகம் ஆகி அதைத் தொடர்ந்து பல ஹிட்டான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக அவர் நடித்து வெற்றி பெற்ற படங்கள் அனைத்துமே கிராம கதை அம்சங்களை கொண்டதாகவே இருக்கும். இவருடைய நடிப்பால் அந்த கேரக்டரை கண்முன்பு காட்டி விடுவது வழக்கம்தான். அதனாலேயே இவருடைய நடிப்பு பலருக்கும் பிடித்தது.

இவர் கதாநாயகனாக நடித்த எட்டுப்பட்டி ராசா, சீவலப்பேரி பாண்டி போன்ற பல திரைப்படங்கள் இவருடைய நடிப்பின் உச்சகட்டம் என்று சொல்லலாம். அதுபோல இவர் வில்லனாக நடித்த எஜமான் திரைப்படத்தை இப்போதும் பார்த்து இவரை பலர் திட்டிக் கொண்டிருக்கின்றனர். அந்த அளவிற்கு வில்லனாக இருந்தாலும் அதை கேரக்டரோடு ஒன்றி விடுவது இவருடைய வழக்கம். அந்த வகையில் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் போக்கிரி திரைப்படத்தில் நடிகர் விஜய் உடனும் நடித்திருந்தார்.
நடிப்பின் உச்சத்தில் இருக்கும் போதே நெப்போலியன் சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் காலடி எடுத்து வைத்து அங்கும் தனக்கென்று ஒரு தனி முத்திரையை பதித்து, தற்போது தன்னுடைய மகனின் உடல் நிலையை கருத்தில் கண்டு அரசியல் மற்றும் சினிமா இரண்டிலிருந்தும் விலகி அமெரிக்காவில் குடும்பத்தோடு செட்டில் ஆகி இருக்கிறார்.
அங்கே தன்னுடைய பிசினஸை கவனித்தபடியே விவசாயமும் செய்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேசிய பேட்டி ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில்," போக்கிரி படத்துல ஒரு சம்பவம் நடந்துச்சு, அதனால நானும் விஜய்யும் பேசிக்கிறது இல்லை. அவர் படங்கள் எதையும் நான் பார்க்கிறதும் இல்லை. விஜய் என் கூட பேசறதுக்கு ரெடினா நானும் இப்பவும் பேசுறதுக்கு ரெடி" என்று கூறியிருக்கிறார்.
மேலும் அந்த வீடியோவில் அவரிடம் விஜய் அவருடைய அப்பாவிடம் பேசுவது இல்லையா? என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதுக்கு நெப்போலியன் விஜய் அவருடைய அப்பா அம்மா கிட்ட பேச மாட்டாராமே..? விஜய் தன்னோட அம்மா அப்பா கிட்டையே பேசுறது இல்லைன்னு எல்லோரும் சொல்றாங்க. இந்த செய்தி அமெரிக்கா வரைக்கும் வந்திருக்கு. இது உண்மையா? பொய்யா? என்று கூட எனக்கு தெரியாது.
முதல்ல அவரோட அப்பா அம்மா கூட சமரசம் ஆகட்டும். எனக்கும் விஜய்க்கும் மோதல் ஏற்பட்டு 15 வருஷம் ஆகுது என்று கூறி இருக்கிறார்.இதைக் கேட்ட ரசிகர்கள் பலரும் இவர்கள் இருவருக்கும் என்னதான் பிரச்சனை நடந்து இருக்கும்..? எதனால் 15 வருடங்களுக்கு மேலாக பேசாமல் இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
-
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications