இதயத்தை திருடாதே நவீன் மனைவியோடு சேர்ந்து ஆரம்பித்த புது பிசினஸ்.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: நடிகர் நவீன் செய்தி வாசிப்பாளர் கண்மணியை திருமணம் செய்து இருக்கிறார்.
கண்மணி தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் வளைகாப்பு சமீபத்தில் நடத்தி முடித்து இருந்தனர்.
இந்த நிலையில் நடிகர் நவீன் மற்றும் கண்மணி இருவரும் சேர்ந்து புதியதாக காபி ஷாப் பிசினஸ் தொடங்கி இருக்கின்றனர்.

சீரியலில் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காரணம் டிவியில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் சீரியல்களின் அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வதால் ரசிகர்கள் அவர்களை அறியாமலே சீரியல் பக்கம் மனம் வந்து விடுகிறது. அந்த வகையில் இளைஞர்களை கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக இதயத்தை திருடாதே சீரியல் இருந்து வந்தது. இந்த சீரியலில் கதாநாயகனாக நவீன் நடித்து வந்தார். முதல் பாகத்தை தொடர்ந்து இந்த சீரியல் இரண்டாவது பாகத்திலும் பல எபிசோடுகள் வெற்றிகரமாக ஓடி முடிவடைந்தது.
இந்த சீரியல் முடிவடைந்த பிறகு அதே கலர்ஸ் தமிழில் கண்ட நாள் முதல் என்ற சீரியலில் நவீனுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே நவீனுக்கு சீரியல் வட்டாரத்தில் அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இவர் காலேஜ் படிப்பை முடித்ததும் மாடலிங் மூலமாக ஒரு சில திரைப்படங்களில் சைட் ரோலில் நடித்திருக்கிறார். இவர் ஏழுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் நடித்திருந்தாலும், இவருடைய திறமைக்கு ஏற்ப கதை அமையாததால் இவருடைய பார்வை சீரியல் பக்கம் திரும்பி இருக்கிறது.

சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் செய்தி வாசிப்பாளரான கண்மணியோடு இவருக்கு திடீர் திருமணம் ஏற்பட்டது. இவர்கள் இருவருக்கும் காதல் திருமணம் எல்லாம் இல்லையாம். வீட்டில் பார்த்து அரேஞ்ச் செய்த திருமணம் தானாம். திருமணத்திற்கு பிறகு காதலர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர்கள் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களிடம் மகிழ்ச்சியோடு தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் தான் கண்மணிக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு பங்க்ஷன் நடைபெற்றது.

இந்த நிலையில் கண்மணி தற்போது செய்தி வாசிப்பாளராக இல்லாமல் வீட்டில் தான் இருந்து வருகிறாராம். அதே நேரத்தில் நவீனும் கண்ட நாள் முதல் சீரியலுக்கு பிறகு எந்த சீரியலிலும் நடிக்காமல் இருக்கும் நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து தற்போது காபி ஷாப் ஒன்றை தொடங்கி இருக்கின்றனர். தாங்கள் தொடங்கி இருக்கும் புது பிசினஸ் பற்றி தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் தெரிவிக்க, இதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications