Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மயோபதி ஹாஸ்பிடல் என் மகனுக்காக இல்ல.. ராமசாமி கேட்ட கேள்வி.. ஸ்டாலின் வந்தாரு.. நெப்போலியன் ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் நெப்போலியன் தான் திருநெல்வேலியில் கட்டிய மயோபதி ஹாஸ்பிடல் உருவான விதம் குறித்து சமீபத்தில் பேட்டியில் பேசி இருக்கிறார். அதோடு அந்த மருத்துவமனையை அப்போது திறந்து வைத்தது தற்போதைய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தான் என்றும் நெப்போலியன் கூறியிருக்கிறார்.

சமீபத்தில் சில தினங்களாகவே நடிகர் நெப்போலியன் பற்றிய செய்திகள் தான் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. நெப்போலியன் நடிப்பு மற்றும் அரசியலை விட்டு விலகி வெளிநாட்டில் செட்டில் ஆகி இருக்கிறார். அதுவும் அமெரிக்காவில் குடும்பத்தோடு செட்டில் ஆகி இருக்கும் நெப்போலியன் அங்கு பிசினஸை செய்து வரும் நிலையில் இயற்கை விவசாயத்தையும் செய்து வருகிறார்.

Television Napoleon

ஆனால் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு மருத்துவமனையை கட்டி பல பேருக்கு இலவச சிகிச்சையும் செய்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய மூத்த மகன் தனுஷின் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கும் நிலையில் நிச்சயதார்த்த பத்திரிக்கையை முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து கொடுத்த இப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இந்த செய்தி இணையத்தில் அதிகமாக பேசப்பட்டது.

அதைத் தொடர்ந்து வீடியோ காலில் நெப்போலியன் மூத்த மகன் எங்கேஜ்மென்ட் நடைபெற்றது. அதுவும் பரபரப்பு ஏற்படுத்தியது. இப்படியான நிலையில் நெப்போலியன் தான் எதற்காக இலவச மருத்துவமனையை கட்டிக் கொடுத்தேன் என்று பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

அதில் நெப்போலியன் பேசுகையில் எனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். மூத்த மகன் தனுஷ் இரண்டாவது மகன் குணால். மூத்த மகனுக்கு நான்கு வயது இருக்கும் போது தான் இரண்டாவது மகன் பிறந்தான். மூத்த மகனின் நடையில் சில வித்தியாசங்கள் எனக்கு நான்கு வயதிலேயே தெரிந்தது. அப்போது அவரை மருத்துவமனைக்கு கொண்டு போய் செக் பண்ணியதில் அவருக்கு தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள்.

அப்போது இதற்கு மருந்து எதுவும் கிடையாது இதை சரி செய்ய முடியாது என்றும் சொல்லிவிட்டார்கள். நான் அதை நம்பவில்லை பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தேன். அதற்கு பிறகு அவர்கள் சொன்னது போலவே 10 வயதில் என்னுடைய மகனுக்கு நடக்க முடியாமல் போய்விட்டது. அதற்கு பிறகு தான் எனக்கு பயம் அதிகமானது. அதற்குப் பிறகு நான் அந்த நேரத்தில் மத்திய மந்திரியாக இருந்ததால் பல நாடுகளுக்கு சென்று இதற்காக மருத்துவம் பார்க்க ஏற்பாடுகளை செய்து பார்த்தேன்.

எல்லா இடங்களிலும் இதற்கு மருந்து கிடையாது என்று சொல்லிவிட்டார்கள். அந்த நேரத்தில் தான் திருநெல்வேலி பக்கத்தில் பாரம்பரிய முறையில் மையோபதி சிகிச்சை பார்த்து வருவதாக தெரிந்தது. சரி அதையும் பார்க்கலாம் என்று தான் நான் என்னுடைய மகனை கூட்டிட்டு போய் இருந்தேன். அங்கு இடவசதிக்கு குறைவாக இருந்ததால் அங்கு மருத்துவம் பார்த்த ராமசாமியை என்னுடைய வீட்டிலேயே வைத்து என்னுடைய மகனுக்கு சிகிச்சை செய்ய வைத்தேன்.

அந்த நேரத்தில் நான் நடிகர் மட்டுமல்லாமல் மத்திய மந்திரியாகவும் இருந்ததால் என்னுடைய மகனுக்கு நோய் பாதிக்கப்பட்டிருப்பது செய்தி சேனல்கள் எல்லாவற்றிலும் பரவ தொடங்கிவிட்டது. அதனால் இது போல நோயால் பாதிக்கப்பட்ட பல மக்கள் என்னுடைய வீட்டிற்கு வர தொடங்கி விட்டார்கள். வீட்டில் அவர்கள் தங்குவதற்கு சரியான வசதி கிடையாது. அதனால் பலர் நீங்கள் எங்களுக்கு சொல்லுங்க என்று என்னிடமே ரெகமெண்ட்க்கு வந்தார்கள்.

அந்த நேரத்தில் நான் எனக்கே அங்கு இடவசதி இல்லை என்பதனால் தான் என்னுடைய வீட்டில் தங்க வைத்திருக்கிறேன் நான் என்ன செய்ய முடியும் என்று சொன்னேன். பிறகு ராமசாமியை கூப்பிட்டு என்ன செய்யலாம் என்று விசாரித்தேன். ராமசாமி நீங்க ஒரு மருத்துவமனை மட்டும் கட்டி கொடுங்க சார் நான் கவனித்துக் கொள்கிறேன் என்றார் சரி என்று நானும் இரண்டு வருடத்திற்குள் மருத்துவமனையை கட்டி முடித்து விட்டேன். அந்த மருத்துவமனையை இப்போது முதலமைச்சராக இருக்கும் மு க ஸ்டாலின் தான் அந்த நேரத்தில் வந்து திறந்து வைத்தார்.

Television Napoleon

அந்த மருத்துவமனையில் இப்போது பல நாடுகளில் இருந்து மக்கள் வந்து தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல நோய் பலபேருக்கு இருக்கு என்பதை தெரிந்து பலரும் மனதை தேற்றிக் கொள்கிறார்கள். அதுபோல இங்கு எந்த மருந்தும் உள்ளே கொடுப்பது கிடையாது. வெளியே கட்டு தான் போடப்படுகிறது.

அதற்கும் எங்கெல்லாமோ இருந்து ஆட்கள் வருகிறார்கள். என்னுடைய மகனைப் போல யாரும் பாதிக்கக் கூடாது என்று நான் நினைத்தேன். நான் என்னுடைய மகனுக்காக அந்த ஹாஸ்பிடலை கட்டவில்லை. அதுபோல இனி ஒரு குழந்தைக்கு பாதிப்பு வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் நான் அந்த ஹாஸ்பிடல் கட்டினேன் என்று அந்த பேட்டியில் நெப்போலியன் பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+