பாக்கியலட்சுமி டீமிற்கு கதையே மறந்து போனதா? அதனால் தான் இப்படி ஒரு சொதப்பலா? இதை கவனிச்சீங்களா?
பாக்கியலட்சுமி சீரியலில் நடிகர் பசுபதி அறிமுகமாகி இருக்கும் நிலையில் பல்வேறு சொதப்பல்களை ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
சென்னை: விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் இரண்டாம் தேதிக்கான எபிசோட் வெளியாகி இருக்கிறது.
அதில் நடிகர் பசுபதி பழனிச்சாமியாக அறிமுகமாகி இருக்கிறார்.
ஏற்கனவே நடிகர் பசுபதி இந்த சீரியலில் பாக்யாவின் கம்பெனியை திறந்து வைத்தவர் தான். மீண்டும் இந்த சீரியலில் வேறு பெயரில் நடிக்கிறார்.

பெண்ணின் போராட்டம்
விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். குறிப்பாக இந்த சீரியலுக்கு பெண்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. காரணம் ஒரு குடும்பத்து பெண் தன்னுடைய கௌரவத்தையும் சுய மரியாதையையும் காப்பாற்றிக் கொள்வதற்காக எடுக்கும் முயற்சிகளை பற்றியதாக இந்த சீரியல் இருந்து வருகிறது. தன்னுடைய கணவர் தன்னை வேண்டாம் என்று விட்டு விலகி சென்றாலும் சமுதாயத்திலும், தன்னுடைய சொந்த வீட்டிலும் பல பிரச்சனைகளை சந்தித்து முன்னேறி வரும் கேரக்டராக பாக்யா இருந்து வருகிறார்.

பிரச்சனைகளுக்கு பஞ்சமில்லை
பாக்கியலட்சுமி சீரியலுக்கு கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதன் காரணமாகத்தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முதல் இடத்தை இந்த சீரியல் பிடித்திருக்கிறது. தொடர்ந்து இந்த சீரியலில் பல்வேறு திருப்பங்கள் நடந்து கொண்டே வருகிறது. பிரச்சனைக்கு பஞ்சம் இல்லாமல் இந்த சீரியலில் வரா வாரம் ஒரு பிரச்சனை தொடங்கி கொண்டிருந்தாலும் அதில் பாக்யா கடைசியில் வெற்றி பெறுவது தான் ரசிகர்கள பாராட்டுவதாக இருக்கிறது.

அடுத்த பிரச்சனை ரெடி
இந்த நிலையில் தற்போது எழில் மற்றும் அமிர்தாவின் திருமணம் பலருடைய எதிர்ப்பையும் மீதி பாக்கியா நடத்தி வைத்திருந்தார். இந்த நிலையில் அடுத்ததாக இனியாவிற்க்கு தற்போது டியூஷனில் புதியதாக காதல் டிராக் தொடங்கி இருக்கிறது. இனி என்ன மாதிரி சீரியல் போகப் போகிறதோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த சீரியலில் ராதிகாவின் ஆபீஸில் மீண்டும் கேட்டரிங் ஆர்டர் பாக்யாவிற்க்கே கிடைத்திருக்கிறது. இதைக் கெடுப்பதற்காக எவ்வளவோ ராதிகா முயற்சி செய்தாலும் கடைசியில் பாக்கியா வெற்றி பெற்று இருக்கிறார்.

மீண்டும் பழனி சாமியாக
இந்த நிலையில் இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் இருந்து நடிகர் பசுபதி அறிமுகம் ஆகிறார். இதுதான் தற்போது அதிகமான ரசிகர்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது. பாக்கியா உடைய நிறுவனத்தை தொடங்கி வைத்தது பசுபதி மற்றும் அவருடைய மனைவி பிரியா ராமன் தான். இந்த சீரியலில் பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் பசுபதி புதிய கேரக்டரில் அறிமுகம் ஆகிறார். நடிகர் பசுபதி பழனிச்சாமி என்கிற கேரக்டரில் இந்த சீரியலில் மீண்டும் அறிமுகமாகி இருப்பதால் ரசிகர்கள் இதை கலாய்த்து வருகின்றனர். ஏற்கனவே கணவன் மனைவியாக வந்த அதே நடிகர் மீண்டும் பழனிச்சாமியாக வந்திருக்கிறார். இந்த சீரியலின் கதையே சீரியல் டீமிற்கு மறந்து விட்டதா? அல்லது ரசிகர்கள் எல்லாத்தையும் மறந்து விடுவார்கள் என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்களா? என்று தெரியவில்லையே என ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications