நான் காதலை உணர்ந்தது சீதா கிட்ட தான்.. ஆனால் டைவர்ஸ்னு பேசும்போது.. பார்த்திபன் எமோஷனல்
சென்னை: நடிகர் பார்த்திபன் நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து, பிறகு விவாகரத்து செய்தது பற்றி பேட்டியில் எமோஷனலாக பேசி இருக்கும் நிலையில் இந்த வீடியோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
சமீபத்தில் ஒரு ட்ரெண்டிங் உருவாகி இருக்கிறது, புது திரைப்படம் வெளியாகப் போகிறது என்றால் அந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் தொடர்ச்சியாக பல youtube சேனல்களில் பேட்டி கொடுத்து வருகின்றனர். அதுவரைக்கும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் குறித்து பல விஷயங்களை மனம் திறந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் டீன்ஸ் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் பார்த்திபனும் பல சேனல்களில் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் டீன்ஸ் திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் கடைசி நேரத்தில் சில காரணங்களால் பார்த்திபன் அந்த திரைப்படத்தை வெளியிடாமல் போயிருந்தது. இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகும் அதே சமயத்தில் டீன்ஸ் திரைப்படமும் வெளியாக இருக்கிறது.
ஏற்கனவே பார்த்திபனின் முதல் திரைப்படமான புதிய பாதை திரைப்படம் வெளியாக போகும்போது நடிகர் கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் திரைப்படமும் வெளியாகி இருந்தது. அந்த நேரத்தில் பெரிய அளவில் புதிய பாதை திரைப்படம் வெற்றி பெற்று அவருக்கு விருதுகளையும் வாங்கி கொடுத்து இருந்தது.
அதேபோல இப்போது இந்தியன் 2 திரைப்படம் பிரம்மாண்டமாக பிரமோஷனோடு வெளியாவதற்கு காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த படத்தின் ப்ரோமோஷன்க்கு செலவழிக்கப்பட்ட பணம் தான் என்னுடைய படத்தின் மொத்த பட்ஜெட் ஆக இருக்கும் என்று பார்த்திபன் கூறி இருக்கிறார். ஆனாலும் தன்னுடைய படம் வெற்றி பெறும் என்று நம்பிக்கையில் இருக்கும் பார்த்திபன் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து அந்த பேட்டியில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அதில் பார்த்திபன் பேசுகையில் நான் என்னுடைய வாழ்க்கையில் முதல் முதலாக காதலை உணர்ந்தது சீதாவிடம் தான். அவரை அந்த நேரத்தில் அளவு அதிகமாக காதலித்தேன். அதனால் அவரை கல்யாணம் கூட செய்யாமல் அவரை காதலித்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அவர் ஒரு பெரிய நடிகையாக மாற வேண்டும் என்று நினைத்தேன்.
ஆனால் அந்த நேரத்தில் சீதா இனி நடிப்பு போதும் என்று நினைத்திருந்த போதுதான் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். ஆனால் திருமணத்திற்கு பிறகு எங்களுடைய வாழ்க்கை மாறியது. அந்த நேரத்தில் சீதா மீண்டும் நடிக்க வேண்டும் என்று நினைத்தார். அந்த நேரத்தில் நான் முட்டாள்தனமாக இருந்ததால் சீதா நடித்தால் நம்முடைய குடும்பம் உடைந்து விடும் என்று அவருடைய நடிப்புக்கு தடை போட்டேன்.
இப்போ இருக்குற மெச்சூரிட்டி அப்போ இருந்திருந்தால் தாயே போய்ட்டு வாமா நீ உன்னுடைய ஆசை கனவை நிறைவேற்று அதுதான் எனக்கு சந்தோசம் என்று சொல்லி இருப்பேன். ஆனால் அந்த நேரத்தில் நமக்கு சரியான மெச்சூரிட்டி இல்லாததால் பிரச்சனைகள் ஏற்பட தொடங்கியது. முதல் நாள் எங்களுக்குள் பிரச்சனை தொடங்கிய போது இருந்தே இந்த வாழ்க்கை பிரிந்து விடக்கூடாது என்று நான் பயந்து கொண்டு இருந்தேன்.
அதனாலயே 12 வருஷம் வாழ்க்கையில் நிம்மதி இல்லாமலே களைந்து விட்டது. முதல் நாள் நான் அவரை விட்டு பிரிந்து இருந்தால் அவருடைய வாழ்க்கையும் சரியாக இருந்திருக்கும் என்னுடைய வாழ்க்கையும் சரியாக இருந்திருக்கும். திருமண வாழ்க்கையில் கணவன் மனைவிக்குள் பிடிக்கவில்லை என்றால் அப்போதே பிரிந்து விட வேண்டும். எக்காரணத்தை கொண்டும் சாக்ரிஃபைஸ் பண்ணி கொண்டு இருவருடைய வாழ்க்கையையும் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பது இப்போ எனக்கு புரிகிறது.
அதே நேரத்தில் பிரிய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் குழந்தைகள் வருவதற்கு முன்பு பிரிந்து விட வேண்டும். குழந்தைகள் கணவன் மனைவியின் பிரிவால் கஷ்டங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலையை மட்டும் கொடுக்கக் கூடாது என்று என்னுடைய வாழ்க்கையில் நான் தெரிந்து கொண்டேன்.
முதல்முறையா சீதா டைவர்ஸ் கேட்கிறபோது கூட இந்த வாழ்க்கையை சரி செய்து விடலாம்... இப்படியே கொண்டு போய் விடலாம் என்று நான் ரொம்ப யோசித்தேன். டைவர்ஸ் என்பது இப்போ சாதாரணமா தெரிகிறது. ஆனால் அந்த நேரத்தில் அது ஒரு பெரிய கஷ்டமாக தெரிந்தது. அதனால் தான் அதை கொடுப்பதற்கு தயக்கம் இருந்தது என்று அந்தப் பேட்டியில் பார்த்திபன் பேசி இருக்கிறார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications