Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்மா இறந்த பிறகு சீதா மெசேஜ் அனுப்புனாங்க! வருத்தம் இருக்கு, காதல் குறையல! இனி மனைவி? - பார்த்திபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் பார்த்திபன் நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் சீதா குறித்து பார்த்திபன் எமோஷனலாக பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதோடு சீதாவை பிரிந்த பிறகு தான் எதற்காக வேற யாருக்கும் மனைவி என்ற ஸ்தானத்தை கொடுக்கவில்லை என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

கடந்த வருடத்தில் சினிமா துறையில் பல பிரபலங்கள் அடுத்தடுத்து விவாகரத்து செய்தியை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தனர். ஆனால் இதற்கெல்லாம் முன்னோடி நடிகர் பார்த்திபன், சீதா தம்பதி என்றே சொல்லலாம். இவர்கள் புதிய பாதை என்ற திரைப்படத்தில் ஒன்றாக நடிக்கும் போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

Parthiban Seetha

பார்த்திபன் சீதா குழந்தைகள்

இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் இருக்கிறார். அதில் மகன் இயக்குனராக வேண்டும் என்று அதற்காக முயற்சி செய்து வருகிறார். அதுபோல மூத்த மகளும் மருமகனும் இயக்குனர் ஆவதற்காக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்திபன் பேட்டியில் பேசியிருக்கிறார். இரண்டாவது மகளுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு தான் திருமணம் நடைபெற்றது.

சீதாவின் அம்மா இறப்பு

அதுபோல நடிகை சீதாவிற்கு இத்தனை வருடங்களாக துணையாக இருந்த அவருடைய அம்மா கடந்த மாதத்தில் உடல்நிலை குறைவினால் காலமானார். அதற்குப் பிறகு தன்னுடைய அம்மா குறித்து உருக்கமாக பல போஸ்ட்களை சீதா வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

விவாகரத்து பற்றி விளக்கம்

இந்த நிலையில் சீதா குறித்து பேட்டி ஒன்றில் நடிகர் பார்த்திபன் பேசும்போது, நான் எங்கள் திருமணம் முறிவு பற்றி பிள்ளைகளிடம் பேசியது கிடையாது. மூணு பேருக்கும் அம்மாவை ரொம்ப பிடிக்கும். அப்பாவையும் பிடிக்கும். பொதுவாக இந்த மாதிரி திருமணம் முடிவுக்கு பிறகு அம்மாவும் அப்பாவும் மாத்தி மாத்தி ஒருத்தரை ஒருத்தர் கெட்டவங்கன்னு சொல்லி வைப்பாங்க.

Parthiban Seetha

பார்த்திபன் செய்த உதவி

ஆனால் நாங்க ரெண்டு பேருமே அப்படி பண்ணல. சமீபத்தில் கூட என் மனைவியின் அம்மா தவறிட்டாங்க நான் தான் எல்லா ஏற்பாட்டையும் பண்ணுனேன். மறுநாள் கூட என் மனைவி எனக்கு நன்றி சொல்லி ஒரு மெசேஜ் அனுப்புனாங்க. இன்னைக்கு எங்க ரெண்டு பேருக்கும் மனசு வருத்தமே தவிர, முன்னாடி இருந்த மரியாதை அன்பு எல்லாம் அப்படியேதான் இருக்கு. அதில் எந்த மாற்றமும் இல்லை.

சீதா அனுப்பிய மெசேஜ்

இதனால் தான் இந்த காதல் எல்லாம் வந்து போயிட்டே இருக்குமே தவிர இந்த மனைவி என்கிற அந்தஸ்தை அவங்களை தவிர நான் யாருக்குமே இதுவரைக்கும் கொடுக்கல என்று அந்த பேட்டியில் பார்த்திபன் பேசி இருக்கிறார். அதுபோல இதற்கு முன்பு சில மாதங்களுக்கு முன்பு பேசிய ஒரு பேட்டியில், எனக்கு இப்போ இருக்கிற மெச்சூரிட்டி கல்யாணம் ஆன புதிதில் இருந்திருந்தால், என்னுடைய வாழ்க்கை பாதியில் முடிந்து இருக்காது.

பார்த்திபன் வருத்தம்

என்னுடைய மனைவி மீண்டும் நடிக்க போறேன் என்று சொன்னபோது தாராளமா போயிட்டு வாம்மா உனக்கு நான் சப்போர்ட் பண்ணுறேன் என்று சொல்லி இருப்பேன். ஆனால் அப்போது குடும்ப சூழ்நிலை, குழந்தைகள் பார்க்க வேண்டும் என்று நான் வித்தியாசமாக யோசித்து விட்டேன். அதனால் தான் எங்களுக்குள் பிரிவு வந்தது.

Parthiban Seetha

மகள் கோபம்

பிரிவுக்குப் பிறகு அவர் எந்த இடத்திலும் என்னை குறை சொல்லியது கிடையாது. நானும் அவங்களை குறை சொல்லிக்கிறது கிடையாது. ஆனாலும் சிலர் ஏதேதோ எழுதி விடுகிறார்கள் அதனால் என்னுடைய மகள் என்னிடம் கோபப்பட்டாள் நீங்க அம்மாவை பற்றி என்ன சொன்னீங்க என்று சொன்னார்.

குறையாத அன்பு

நான் எந்த இடத்திலும் அவங்களை தப்பா சொல்லவே இல்ல. கணவன் மனைவி யாராக இருந்தாலும் சரி அவர்களுக்குள் புரிதலும் அடுத்தவங்களை முன்னேற்றி பார்க்க வேண்டும் என்ற சிந்தனையும் இருக்க வேண்டும் என்று அந்த பேட்டியில் பார்த்திபன் பேசி இருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+