ராதிகாவை பார்த்து அப்படி பேசிய பப்லு, சிம்ரனை பார்த்து எமோஷனலாகி சொன்ன வார்த்தை.. இப்படியும் நடந்ததா?
சென்னை: நடிகர் பப்லு சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது நடிகை சிம்ரன் குறித்து அவர் வெளிப்படையாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதற்கு முன்பு ஒரு பேட்டியில் கலந்து கொண்ட போது நடிகை ராதிகாவுடன் நடித்த சீரியலால் தனக்கு சினிமாவில் கிழவன் என்ற பெயர் வந்துவிட்டது என்று வருத்தமாக பேசி இருந்தார். ஆனால் சிம்ரன் பற்றி அவர் பெருமையாக பேசியது இப்போது விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மனதில் பட்டதை அப்படியே வெளிப்படையாக பேசி விடுவார்கள். அந்த வரிசையில் ஒருவர்தான் நடிகர் பப்லு. அதனாலேயே அவர் பல நேரங்களில் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு தன்னைவிட வயது குறைந்த ஒரு பெண்ணை தான் காதலிப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார். நாங்கள் இருவரும் லிவிங்கில் இருக்கிறோம் என்னுடைய மகன் வயதை விட இந்த பொண்ணை நான் கல்யாணம் செய்வதில் எதுவும் தப்பு கிடையாது, எனக்கு இந்த வயதிலும் பெண் சுகம் கேட்கிறது அதனால் நான் இவரோடு கல்யாணம் செய்யப்போகிறேன் என்றெல்லாம் பேசி இருந்தார்.

ராதிகா பற்றி பப்லு பேட்டி
ஆனால் சில மாதங்களிலேயே அந்த பெண்ணை பப்லு பிரிந்து விட்டார். இப்போது அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணமும் நடந்து விட்டது. சமீபத்தில் கூட தன்னை பற்றி பலரும் சுகர் டாடி என்று கிண்டல் செய்து வருவதற்கு பதில் கொடுத்திருந்தார். அதில் அவர் பேசும்போது சுகர் டாடி என்றால் இப்பொழுது உள்ள பலருக்கு என்ன அர்த்தம் என்று தெரியாமல் என்னை பார்த்து அந்த வார்த்தை சொல்கிறார்கள். சுகர் டாடி என்றால் அந்த பெண் என்னுடைய பணத்திற்காக என்னுடன் பழகி இருந்தால் தான் நான் சுகர் லேடி. ஆனால் அந்தப் பெண் என் அழகை பார்த்து தான் என்னிடம் பழகினார்.
வாணி ராணி சீரியல்
அந்தப் பெண் என்னுடன் பழகும் போது நான் வாடகை வீட்டில் தான் இருந்தேன். அந்த பெண்ணின் அப்பா போலீசாக இருக்கிறார். அதனால் அவருக்கு பண தேவை எதுவும் கிடையாது என்றும் விளக்கம் கொடுத்திருந்தார். அதுபோல ஒரு அவார்டு நிகழ்ச்சியில் பப்லு கலந்து கொண்ட போது வாணி ராணி சீரியலில் ராதிகாவுடன் நடித்த புகைப்படத்தை காட்டப்பட்டது. அந்த புகைப்படத்தை பார்த்ததுமே பப்லு கடுப்பாகி இதை இந்த போட்டோ பற்றி நான் பேச விரும்பல, இந்த சீரியலில் நடித்ததால் என்னுடைய இமேஜ் முடிந்துவிட்டது.
பப்லுவின் வருத்தம்
இந்த சீரியலில் ராதிகாவுடன் நடித்திருந்தேன். ராதிகா பல வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். அவருக்கு நான் ஜோடியாக நடித்ததால் நானும் வயதானவர் என்ற ஒரு முத்திரை குத்தப்பட்டு விட்டது. அதற்கு பிறகு பத்து திரைப்படங்களில் எனக்கு வயதான கேரக்டரில் நடிக்க வந்தது அதனால் நான் வெறுத்து போய்விட்டேன் என்று கூறியிருந்தார்.
சிம்ரன் பற்றி பப்லு
அதுபோல இன்னொரு பேட்டியில் கலந்து கொண்ட போது நடிகை சிம்ரன் குறித்து கேட்கப்பட்டது சிம்ரன் பற்றி பப்லு பேசும்போது, சிம்ரனை பார்த்தாலே எனக்கு வியப்பாக இருக்கும். அவள் வருவாளா திரைப்படத்தில் அவர் அப்போதுதான் என்னை போல சினிமாவில் என்ட்ரி ஆகி இருந்தார். ஆனாலும் அவ்வளவு பக்குவமாக நடந்து கொள்வார். அவ்வளவு நேரம் அமைதியாக இருப்பார். ஆனால் டேக் சொல்லிவிட்டதும் உடனே கேரக்டராக மாறிவிடுவார். எனக்கு அப்போதே அவரை பார்த்து வியப்பு இருந்தது. அவர் இப்போ வரைக்கும் அதே போல தான் இருக்கிறார். எந்த விதத்திலும் அவருடைய வேலையில் மாற்றம் எனக்கு தெரியவில்லை. சிம்ரன் எனக்கு இப்போதும் நல்ல தோழி என்று அந்த பேட்டியில் பப்லு பேசியிருக்கிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications