"ஆசை" அவருக்கு 3 பொண்டாட்டி! இவருக்கு 2 புருஷன்! 4வதாக ரூம் போட்ட நடிகையை மணந்தாரா 60 வயசு நடிகர்?
ஹைதராபாத்: நடிகர் நரேஷ் பாபு, நடிகை பவித்ரா லோகேஷை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
பழங்கால தெலுங்கு நடிகர் கிருஷ்ணா. இவரது மூத்த மகன் நரேஷ் பாபு. தனது தந்தையை போல தெலுங்கு திரைத்துறையுலகில் தனி இடத்தை பிடித்துள்ளார். அது போல அவரது தம்பி மகேஷ் பாபு. இவர் தெலுங்கு திரைத்துறையுலகில் முன்னணி நடிகராவார்.
நரேஷ் பாபு ஏற்கெனவே இரு திருமணங்களை செய்து கொண்டு மனைவிகளை விவாகரத்து செய்துள்ளார். இந்த நிலையில் மூன்றாவதாக அவர் ரம்யா ரகுபதியை திருமணம் செய்து கொண்டு அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன.

60 வயது
60 வயதாகியும் மனைவிகளை அவ்வப்போது மாற்றும் பழக்கம் நரேஷ் பாபுவை விட்டு போகவில்லை என்றே சொல்லலாம். 3 ஆவது மனைவி, குழந்தைகள் இருக்கும் போது 45 வயது நடிகை பவித்ரா லோகேஷுடன் நரேஷ் பாபு உறவு வைத்திருந்தார். பவித்ரா ஏற்கெனவே இரு கணவர்களை விவாகரத்து செய்தவர். நரேஷுடனான பழக்கம் ரம்யாவுக்கு தெரியவந்தவுடன் வீட்டில் பிரச்சினை வெடித்தது.

ரம்யா
இதனால் தன் விஷயத்தில் தலையிடும் ரம்யா இனி தனக்கு வேண்டாம் என்ற ரீதியில் நரேஷ் பாபு அவரை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து ரம்யா ரகுபதி கூறுகையில் பவித்ராவின் தூண்டுதலால்தான் என்னை அவர் விவாகரத்து செய்கிறார் என்றார். இந்த நிலையில் மைசூருவில் உள்ள ஒரு ஹோட்டலில் பவித்ராவுடன் நரேஷ் ரூம் போட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின.

இரவு முழுவதும் ஒரே அறையில்
இதை அறிந்த ரம்யா அந்த ஹோட்டலில் அவர்கள் தங்கியிருந்ததாக கூறப்படும் அறையின் கதவை தட்டி கலாட்டா செய்தார். ஆனால் நரேஷ் திறக்கவே இல்லை. மறுநாளும் அதே அறையில் அவர்கள் இருந்தனர். அதுவரை ரம்யாவும் அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை. இந்த நிலையில்தான் ஹோட்டல் நிர்வாகத்தினர் போலீஸுக்கு புகார் அளித்தனர்.

நரேஷ் பவித்ரா
போலீஸார் வந்து கதவை தட்டியவுடன் நரேஷ் பாபுவும் பவித்ராவும் வெளியே வந்தனர். நரேஷ் சிரித்து கொண்டே வந்தார். நரேஷையும் பவித்ராவையும் செருப்பால் அடிக்க பாய்ந்தார் ரம்யா. ஆனால் போலீஸார் தடுத்து விட்டனர். இதனால் மனைவி ரம்யாவை கிண்டல் செய்து கொண்டு விசில் அடித்தவாறே நரேஷ் புறப்பட்டு சென்றார்.

ரகசிய திருமணம்?
இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு நரேஷ் பதில் அளிக்கையில் ரம்யா ஒரு பிராடு. அவர் மேல் ஏற்கெனவே இரு வழக்குகள் இருக்கிறது. நானும் பவித்ராவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறோம் என நரேஷ் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த ஜோடிக்கு ஏற்கெனவே ரகசியமாக திருமணம் நடைபெற்றுவிட்டதாக தகவலறிந்தவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நரேஷ்- ரம்யா விவாகரத்து வழக்கு கோர்ட்டில் இருக்கும் போது நரேஷ் திருமணம் செய்துள்ளது உண்மையாக இருந்தால் அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருக்கிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications