அமெரிக்காவிலும் தலைவாழை விருந்து.. அசத்திய நெப்போலியன்.. விஷயம் இதுதானா? கடல் கடந்து பாரம்பரியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் நெப்போலியன் அமெரிக்காவில் குடும்பத்தோடு செட்டில் ஆகி இருக்கும் நிலையில் அவரை பார்ப்பதற்காக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ரவி சென்றிருந்த நிலையில் அவருக்கு தலைவாழை விருந்து வைத்து நெப்போலியன் அசத்தி இருக்கிறார். அது குறித்து ரவி பெருமையாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நெப்போலியன் இப்போது அதிகமாக சினிமாவில் நடிப்பதில்லை. சில வருடங்களுக்கு முன்பே சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது அரசியலில் களம் இறங்கி இருந்தார். திமுக ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராக பதவி வகித்த நெப்போலியன் தன்னுடைய மகனுக்காக பதவி மற்றும் நடிப்பை விட்டு விட்டு இப்போது அமெரிக்காவில் குடும்பத்தோடு செட்டில் ஆகி இருக்கிறார்.

நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்த பிறகு தனுஷ், மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதில் அவருடைய மூத்த மகன் தனுஷ் நான்கு வயதில் இருக்கும் போதே மற்ற குழந்தைகள் போல இல்லை, இவருக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதை புரிந்து கொண்ட நெப்போலியன் அந்த நேரத்தில் தன்னுடைய மகனுக்காக பல மருத்துவமனைக்கு ஏறி இறங்கியிருக்கிறார். அந்த நேரத்தில்தான் அவருக்கு தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது.

இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் 10 வயதிற்கு மேல் நடக்க மாட்டார்கள் என்று அப்போது டாக்டர்கள் சொல்லிவிட்டார்களாம். தன்னால் முடிந்த அளவிற்கு ஆங்கில மருத்துவத்தில் தன்னுடைய மகன்களின் உடல் நிலையை சரி செய்து விடலாம் என்று அதற்காக போராடிய நெப்போலியனுக்கு கடைசியில் ஏமாற்றம்தான் மிஞ்சி இருக்கிறது. அந்த நேரத்தில் தான் திருநெல்வேலி பக்கத்தில் ஒரு ஊரில் பாரம்பரிய வைத்தியம் மூலம் இதை பண படிப்படியாக குணப்படுத்த முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

உடனே தன்னுடைய மகனை அங்கே கூப்பிட்டு போன நெப்போலியன் அங்கு சிகிச்சை எடுத்து இருக்கிறார். அதற்கு பிறகு படிப்படியாக தனுஷ் குணமடைந்திருக்கிறார். ஆனாலும் பெரிய அளவில் அவரால் அந்த நோயிலிருந்து விடுபட முடியவில்லை என்றாலும் இந்த நோய் பாதிக்கப்பட்ட மற்ற குழந்தைகளை விடவும் தனுஷ் தன்னுடைய தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சியால் தன்னுடைய வேலைகளை தானே செய்ய தொடங்கி இருக்கிறார்.

அதற்குப் பிறகு தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல பேர் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்ட நெப்போலியன் தன்னுடைய மகனைப் போல இனி யாரும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக இதற்காக ஒரு மருத்துவமனையையும் கட்டி கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய மகனின் எதிர்காலத்திற்காக இந்தியாவை விட்டு அமெரிக்காவில் குடும்பத்தோடு குடிபெயர்ந்த நெப்போலியன் அங்கு பிசினஸ் செய்து வருகிறார்.

அதோடு விவசாயமும் செய்து வருகிறார் ஆனாலும் தன்னுடைய பாரம்பரியத்தை மறந்து விடக்கூடாது என்பதற்காக அமெரிக்காவில் இருக்கும் தமிழர்களை ஒன்று கூட்டி அடிக்கடி மீட்டிங் போன்றவற்றையும் நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நெப்போலியனின் மகனை பார்ப்பதற்காக சில வாரங்களுக்கு முன்பு விஜய் டிவி பிரபலங்களான மாகாபா மற்றும் டிஜே பிளாக் இருவரும் நேரில் சென்று இருக்கின்றனர்.

அப்போது அவர்கள் இருவரையும் சந்தித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்று தனுஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அதைத் தொடர்ந்து இப்போது முன்னால் ஐபிஎஸ் அதிகாரியான ரவி, நெப்போலியன் மகன் தனுஷை பார்த்து அவருடைய தன்னம்பிக்கையை பாராட்டுவதற்காக அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறார். அங்கு நெப்போலியன் உடன் சில புகைப்படங்களை எடுத்து இருக்கிறார்.

அது குறித்த பதிவுகளை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரவி பகிர்ந்து இருக்கிறார். அப்போது தலைவாழை இலை வைத்து நெப்போலியன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வந்திருந்த விருந்தினர்களுக்கு சாப்பாடு பரிமாறி இருக்கிறார்கள். அதை தன்னுடைய instagram பக்கத்தில் பகிர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ரவி, "அமெரிக்காவில் அன்பு நண்பர் திரு நெப்போலியன் அவர்களை சந்தித்து உரையாடியது மகிழ்ச்சியாக உள்ளது. கடல் கடந்து, கண்டம் கடந்து கேட்கும் தமிழ் மொழியும் நம் பாரம்பரியமும் எப்போதும் உலகத்திற்கு முன் உதாரணமாக விளங்கும்" என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கு அதிகமானோர் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+